எந்த எண்ணெய் ‘நல்ல’ எண்ணெய்! – குட்டிக்கண்ணன்

06-11-2019 03:29 PM

இந்­தி­யா­வி­லேயே தமி­ழ­கத்­தில்­தான் உண­வுப் பொருட்­க­ளில் அதி­கக் கலப்­ப­டம் நடை­பெ­று­கி­றது. ஆகவே, கலப்­ப­டம் இல்­லாத உண­வுப் பொருள்­களே இல்லை என்­ப­து­தான் இன்­றைய நிலை. குறிப்­பாக, எண்­ணெய். சமீ­பத்­தில் மதுரை கீழ­மா­சி­வீதி மார்க்­கெட்­டி­லுள்ள 23 கடை­க­ளில் நல்­லெண்­ணெய், கட­லெண்­ணெய் மாதி­ரி­களை சோத­னைக்கு எடுத்­த­னர் உண­வுப் பாது­காப்பு அலு­வ­லர்­கள். அந்த 63 மாதி­ரி­களை சென்­னை­யி­லுள்ள அரசு ஆய்­வுக்­கூ­டத்­தில் சோதனை செய்­த­தில், 61-ல் கலப்­ப­டம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரிய வந்­துள்­ளது. 23 கடை­க­ளில் ஒரே­யொரு கடைக்­கா­ரர் மட்­டுமே கலப்­ப­டம் இல்­லாத எண்­ணெயை விற்­றுள்­ளார். இதோடு, சமீ­பத்­தில் கோவை­யில் கலப்­பட எண்­ணெய் தயா­ரிக்­கும் ஆலை­யைக் கண்டு பிடித்­தார்­கள். இப்­ப­டிச் செய்­தி­க­ளில் வந்த மதுரை, கோவை­யில் மட்­டு­மல்ல தமி­ழ­கம் முழுக்­கவே கலப்­பட எண்­ணெய்­தான் விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கி­றது.

‘`தமி­ழ­கத்­தில் விற்­ப­னை­யா­கும் பிர­பல நிறு­வ­னங்­க­ளின் எண்­ணெய் முதல் லோக்­கல் எண்­ணெய்­வரை பல­வற்­றி­லும் கலப்­ப­டம் உள்­ளது. அண்­மைக்­கா­ல­மா­கப் பிர­ப­ல­மா­கி­வ­ரும் செக்கு எண்­ணெ­யி­லும் கலப்­ப­டம் செய்­கி­றார்­கள்’’ என்று அதிர்ச்­சித் தக­வ­லோடு ஆரம்­பிக்­கி­றார் உண­வுப்­பொ­ருள் விற்­பனை பிர­தி­நிதி ஒரு­வர்.

“மலே­சியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து எண்­ணெய் நிறு­வ­னங்­கள் குறைந்த விலைக்கு பாமா­யிலை இறக்­கு­மதி செய்து, சமை­யல் எண்­ணெய்­க­ளு­டன் கலந்து விற்­கின்­றன. நுகர்­வோர் வேண்­டு­மா­னால் குறிப்­பிட்ட பிராண்டு பெய­ரைச்­சொல்லி கடை­க­ளில் கேட்டு வாங்­க­லாம். ஆனால், எல்லா பிராண்­டு­க­ளும் ஒரே மாதி­ரி­யா­ன­வை­தாம். நிறத்­தைக் கொஞ்­சம் மாற்­றி­வி­டு­வார்­கள் அவ்­வ­ள­வு­தான்.

நம்­மூ­ரி­லுள்ள ஆயில் மில்­க­ளி­லும் தர­மான முறை­யிலோ, வேதிப்­பொ­ருள் கலக்­கா­மலோ எண்­ணெய் உற்­பத்தி செய்­யப் படு­வ­தில்லை. அதிக லாப­நோக்­கில்­தான் தயார் செய்­கி­றார்­கள். குறிப்­பாக நல்­லெண்­ணெய் தயார் செய்­யும்­போது எள்­ளு­டன் கருப்­பட்­டி­யைக் கலக்க வேண்­டும். கருப்­பட்டி விலை அதி­கம் என்­ப­தால் மொலா­சஸ்­ஸை­யும் சில ரசா­ய­னப் பொருள்­க­ளை­யும் கலந்தே தயா­ரிக்­கி­றார்­கள். எல்லா ஆயில் மில்­க­ளி­லும் உண­வுக் கட்­டுப்­பாட்டு அலு­வ­லர்­கள் நின்று கண்­கா­ணிக்க முடி­யாது. எண்­ணெய் நிறு­வ­னங்­களை நடத்­தும் முத­லா­ளி­க­ளுக்­குத்­தான் மன­சாட்சி வேண்­டும்’’ என்­கி­றார் அவர்.

எண்­ணெய் கலப்­ப­டத்தை பற்றி இந்­திய நுகர்­வோர் பாது­காப்பு அமைப்­பின் துணை தலை­வர் கிருஷ்­ண­னி­டம் பேசி­னோம். ‘` தமி­ழக முழு­வ­தும் எண்­ணெய்க் கடை­க­ளில் சோதனை செய்து மாதி­ரி­களை ஆய்­வுக்கு அனுப்­பி­ய­தில் 98 சத­வீத அள­வுக்­குக் கலப்­பட எண்­ணெ­யையே விற்­பனை செய்­கி­றார்­கள் என்­பது தெரிய வரு­கி­றது. பாமா­யில் லிட்­டர் 25 ரூபாய். அதை கடலை எண்­ணெய், நல்­லெண்­ணெ­யு­டன் கலந்து, மூன்று, நான்கு மடங்கு கூடு­தல் விலைக்கு விற்­பனை செய்­கி­றார்­கள். பாக்­கெட்­டு­க­ளில் அடைத்­து­வ­ரும் பிர­பல நிறு­வ­னங்­க­ளின் எண்­ணெய்­க­ளும் அப்­ப­டித்­தான் உள்­ளன. இது நம்­பிக்­கைத் துரோ­கம். காலம்­கா­ல­மாக தங்­கள் கடை­யில் பொருள்­கள் வாங்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் கூடு­தல் லாபத்­துக்­காக ஏமாற்­று­கி­றார்­கள். பெரு நிறு­வ­னங்­கள், சிறு நிறு­வ­னங்­கள், மரச்­செக்கு எண்­ணெய் என்று விளம்­ப­ரப்­ப­டுத்­து­ப­வர்­கள் எனப் பல­ரும் இதில் விதி­வி­லக்­கல்ல. நீங்­கள் வாங்­கும் சமை­யல் எண்­ணெ­யின் தரம் பற்றி அறி­வ­து­டன், எண்­ணெய் பாக்­கெட்­டு­க­ளில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கும் வாச­கங்­க­ளை­யும் கவ­னிக்க வேண்­டும்’’ என்று அறி­வு­றுத்­தி­னார்.


தமி­ழக எண்­ணெய் மற்­றும் எண்­ணெய் வித்து வியா­பா­ரி­கள் சங்க முன்­னாள் செய­லா­ளர் ஒரு­வ­ரி­டம் பேசி­ய­போது அவர் கூறு­வதோ வேறு­வி­த­மாக இருக்­கி­றது. “எண்­ணெ­யில் கலப்­ப­டம் செய்­கி­றார்­கள் என்று கூறு­வது தவறு. தரத்­தைக் குறைக்­கி­றார்­கள் என்று வேண்­டு­மா­னால் சொல்­ல­லாம். கலப்­ப­டம் என்­றால், அரசு அனு­ம­திக்­காத, இறக்­கு­மதி செய்ய தடை விதித்­தி­ருக்­கிற, உட­லுக்­குக் கேடு விளை­விக்­கிற பொருள்­களை கலந்து விற்­பனை செய்­வது. ஆனால், பாமா­யில், சூரி­ய­காந்தி எண்­ணெய், சோயா எண்­ணெ­யு­டன் கடலை எண்­ணெய், நல்­லெண்­ணெ­யைக் கலந்து விற்­ப­தை­யும், அதன் விவ­ரத்தை லேபி­ளில் தெரி­யப்­ப­டுத்­து­வ­தை­யும் எப்­படி கலப்­ப­டம் என்று சொல்ல முடி­யும்? பிர­பல நிறு­வன காபி­யில் `70 சத­வி­கி­தம் காபி, 30 சத­வி­கி­தம் சிக்­கரி’ என்று கலந்­து­தான் விற்­பனை செய்­கி­றார்­கள். ‘சிக்­க­ரி­யின் படத்­தை­யும் பாக்­கெட்­டில் அச்­சிட வேண்­டும்’ என்று தொட­ரப்­பட்ட வழக்­கில், ‘அது தேவை­யில்லை; அதை பாக்­கெட்­டில் எழுத்­தில் குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்­கள்’ என்று அவ்­வ­ழக்கு தள்­ளு­ப­டி­யா­னது. அது­போ­ல­தான் சமை­யல் எண்­ணெ­யில் பாமா­யில், சோயா போன்ற எண்­ணெய்­கள் குறிப்­பிட்ட அளவு கலக்­கப்­ப­டு­கின்­றன.

சமை­யல் எண்­ணெயை அனைத்­துப் பொரு­ளா­தார நிலை­யில் உள்ள மக்­க­ளும் வாங்­கும் வகை­யில், குறிப்­பிட்ட எண்­ணெ­யு­டன் பாமா­யில் அல்­லது சோயா எண்­ணெய் கலக்­கப்­பட்டு, அதற்­கேற்ற விலை­யில் விற்­கப்­ப­டு­கி­றது. பாமா­யில் என்­பது மக்­கள் உட்­கொள்­ளக்­கூ­டாத எண்­ணெய் என்று யாரா­வது சொல்­வார்­களா? அரசே பொது விநி­யோ­கத் திட்­டத்­தில் அதைத்­தானே விற்­பனை செய்­கி­றது.

நம் நாட்டை பொறுத்­த­வ­ரை­யில் பாமா­யில் இல்­லா­மல் சமை­யல் எண்­ணெயை விற்­பனை செய்ய முடி­யாது என்­ப­து­தான் நிதர்­ச­னம். கார­ணம் நம் நாட்­டில் எள், நிலக்­க­டலை போன்­ற­வற்­றின் விவ­சாய உற்­பத்தி குறைந்து சூடான், எத்­தி­யோப்­பியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்தே அவற்றை இறக்­கு­மதி செய்­கி­றோம்.

நம் நாட்­டில் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கிற சமை­யல் எண்­ணெ­யில் இரண்டு சத­வி­கி­தம் ஆலிவ் எண்­ணெய், இரண்டு சத­வி­கி­தம் சோயா எண்­ணெய் மற்ற அனைத்­தும் பாமா­யில்­தான். இதற்­காக அர­சுக்கு ஆண்­டு­தோ­றும் 30,000 கோடி ரூபாய் வரி செலுத்­து­றோம். பாமா­யில் இறக்­கு­மதி இல்­லை­யென்­றால் நம் நாட்­டில் சாதா­ரண மக்­கள் எண்­ணெய்க்­கான விலை­யைக்­கொ­டுத்து வாங்க முடி­யாது. கார­ணம், ஒரு லிட்­டர் எண்­ணெய் விலை ஆயி­ரத்­தைத் தாண்­டி­வி­டும்.

‘உண­வுக்­க­லப்­பட தடை சட்­டம்-1957’க்கு மாற்­றாக, 2011-ல் உண­வுப் பாது­காப்­புத் தரச் சட்­டம் நடை­மு­றைக்­குக்­கொண்டு வரப்­பட்­டது. இதில் கலப்­ப­டம் எனக் குறிப்­பி­டா­மல், பாது­காப்­பற்ற, தர­மற்ற உண­வுப்­பொ­ருள்­கள் என்­று­தான் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதன்­ப­டியே உண­வுப் பாது­காப்பு அதி­கா­ரி­கள் கண்­கா­ணித்து ஆய்வு செய்­கி­றார்­கள். ‘அக்­மார்க்’ லைசென்ஸ் வாங்­கிய சில எண்­ணெய்த் தயா­ரிப்­பா­ளர்­கள், குறிப்­பிட்ட அளவை மீறி கட்­டுப்­பா­டில்­லா­மல் எண்­ணெய் வகை­யு­டன்

பாமா­யி­லைக் கலப்­ப­தைத்­தான் இவர்­கள் ஆய்­வு­செய்து கண்­ட­றிந்­தி­ருக்­கி­றார்­கள். மீண்­டும் சொல்­கி­றேன், இது கலப்­ப­டம் அல்ல; தரக்­கு­றைவு. ‘கலப்­பட எண்­ணெ­யைப் பிடித்­தோம்’ என்று அதி­கா­ரி­கள் சொல்­வது ஒட்­டு­மொத்த எண்­ணெய் வியா­பா­ரத்­தி­லும் தொய்வை ஏற்­ப­டுத்­தி­வி­டும்.

இன்று மார்க்­கெட்­டில் பிராண்டு எண்­ணெய் வகை­கள் விற்­கும் விலைக்கு எல்­லோ­ரா­லும் வாங்­கிப் பயன்­ப­டுத்த முடி­யாது. அவை லிட்­டர் 150 முதல் 200 ரூபாய் வரை விற்­கின்­றன. அதே நேரம் பாமா­யில் கலந்த எண்­ணெய் 100 ரூபாய்க்­குள் கிடைக்­கி­றது. 100 கிலோ எள்­ளு­டன் 20 கிலோ மொலா­சஸ் கலந்து ஆட்­டி­னால் 35 கிலோ நல்­லெண்­ணெய் கிடைக்­கும். எள்­ளுப் பிண்­ணாக்கு கிலோ 20 ரூபாய்க்கு போகும். இது­போ­லத்­தான் கடலை எண்­ணெய் தயா­ரிப்­பும். `எடி­பில் வெஜி­ட­பிள் ஆயில்’ என்­று­தான் விற்­பனை செய்­கி­றார்­கள். இதில் உடல்­ந­லத்­துக்கு எந்­தக் கேடும் இல்லை’’ என்­றார்.

சமை­யல் எண்­ணெ­யில் கலப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டும் பாமா­யில், சோயா எண்­ணெ­யின் தன்மை என்ன? அவற்­றால்

ஆரோக்­கி­யத்­துக்­குக்

கேடு ஏற்­ப­டுமா? என பொது மருத்­துவர்

ஆலோ­ச­கர் சோ ம­சுந்­த­ரி­டம்

கேட்­டோம்.

‘`உணவை ருசி­யா­கச் சாப்­பிட எண்­ணெயை சேர்த்­துக்­கொள்ள மக்­க­ளி­டம் தொடங்­கிய பழக்­கம் ஓர் அள­வோடு நின்­றி­ருந்­தால் எந்­தப் பிரச்­னை­யும் இல்லை. அள­வுக்கு மீறும்­போது அமிர்­த­மும் நஞ்­சா­கி­வி­டு­கி­றது. நம் உட­லுக்கு எண்­ணெய் அவ­சி­யம்­தான். மூளை, நரம்­பு­க­ளுக்கு தேங்­காய், நெய், எண்­ணெய்­கள் மூலம் கிடைக்­கும் நல்ல கொழுப்பு தேவை­யாக உள்­ளது. ஆனால், அது ஓர் அள­வுக்­குத்­தான், எண்­ணெ­யில் கலப்­ப­டம் செய்­யும் போது நல்ல கொழுப்பு கிடைக்­காது. கலப்­பட எண்­ணெ­யைத் தொடர்ந்து உட்­கொண்­டால் அதை உடல் ஏற்­றுக்­கொள்­ளா­மல் முத­லில் வாந்தி ஏற்­ப­டும். பிறகு வயிற்­றில் வலி ஏற்­பட்டு ஜீரண உறுப்­பு­கள் பாதிக்­கப்­ப­டும். பேதி­யா­கும். உட­லின் முக்­கிய உறுப்­பான கணை­யம் மிக­வும் பாதிக்­கப்­ப­டும். கலப்­ப­ட­மில்­லாத சுத்­த­மான எண்­ணெ­யையே அதி­கம் உப­யோ­கித்­தால் உட­லுக்­குக் கேடு உண்­டாக்­கும் என்று சொல்­கி­றோம். எனில், கலப்­பட எண்­ணெ­யால் எவ்­வ­ளவு பாதிப்பு ஏற்­ப­டும் என்­ப­தைச் சொல்ல வேண்­டி­ய­தில்லை. எண்­ணெ­யின் தரத்­தைச் சோதிக்க ஒரு வழி­யைப் பின்­பற்­ற­லாம். நார்­மல் டெம்ப்­ரேச்­ச­ரில் எண்­ணெய் உறை­யக் கூடாது. அப்­படி உறை­கிற எண்­ணெய் உட­லுக்கு ஆபத்தை உண்­டாக்­கும்.

சமை­ய­லுக்கு ஒரே எண்­ணெ­யைப் பயன்­ப­டுத்­தா­மல், கடலை எண்­ணெய், நல்­லெண்­ணெய் என்று மாற்றி மாற்­றிப் பயன்­ப­டுத்த வேண்­டும். அதே நேரம், எண்­ணெயை அள­வோடு உப­யோ­கிக்க வேண்­டி­ய­தும் மிக அவ­சி­யம்’’ என்­கி­றார்.Trending Now: