நிலைமை மாறி போச்சு! – சித்து

05-11-2019 04:58 PM

“ஒரு சின்ன விஷயம் பண்ணாலும், அதிலே நூறு சதவீதம் பெர்பெக்க்ஷன் பார்ப்பேன். ஒருத்தர் கூட நம்மள குறை சொல்லிட கூடாதுன்னு ரொம்ப ரொம்ப கவனமா இருப்பேன். அதுக்கப்புறம்தான் அடுத்த கட்டத்துக்கு போவேன்!” என்று படுசீரியசாக சொல்கிறார் “திருமணம்” ஹீரோ சித்து.

அவருடைய பேட்டி:-

“நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நடிகர் சீரியல்ல நடிச்சிட்டா, சீரியல்லதான் இருக்கணும், சினிமாவிலே நடிச்சிருந்தா சீரியலுக்கு வரலாம் அப்படீங்கிற நிலைமை இருந்துச்சு. ஆனா, இப்போ நிலைமை மாறி போச்சு.  ‘ரீச்’ மட்டும்தான் முக்கியமான விஷயமா இருக்கு. ஒருத்தர் எந்த அளவுக்கு பிரபலமா இருக்காரு அப்படீங்கிறதை வச்சுத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்குது. அதனால, ‘ரீச்’சை வச்சுத்தான் எல்லாமே!

   எங்க குடும்பத்திலே எல்லாருமே ஸ்கூல் டீச்சர்கள். எனக்கு நேட்டிவ் பிளேஸ், திருவண்ணாமலை. அப்பா இல்லே. எங்கம்மா ரொம்ப ஸ்டிராங்கான உமன். நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். காலேஜிலே படிக்கும்போதே விஜய் டிவியோட ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ ஷோவிலே டான்சரா கலந்துக்கிட்டேன். அப்படியே படிப்படியா விஜய் டிவியோட டான்ஸ் ஷோக்களுக்கு டான்ஸ் மாஸ்டராயிட்டேன். அந்த சமயத்திலே “வல்லினம்” படத்திலே நடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்துச்சு. எனக்கு சின்ன வயசிலேயே ஆக்டிங் ரொம்ப பிடிக்கும். ஸ்கூல்ல டிராமா, டான்ஸ்ல நான்தான் முதல் ஆளா இருப்பேன். ஆனா, டான்சை முறையா கத்துக்கலே. பார்த்து பார்த்து அப்படியே டேலண்ட் வந்திடுச்சு. நடிப்பும் அப்படித்தான். சோஷியல் மீடியாவிலே நான் ரொம்ப பேமஸ். டப்மேஷ் வந்த புதுசுல எல்லாம் ஆறேழு சீனை ஒரே டேக்ல பண்ணியிருக்கேன். சினிமாவுக்கு போவோம், அதுக்கு போவோம், இதுக்கு போவோம் அப்படியெல்லாம் நான் திட்டம் போட்டது கிடையாது. ஏன்னா, எனக்கு எந்தவிதமான சினிமா பின்னணியும் கிடையாது. அதனால, நமக்கு என்ன வாய்ப்பு வருதோ, அதை விடக்கூடாதுங்கிறதிலே விடாப்பிடியா இருக்கேன். கடவுள் பண்றபடி நாம போய்க்கிட்டே இருக்கணும். நம்ம நேரத்துக்கு தகுந்தபடி நமக்கு வாய்ப்புகள் கிடைக்கும். கலர்ஸ் தமிழ்ல சினிமா மாதிரி சீரியல்களை பண்றாங்க. இப்போ ஜனங்ககிட்ட ரொம்ப ரொம்ப ‘ரீச்’சாகிறது சின்னத்திரைதான். “திருமணம்” சீரியல்ல பெரிய சினிமா டீமே இருக்கு.

   இந்த சீரியல்ல என் கேரக்டர் எப்படீன்னா... ஒரு பொண்ணை காதலிச்சிருப்பேன். குடும்ப பிரச்னை காரணமாகவும், எனக்கு இஷ்டமில்லாமலும் இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவேன். நான் காதலிச்ச பொண்ணை மறுபடியும் மீட் பண்றேனா, மனைவியோடு சேர்ந்து வாழ்றேனா இல்லையா, காதலிச்ச பொண்ணோட நிலைமை என்னாச்சுங்கிறதுதான் சப்ஜெக்ட்.

   சினிமா, சீரியல்ன்னு நான் தனியா பிரிச்சு பார்க்கிறது கிடையாது. தமிழ் படவுலகிலே நிச்சயமா ஒரு இடத்தை பிடிப்பேன். “வல்லினம்,” “மதுரை வீரன்,”  ”ஒத்தைக்கு ஒத்தை,” “கமர்கட்டு,” கதாநாயகனா “அகோரி” இந்த படங்கள்ல எல்லாம் நடிச்சிருக்கேன்.”Trending Now: