நியூஸ் 7 தமிழின் ‘தமிழ் ரத்னா’ விருது!

05-11-2019 04:56 PM

கலை, இலக்கியம், நாடகம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழர்களை கவுரவிக்கும் விதமாக நியூஸ் 7 தமிழ் சார்பில் ‘தமிழ் ரத்னா’ விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. ‘தமிழ் ரத்னா’ 2019 விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விழாவுக்கு தலைமையேற்று சாதனை தமிழர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்வில் சென்னை ஐகோர்ட் நீதியரசர்கள் கிருபாகரன், சுரேஷ்குமார், தமிழக அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பலரும் பங்கேற்றனர்.

தமிழ் ரத்னா 2019 விருது வழங்கும் நிகழ்ச்சி, நியூஸ் 7 தமிழில் அண்மையில் ஒளிபரப்பானது.

 விருது பெற்றவர்கள் பின்வருமாறு:–

கட்டக்கூத்து ராஜகோபால் (கலை ரத்னா),  தொ. பரமசிவன் (இலக்கிய ரத்னா), பிரளயன் (நாடக ரத்னா), த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் (இசை ரத்னா), சதீஷ் சிவலிங்கம் (விளையாட்டு ரத்னா), ரவீந்திர குமார் (சேவை ரத்னா), கோவிந்த பகவான் (ஆசிரியர் ரத்னா), சிபி செல்வன் (தொழில் ரத்னா), பாரதி பாஸ்கர் (மகளிர் ரத்னா), விழியன் (யுவரத்னா), நளீனா பிரஷீதா (சக்தி ரத்னா),  கிரேசி மோகன் (சிறப்பு விருது), முத்தாலங்குறிச்சி காமராசு (சிறப்பு விருது), எம்.எஸ். சுவாமிநாதன் (தமிழ் ரத்னா).Trending Now: