தெரிஞ்சுக்குவோமே!

04-11-2019 03:54 PM


1. திருமந்திரம் பாடிய திருமூலரின் குருபூஜை நாள்............

    ஐப்பசி அசுவினி நட்சத்திரம்.

2. ஐப்பசியில் காவிரியாற்றில் நீராடுவதை ..... எனச் சொல்வர்.

    துலா ஸ்நானம்.

3. ஞானசம்பந்தரின் திருநீறால் முதுகின் கூன் நீங்கியவர்................

    கூன்பாண்டியன்.

4. கூன்பாண்டியன் சிவனடியராக மாறியதால் ஏற்பட்ட பெயர்..........

    நின்றசீர் நெடுமாறர்.

5. ஆறுகால பூஜையில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் நேரம்.........

    உச்சிக்காலம்.

6. அன்னாபிஷேகம் தரிசிப்போருக்கு .......... உண்டாகும்

    பிறப்பற்ற நிலை (மோட்சம்).

7. சோறு கண்ட இடம் .......... என்றொரு பழமொழி உண்டு

    சொர்க்கம்.

8. அன்னம் ........... சொரூபம் என்று வேதம் குறிப்பிடுகிறது.

    பரபிரம்ம (கடவுள்).

9. திருவையாறுக்கு அருகிலுள்ள திருச்சோற்றுத்துறையில் அருளும் சிவன் ....

    தொலையாச் செல்வநாதர்.

10. பாண்டிய நாடான மதுரையில் சோற்றுக்குள்ளே இருக்காரு .......சுவாமி என்பர்.

    சொக்கநாதர்.Trending Now: