சுவக்கி, ஜமோட்டா, உபர் ஈட்ஸ்-க்கு சரியான போட்டி

04-11-2019 02:53 PM

சுவக்கி, ஜமோட்டா, உபர் ஈட்ஸ் ஆகியவை இருக்கும் இந்த உலகத்தில் வேறு ஒரு கம்பெனி அதுவும் ஒரு சிறிய கம்பெனி போட்டி போட முடியுமா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான்.  திருவிளையாடல்   படத்தில் வரும் வசனமான "சபாஷ் சரியான போட்டி" என்ற வசனம் போல கோழிக்கோட்டில் ஒரு

சரியான போட்டி நடந்துகொண்டிருக்கிறது. அதாவது ஒரு சிறிய டெலிவரி கம்பெனிக்கும், பெரிய ஜாம்பவான் களுக்கும் இடையே.

ஆமாம் இது உண்மை தான்.  2017 ஆம் வருடம் நான்கு இளைஞர்களால்  ஆரம்பிக்கப்பட்ட "போட்டோபூ” (POTAFU)  என்ற டெலிவரி கம்பெனி  அங்குள்ள பல பெரிய, சிறிய ஓட்டல்கள் உடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு டெலிவரி வசதிகளை செய்து தருகிறது.

இந்த டெலிவரி கம்பெனி தற்போது கோழிக்கோட்டில் இருக்கும் 150 ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதுபோல கோழிக்கோடு போன்ற ஒரு நகரத்தில் 50,000 உறுப்பினர்களை கொண்டிருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான, முக்கியமான விஷயம். இதைத் தான் நாம் முன்பு "சபாஷ் சரியான போட்டி" என்றோம். இந்த கம்பெனி இது போன்ற பல நகரங்களுக்கும் தங்களை விரிவுபடுத்த நான் நினைக்கிறது. ஒரு லட்ச ரூபாய் மூலதனத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கம்பெனியின் ஜாம்பவான் களுடன் போட்டி போட்டு

ஆர்டர்கள் எடுப்பது  ஒரு சிறப்பான விஷயம் தான். இதிலிருந்து என்ன தெரிகிறது எந்த ஒரு ஜாம்பவானிடமிடமும் போட்டி போடலாம் மனதில் தைரியம் மட்டும் இருந்தால்.Trending Now: