ஏற்­று­மதி உல­கம்: பாசுமதி அரிசியின் ஏற்றுமதி தேவை குறைகிறதா... கூடுகிறதா...

04-11-2019 02:52 PM

உலக அளவில் பாசுமதி அரிசிக்கு டிமாண்ட் குறைந்து இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?  கட்டாயம் நம்பித்தான் ஆகவேண்டும். சென்ற வருட விலையை விட இந்த வருட விலை கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைந்திருக்கிறது.  இதற்கான இரண்டு காரணங்கள்.  ஒன்று உலக அளவில் பாசுமதி அரிசியின் தேவை குறைந்து வருகிறது.  மக்கள் அரிசி உணவில் இருந்து விலகி பலவிதமான உணவுகளுக்கு செல்வது ஒரு காரணமாக இருக்கிறது. இரண்டாவது உலக அளவில் பாஸ்மதி அரிசியின் உற்பத்தியும் தொடர்ந்து கூடி வருகிறது. இவை இரண்டும் சேர்ந்து விலையை குறைக்கிறது.

சென்ற வருடத்தைவிட இந்த வருடம் சுமார் 10% தேவை  உலக அளவில் குறைந்து இருக்கிறது. சென்ற வருடம் 1.66 மில்லியன் டன்னாக இருந்த பாசுமதி அரிசிஉற்பத்தி இந்த வருடம் 1.85 மில்லியன் டன்னாக கூடியிருக்கிறது.

இன்னொரு முக்கியமான காரணம் நாம் ஈரான் நாட்டிற்கான பாசுமதி அரிசி ஏற்றுமதியை குறைத்திருக்கிறோம்.  இதற்கு காரணம் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளினால் அந்த

நாட்டில் நிலவும் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை தான்.

ஆர்கானிக் பொருட்கள் கண்காட்சி

நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆர்கானிக் என்றால் ஒரு சர்டிபிகேட்  அல்லது லேபில் வாங்கி விட்டால் போதும் என்று.  அது தவறு. இயற்கை வளங்களை உபயோகப்படுத்துவதிலும், தரத்திலும் நாம் உயர்வாக இருக்க வேண்டும். அப்போது தான் ஆர்கானிக் பொருட்கள் சிறப்படையும், விரும்பப்படும், விற்பனை கூடும். இந்தியாவில் ஆர்கானிக்  உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள்,  ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் என்று எல்லோரும் கூடும் ஒரு கண்காட்சி தான்”பயோபாக் இந்தியா” (BIOFACH INDIA) எனப்படும்.  இந்தக் கண்காட்சி இந்த மாதம் ஏழாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நோய்டா நகரில் உள்ள இந்தியா எக்ஸ்போர்ட் சென்டரில் நடக்கவிருக்கிறது. இந்தியாவின் விவசாய பொருட்களின் பிரதான ஏற்றுமதி வளர்ச்சி கழகமான அபிடா, நூர்ன்பர்க் மெஸ்சி என்ற நிறுவனத்துடன் இணைந்து இதை நடத்துகிறது.

இந்த கண்காட்சியில் 6000 ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள்,  சில்லறை விற்பனையாளர்கள்,  தரச்சான்றிதழ் நிறுவனங்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த கண்காட்சியில் ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்படும் டீ,  வாசனைப் பொருட்கள்,  தேன், பாசுமதி அரிசி,  காபி,  பருப்பு வகைகள்,  பழங்கள்,  காய்கறிகள், மூலிகை செடிகள் போன்ற பலவிதமான பொருட்கள் காட்சிபடுத்தப்படும்.

2018 -–19 ஆம் வருடத்தில் இந்தியா சுமார் 5151 கோடி ரூபாய் அளவிற்கான ஆர்கானிக் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.  இது அதற்கு முந்தைய வருடம் 2017 18 ஆம் வருடத்தில் செய்த ஏற்றுமதியான மூன்று ஆயிரத்து 453 கோடி ரூபாயை விட 49 சதவீதம் அதிகமாகும்.

ஆர்கானிக் பொருட்களை அதிக அளவு வாங்கப்படும் பொருட்கள் flax seeds, sesame and soybean; pulses such as arhar (red gram), chana (pigeon pea), rice, tea and medicinal plants  ஆகும்.

ஆர்கானிக் பொருட்களை இந்தியாவிலிருந்து அதிக அளவில் வாங்கும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மற்றும் ஜெர்மனி திகழ்கின்றன.   இது தவிர தென் கொரியா,ஐரோப்பிய யூனியன் நாடுகள்,   கனடா,   ஆஸ்திரேலியா ,இஸ்ரேல்,  வியட்நாம்,   நியூசிலாந்து, ஜப்பான்,ஆகிய நாடுகளும் இந்தியாவிலிருந்து  ஆர்கானிக் பொருட்களை வாங்குகின்றனர்.

இந்தியாவில் 31 மார்ச்2019 தகவல் படி 3.56 மில்லியன் ஹெக்டேர் அளவு நிலத்தில் ஆர்கானிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  தற்போதைய தகவல் படி மத்திய பிரதேச மாநிலம் அதிக அளவு ஆர்கானிக் நிலங்களை கொண்டுள்ளது அதைத்தொடர்ந்து ராஜஸ்தான், மகாராஷ்டிரா,உத்திரப்பிரதேசம் ஆகியவை  வருகின்றன.

2016 ஆம் வருடம் சிக்கிம் மாநிலம் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்தது. அதாவது அவர்களிடம் இருக்கும் உபயோகப்படுத்தக்கூடிய 70,000 ஹெக்டேர் நிலத்தையும் ஆர்கானிக் நிலமாக மாற்றி விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

2019 ஆம் வருடம் 2.67 மில்லியன் டன் ஆர்கானிக் பொருட்களை உற்பத்தி செய்துள்ளது.

ஆர்கானி பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் இது போன்ற கண்காட்சிகள் பார்ப்பதன் மூலம் வியாபாரங்களை பெருக்குவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.Trending Now: