குடும்ப உறவு காக்கி சட்டை போராட்டம்!

05-11-2019 04:54 PM

குடும்ப உறவுக்கும், காக்கி சட்டைக்குமிடையேயான போராட்டத்தை எடுத்துச் சொல்லும் ‘பூவே செம்பூவே’ கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஒரு சராசரி தமிழ் குடும்பத்தை பின்புலமாக கொண்டு அமைக்கப்பட்ட களத்தில், பணியிலிருக்கும் குடும்ப பெண்கள் சந்திக்கும் முரண்பாடுகளை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை நகர்கிறது.  திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண், தன் கடமையை செவ்வனே செய்து, தனது குடும்ப மானத்தையும் எப்படி காப்பாற்றுகிறாள் என்பதை பல்வேறு எதிர்பாராத திருப்பங்களோடு சொல்லப்படுகிறது. தன் கணவன் மீதான காதலுக்கிடையே, கடமையை ஆற்ற பாடுபடும் பத்ரா, உமா மகேஸ்வரியால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறாள்? தனது கணவனின் அன்பையும் குடும்பத்தினரின் மனதையும் எப்படி வெல்கிறாள்? அதன் பின்ன ணியில் என்ன நடக்கிறது?

இளம் போலீஸ் அதிகாரி கதாநாயகி பத்ராவாக மவுனிகா, அவரு டைய ‘வில்லி’ அண்ணி உமா மகேஸ்வரியாக ஷமிதா மற்றும் பலரும் நடிக்கின்ற னர்.

ஸ்ரீ பாலாஜி டைரக்க்ஷன் பொறுப்பை ஏற்றுள்ளார்.Trending Now: