அத்திப்பழ அல்வா!

06-11-2019 04:09 PM

தேவையான பொருட்கள்:

அத்திப்பழ துண்டு - 20

முந்திரி - 20

பாதாம், பிஸ்தா - 10

சர்க்கரை - 1 கப்

நெய் - 5 மேஜைகரண்டி

ஏலப் பொடி, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

முந்திரி, தோல் நீக்கிய பிஸ்தா, அத்திப் பழத் துண்டுகளை, தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். ஊறிய பின், விழுதாக அரைக்கவும்.

கடாயில் நெய் ஊற்றி, அரைத்த விழுதை சேர்க்கவும். இந்த கலவையை, 10 நிமிடங்கள் நன்றாக கிளறவும். பின், அடுப்பை மெலிதாக எரியவிட்டு, சர்க்கரை சேர்க்கவும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, அல்வா பதம் வந்ததும் இறக்கவும். சுவையான, சத்துமிக்க, 'அத்திப்பழ அல்வா' தயார்.

எக்காலத்துக்கும் ஏற்றது. சிறுவர், சிறுமியருக்கு மாலை சிற்றுண்டியாக கொடுக்கலாம். விரும்பி சுவைப்பர்.

–- பிரேமா கார்த்திகேயன், சென்னை.Trending Now: