கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 203

04-11-2019 03:04 PM

வில்லன் ஜெமினி கணேஷ், வில்லி பத்மினி

‘கணே­சன்’ என்­றால் ‘சிவாஜி’ கணே­சன் என்ற அள­வில் தமிழ் சினி­மா­வின் ஒரு புதிய அத்­தி­யா­யம் தொடங்­கிய கட்­டத்­தில், ‘கே.பி.சுந்­த­ராம்­பாள் நடித்த அவ்­வை­யார்’ (1953) படத்­தில், கணே­சன் என்று மட்­டும் ‘ஜெமினி’ கணே­சன் குறிக்­கப்­பட்­டார்!

ஆனால் ‘ஜெமினி’ கணே­ச­னின் முதல் பட­மான ‘மிஸ் மாலி­னி’­­யில் (1947)  அவ­ருக்­குக் கிடைத்த பெயரை விட இந்த வெறும் கணே­சன் பர­வா­யில்லை. ‘மிஸ் மாலி­னி’­­யில் ‘ஜெமினி’ கணே­ச­னுக்கு உதவி இயக்­கு­நர் பாகம் கிடைத்­த­போது, டைட்­டி­லில் அவர் ‘ஆர்.ஜி.’ (ஆர்.கணே­சன்) என்று மட்­டும் குறிப்­பி­டப்­பட்­டார்!

சாவித்­தி­ரி­யின் ஜோடி­யாக அவர் முத­லில் நடித்த  ‘மனம் போல மாங்­கல்­யம்’ (1953) என்ற படத்­தில்­கூட, அவர் வெறும் ‘ஆர். கணேஷ்’­­தான். இந்த நிலை­யில், இந்த வருங்­கால காதல் மன்­னன், சில படங்­க­ளில் வில்­ல­னா­க­வும் சித்­த­ரிக்­கப்­பட்­டார்.

‘நடிக்க விட­மாட்­டேன் என்­கி­றார்­களே’ என்ற விரக்­தி­யில், வழி­காட்­டி­யும் குரு­நா­த­ரு­மான கேமிரா மேதை கே. ராம்­நாத்­தி­டம் தீன­மாக அவர் நின்ற போது, ராம்­நாத்­தின் சிபா­ரி­சு­டன் ‘தாய் உள்­ளம்’ (1952) படத்­தில் கிடைத்த வேடம், வில்­லன் வேடம்­தான். நிரந்­தர வில்­ல­னாக பின்­னா­ளில் வலம் வந்த ஆர்.எஸ்.மனோ­கர், ‘தாய் உள்­ளம்’ படத்­தின் கதா­நா­ய­கன்!

ஜெமினி ஸ்தாப­னம் எடுத்த  ‘மூன்று பிள்­ளை­கள்’ படத்­தில் ‘ஆர்.கணேஷ்’ என்று குறிப்­பி­டப்­பட்ட ஜெமினி கணே­சன்,  பெண்­டாட்­டியே கதி என்று அவ­ளு­டன் மும்பை சென்று வசிக்­கிற இரண்­டா­வது மகன். தாய் அவ­னைத் தேடிச் செல்­லும் போது,  மரு­ம­க­ளின் வசவு மொழி­களை சந்­திக்க வேண்டி வரு­கி­றது. மகன் முது­கெ­லும்­பில்­லா­மல் இருந்­தால், கையில் சாட்­டை­யோ­டு­தானே மரு­ம­கள் காட்சி தரு­வாள்!

தற்­கா­லத்­தில், ‘நடி­கை­யர் தில­கம்’ சாவித்­தி­ரி­யின் ‘பயோ­பிக்’­­கான ‘மகா­ந­டி’­­யில், அந்த அபா­ர­மான நடி­கை­யின் வாழ்க்கை சரிந்து அத­ள­பா­தா­ளத்­திற்கு செல்­லும் வகை­யில் அமைந்த மகா­வில்­ல­னாக ஜெமினி கணே­சன் சித்­த­ரிக்­கப்­பட்­டார்!

அட, யாரு­டைய உத­வி­யும் இன்றி, குடம் குட­மா­கக் குடித்­த­தால் அன்றோ அந்த மகா நடிகை சீக்­கி­ர­மாக மாண்­டு­போ­னார் என்ற கேள்­வியை யாரா­வது கேட்­டு­வி­டு­வார்­களோ என்று எண்ணி, சாவித்­தி­ரிக்­குக் குடிக்­கக் கற்­றுத்­தந்­த­வரே காதல் மன்­னன்­தான் என்­றொரு சீன் கூட ‘மகா­ந­டி’­­யில் வைத்­தி­ருந்­தார்­கள்!

இவ்­வ­ள­வும் செய்­யப்­பட்­டது, ஜெமினி கணே­சன்-­­சா­வித்­திரி ஆகி­யோ­ரின் சீமந்த புத்­தி­ரி­யான விஜய சாமுண்­டேஸ்­வ­ரி­யின் ஒத்­து­ழைப்­பு­டன்! அப்­பா­வைத் தப்­பா­கக் காட்ட அவ­ருக்­கென்ன அவ்­வ­ளவு ‘இது’ என்று கேட்­டால் அதற்கு எத்­த­னையோ பதில் தர­லாம் என்­றா­லும், மிகச் சுளு­வான ஒரு பதில் இருந்­தது.

‘மகா­நடி’ முக்­கி­ய­மாக எடுக்­கப்­பட்­டது தெலுங்கு மக்­க­ளுக்­கா­கத்­தான் (ஒரு சைடு பிசி­ன­சாக அதை தமி­ழில் ‘நடி­கை­யர் தில­கம்’ ஆக்­கி­யி­ருந்­தார்­கள்). சாவித்­தி­ரி­யின் சோக­ம­ய­மான சாவுக்கு ஜெமினி கணே­சன் என்ற தமி­ழர்­தான் கார­ணம் என்­பது   கடை­வீதி தெலுங்­கர்­க­ளின் பாம­ரத்­த­ன­மான அபிப்­ரா­யம். இந்த வெகு­ஜன எண்­ணத்தை ஒட்­டித்­தான் படத்­தி­லும் ஜெமினி கணே­சனை வில்­லன் ஆக்­கி­யி­ருந்­தார்­கள்! எப்­ப­டி­யும், மகா­வில்­ல­னாக இந்த வகை­யில் சித்­த­ரிக்­கப்­பட்­ட­வ­ரின் வாழ்­வு­டன்­தான் மகா­ந­டி­யின் வாழ்க்கை ஒரு மாமாங்­கம் பின்­னிப் பிணைந்­தி­ருந்­தது என்­ப­து­தான் நிதர்­ச­ன­மான உண்மை!

தித்­திக்­கும் தேன் என்று முத­லில் அர­வ­ணைப்­பது, பிறகு எட்­டிக்­கா­யாக நினைத்து எட்டி உதைப்­பது, இது ஜெமினி கணே­சன் விஷ­யத்­தில் சாவித்­திரி தனக்­காக எழு­திக்­கொண்ட திரைக்­க­தை­யாக இருந்­தது.

ஆரம்ப காலத்­தில் வில்­ல­னா­கச் சித்­தி­ரிக்­கப்­பட்­ட­தை­யும், செத்­துப் போன பின்பு மகா வில்­லன் பாத்­தி­ரம் கொடுக்­கப்­பட்­ட­தை­யும் தோற்­க­டிக்­கும் வகை­யில்,   ‘ஆசை­ம­கன்’ என்ற படத்­தில் ஒரு அரிய வில்­லத்­த­னத்தை ஜெமினி கணே­சன் காட்­டி­யி­ருக்­கி­றார் என்­பது திரை சரித்­தி­ரத்­தில் மறை­வாக உள்ள ஒரு செய்தி!

‘திரும்­பிப்­பார்’ படத்­தில் சிவாஜி கணே­சன் நடித்­துக் காட்­டிய கய­மைத்­த­னம் நிறைந்த வேடத்­திற்கு எந்த வகை­யி­லும் குறை­வா­னது அல்ல, ஆசை­ம­க­னில் ஜெமினி கணே­சன் ஏற்ற வேடம். ‘திரும்­பிப்­பார்’ வந்த அதே 1953ல்தான்,  ஆசை மக­னும் வந்­தது.  

‘ஆசை மகன்’ என்று தமி­ழி­லும் ‘ஆஷா தீபம்’ என்று மலை­யா­ளத்­தி­லும் இரு மொழித் தயா­ரிப்­பாக இந்­தப் படத்தை எடுத்­த­வர், மலை­யாள சினி­மா­வின்  பிர­பல தயா­ரிப்­பா­ளர், டி.ஈ.வாசு­தே­வன். ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட மலை­யா­ளப் படங்­களை  எடுத்த இந்­தத் தயா­ரிப்­பா­ள­ருக்­குப் பின்­னா­ளில் கேரள சினி­மா­வின் மிக உயர்ந்த விரு­தான ஜே.சி.டேனி­யல் விரு­தும் வழங்­கப்­பட்­டது. வாசு­தே­வ­னின் இரண்­டா­வது பட­மான ஆசை மகனை இயக்­கி­ய­வர், ஜி.ஆர்.ராவ் என்ற தேர்ந்த இயக்­கு­நர்.  சாந்­தா­ரா­மி­டம் பல ஆண்­டு­கள் உத­வி­யா­ள­ராக இருந்து, கலை­ந­யத்­தோடு கதை சொல்­லும் பாணி­களை நன்­றா­கக் கற்­ற­வர் இந்த ராவ் (இவர்­தான் சிவாஜி கணே­சன் நடித்த ‘இல்­லற ஜோதி’யை மாடர்ன் தியேட்­டர்­ஸýக்­காக இயக்­கி­ய­வர்).

‘ஆசை மகன்’ படத்­தில், ஒரு நடன நடி­கைக்கு (பத்­மினி) இழி­வான வேலை செய்­யும் விக்­ர­மன் (டி.எஸ்.பாலையா), பணக்­கார வாலி­பன் சேக­ருக்கு (ஜெமினி கணே­சன்) தூண்­டில் போட்டு அவனை மாட்ட வைக்­கும் காட்­சி­களை, மிக­வும் நாசூக்­காக டைரக்­டர் ராவ் எடுத்­தார். அவ­ருக்கு இந்த விஷ­யத்­தில் துணை நின்­ற­வர்­கள், ஒளிப்­ப­தி­வைக் கவ­னித்த பிர­பல கேமிரா நிபு­ணர்­க­ளான  ஆதி.எம்.இரா­னி­யும் ஏ. கிருஷ்­ண­னும். வச­னங்­கள் எழு­திய நாகர்­கோ­வில் பத்­ம­நா­ப­னும் அமர்க்­க­ளப்­ப­டுத்­தி­விட்­டார். ஆசை­ம­க­னின் மலை­யாள வடி­வ­மான ஆஷா­தீ­பத்­திற்­குத் திரைக்­கதை, வச­னம் எழு­திய பொன்­குன்­னம் வர்­கி­யின் எழுத்­தும் அவ­ருக்கு உத­வி­யாக இருந்­தி­ருக்­கக்­கூ­டும்.

சேக­ரின் செல்­வங்­கள் அனைத்­தை­யும் கப­ளி­க­ரம் செய்­து­விட்ட நிலை­யில், ஜெயந்­தி­யும் அவளை எப்­போது அடை­ய­லாம் என்று காத்­தி­ருக்­கும் விக்­ர­ம­னும் சல்­லா­பித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

விக்­ர­மன் -: ‘‘உன் சிரிப்­பைப் பார்த்தா எனக்கு ஒண்­ணுமே புலப்­ப­டலை’’.

ஜெயந்தி -:  ‘‘போதும் போதும்...ரொம்ப வர்­ணிக்­கா­தீங்க!’’

விக்­ர­மன் :- ‘‘வர்­ணனை இல்லை ஜெயந்தி...என் இத­யத்­தில் பொங்­கும் இன்ப அலை­கள்!’’

ஜெயந்தி -:  (சிரித்­துக்­கொண்டு அவ­னு­டைய இடுப்­பைத் தொட்­ட­வாறு) ‘‘இத­யமா? அது எங்க இருக்கு!’’

விக்­ர­மன் :- (அவள் முன்னே நடக்­கும் போது, பின் பக்­கத்­தி­லி­ருந்து அவ­ளு­டைய கரத்­தைப் பற்­றிய படி) ‘‘வாஸ்­வ­தம் தான்.. அதை என்­னிக்கோ உன்­னி­டத்­திலே நான் பறி­கொ­டுத்­துட்­டேன்!’’

‘உம்’....என்று கூறி­ய­வாறு ஜெயந்தி கட்­டி­லில் அமர்­கி­றாள். அவள் அருகே விக்­ர­மன் அமர்ந்­து­கொள்­கி­றான். அப்­போது அவள், ‘அதோ, சேகர்’ என்­கி­றாள்!

‘ஐயையோ’ என்று ஒரு நொடி பயந்த விக்­ர­மன், சீக்­கி­ரம் சுதா­ரித்­துக்­கொண்டு, ‘இனிமே அவ­னுக்கு இங்கே என்ன வேலை?’ என்­கி­றான்!

ஜெயந்­தியோ, ‘ஆமா,  பேச்­சில மட்­டும் பெரிய புலி’ என்று விக்­ர­மனை கேலி செய்­கி­றாள். (என்­ன­தான் இருந்­தா­லும், அவ­ளுக்கு  ஜெஸ்ட் இழி­வான வேலைப் பார்த்­த­வன்­தானே அவன்).

‘‘சேகர்­கிட்ட எல்­லாத்­தை­யும் சொல்­லி­ட­ற­து­தானே, எதுக்கு இந்த நாட­கம்?’’ என்­கி­றாள் அவள்.

சேக­ரி­டம் வேலை முடிந்­து­விட்ட நிலை­யில், இன்­னும் நான் ஏன் அவ­னி­டம் அன்­பாக இருப்­ப­து­போல் நடிக்­க­வேண்­டும் என்­பது அவள் கேள்வி. ஷாட் முடிந்­த­வு­டன் ‘கட்’ சொல்­லி­விட வேண்­டும், என்­பது அவள் எதிர்­பார்ப்பு.

‘‘உங்­க­ளாலே முடி­ய­லைன்னா, நானே சொல்­லி­ட­றேன்,’’ என்­கி­றாள்!

‘‘இரு, இரு. நாட­கம் முடி­ய­ற­துக்­குள்ளே இன்­னும் ஒரு சீன் பாக்கி இருக்கு. விடி­ய­ற­துக்­குள்ளே அது­வும் முடிஞ்­சு­டும், ’’  என்று பேசும் விக்­ர­மன், ‘‘நீ சொல்­றது வாஸ்­த­வம்­தான். இருந்­தா­லும் நமக்­குள்ளே இருக்­கிற சொந்­தத்தை அவ­னால தெரிஞ்­சுக்க முடி­யுமோ, ’’ என்­கி­றான். ஜெயந்தி -  ‘‘என்ன இருந்­தா­லும் எனக்­கென்­னமோ சேகர் வந்­து­ரு­வா­னோன்னு பய­மாத்­தான் இருக்கு’’.

விக்­ர­மன் -: ‘‘அட நீ ஒண்ணு...அவன் வரட்­டுமே...அவ­னால என்ன செய்ய முடி­யும்...முட்­டாப் பய’’.  

ஜெயந்தி --: ‘‘ஆமா...நீங்க சொல்­றது வாஸ்­வ­தம் தான். காசோ பணமோ இல்­லைன்­னா­லும் கொடுத்­தி­ட­லாம். ஆனா மூளைக்கு எங்­கப் போறது’’.

சொந்த மனைவி வீட்­டில் இருக்க, கண்­ட­வள் பின் திரிந்து உள்­ளதை எல்­லாம் இழந்­த­வனை  மூளை இல்­லா­த­வன் என்று அவள் மதிப்­பிட்­டது சரி­தான். ஆனால், விக்­ர­மன் சொன்ன நாட­கத்­தின் கடைசி காட்­சி­யில், சேகர் அங்கே வந்து, ஜெயந்­தி­யை­யும் விக்­ர­ம­னை­யும் தீர்த்­துக் கட்­டி­வி­டு­கி­றான்!

 ‘சிலப்­ப­தி­கா­ர’த்­தில் திருட்­டுக்­குற்­றம் சுமத்­தப்­பட்டு உயிர் இழக்­கி­றான் கோவ­லன். ஆசை மக­னில் இரண்டு கொலை­க­ளைச் செய்­து­விட்டு சிறை செல்­கி­றான் நாய­கன். இதற்கு முன், தன் வீட்­டி­லேயே இர­வில் திரு­டப்­பு­குந்து,  விழித்­துக்­கொண்ட தந்­தை­யைக் கீழே தள்ளி அவ­ரு­டைய சாவுக்­கும் கார­ண­மா­கி­றான். திரு­ட­னாக வந்­த­வன் தன் மகன்­தான் என்று உணர்ந்த தந்தை (சதா­சிவ முத­லி­யா­ராக பி.ஆர். பந்­துலு), போலீ­சுக்­குப் புகார் கொடுப்­ப­தைத் தவிர்க்­கி­றார்!

ஒரு தொடக்­கக் காட்­சி­யில் இந்த ‘ஆசை மகன்’, ‘தண்ணி அடித்­து­விட்டு’, கட்­டி­லில் குடை சாய்­கி­றான். அந்த நேரம் பார்த்து, அவ­னுக்­குப் பெண் பேச இரு­வர் வாசல் கூடத்­தில் அமர்ந்­தி­ருக்­கி­றார்­கள். இவன் வாந்தி எடுத்­து­விட்டு படுக்­கை­யில் புரண்­டு­கொண்­டி­ருக்­கி­றான்.

கணக்­குப்­பிள்ளை (பிரெண்டு ராம­சாமி) வந்து பார்க்­கி­றார்.  மூக்­கைப் பொத்­திக்­கொண்டு அவர் அடிக்­கும் கமென்ட், ‘‘என்ன நாத்­தம்...தம்பி சாரா­யத்­தை­ யும் கள்­ளை­யும் மிக்ஸ் பண்­ணி­யல்­லவா அடிச்­சி­ருக்கு! ’’ அதற்­குள், பெண் கொடுக்­க­லாம் என்ற எண்­ணத்­து­டன் வந்­த­வர்­கள், மோப்­பம் பிடித்­துக்­கொண்டு உள்ளே வந்து பிள்­ளை­யாண்­

டா­னின் நிலை­மையை அறிந்­த­வு­டன் அதி­வேக கதி­யில் கம்பி நீட்­டு­கி­றார்­கள்.

‘‘அவங்­கப் போயிட்­டாங்க,’’ என்­கி­றார் கணக்­குப் பிள்ளை. ஒரே பிள்ளை என்று இடம் கொடுத்­துக் குட்­டிச்­சு­வர் ஆக்­கிய தாய் (மலை­யாள நடிகை பங்­க­ஜ­வல்லி) , ஈன ஸ்வரத்­தில்...‘ போயிட்­டாங்­களா’, என்­கி­றார்.

இந்­தக் கட்­டத்­தில், ‘போகாமே...? உன் மகன் திரு­வி­ளை­யா­ட­லைப் பாத்­துக்­கிட்­டேவா இருப்­பாங்க?’ என்று தொடங்­கும் பி.ஆர்.பந்­துலு, ஒரு நீண்ட வச­னம் பேசு­கி­றார் பாருங்­கள்....

ஐயோ,  வச­னம் எப்­ப­டிப் பேச­வேண்­டும், எப்­படி நடிக்­க­வேண்­டும் என்­ப­தற்­கான ஒரு அற்­பு­த­மான எடுத்­துக்­காட்டு இந்­தக் காட்சி. மிகையே இல்­லாத நிறை­வான நடிப்பு.

இயல்­பான நடிப்­புப் பாணி­யும் சர­ள­மான காட்­சி­க­ளு­மா­கப் பின்­னப்­பட்ட ‘ஆசை மகன்’ படத்­தில், சத்­யன், கிரிஜா, பி.எஸ்.சரோஜா முக்­கி­ய­மான வேடங்­க­ளில் நடிக்­கி­றார்­கள். சாதா­ரண காட்­சி­க­ளைக்­கூட கண்­ணும் கருத்­து­மாக எடுத்­தி­ருப்­பது தெரி­கி­றது.

‘சாமி’ என்று தமிழ் திரை இசை உல­கில் அனை­வ­ரா­லும் மரி­யா­தை­யு­டன் அழைக்­கப்­பட்ட மலை­யாள  தட்­சி­ணா­மூர்த்­தி­யின் இசை­யில், கவி­ஞர் குயி­லன் ஆசை­ம­க­னுக்கு எழு­திய சில பாடல்­கள் வெற்றி அடைந்­தன. உதா­ர­ணத்­திற்கு, ‘ஓடம் ஏறிச் சென்றே காதல் கனா­விலே’, ‘கிரா­மத்­தின் இத­யம் பேரன்­பின் நிலை­யம்’.  

ஆனால், செப்­டம்­பர் 1953ல் வந்த ‘ஆசை மகன்’, சரி­யான வர­வேற்­பைப் பெற­வில்லை. மேற்­படி ஆண்­டின் படங்­களை, ‘நல்ல படங்­கள்’, ‘சுமா­ரான படங்­கள்’, ‘இத­ரப் படங்­கள்’ என்று தரம் பிரித்த ‘பேசும் படம்’ சினிமா இதழ், ஆசை மகனை ‘இத­ரப் படங்­கள்’ தலைப்­பின் கீழே பட்­டி­ய­லிட்­டது!

இன்­றைய கால­கட்­டத்­தில் பார்க்­கும் போது, ஆசை­ம­க­னில் கவர்ந்­தி­ழுக்­கும் தன்மை கொண்ட  யதார்த்த போக்­கும் நேர்த்­தி­யும் இருப்­பது தெரி­கி­றது.  இன்­றைக்­கும் சில பல வெட்­டுக்­க­ளு­டன் இந்­தப் படம் காணக்­கி­டைப்­பது ஒரு அதி­ச­யம்­தான். இத்­த­னைக்­கும் மலை­யாள  ‘ஆஷா தீபம்’ இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை!  


(தொட­ரும்)
Trending Now: