ஏற்றுமதியில் சந்தேகங்களா?

04-11-2019 02:51 PM

கேள்வி: எங்களுக்கும், பங்களாதேஷில் உள்ள இறக்குமதியாளருக்கும் இடையே உள்ள காண்டிராக்ட் பேமண்ட் டேர்ம் சைட்டில் இருக்கிறது. ஆனால் பங்களாதேஷில் இருக்கும் இறக்குமதியாளருக்கு 180 நாட்கள் கடன் தேவை. ஆதலால் எங்களுக்கு கொடுக்கப்போகும் எல்.சி.யை 180 நாட்கள் எல்.சி.யாக போட்டு, அந்த எல்.சி.யை இந்தியாவில் எல்.சி.யைப் பெறும் வங்கி சைட் டில் டிஸ்கவுண்ட் செய்து தரும் என்றும் கூறுகிறார்கள். எங்களுக்கு கிடைக்கும் இன்சண்டிவ் எப்போது கிடைக்கும்?

பதில்: நல்ல கேள்வி. உங்கள் காண்டிராக்ட் சைட்டில் இருந்தாலும், உங்கள் கேள்விப் படி எல்.சி. சைட்டில் இல்லை. ஆனால் உங்களுக்கு பணம் சைட்டில் இந்திய வங்கியிடமிருந்து கிடைக்கும் (அதாவது அவர்கள் டிஸ்கவுண்ட் செய்து தருவார்கள்).  இருந்தாலும் இந்திய வங்கிக்கு 180 நாட்கள் கழித்து தான் பணம் கிடைக்கும். ஆதலால் இந்திய வங்கி உங்களுக்கு பாங்க் ரியலைஷேசன் சர்ட்டிபிகேட் 180 நாட்கள் கழித்து தான் தரும்.

கேள்வி: இன்கோ டெர்ம்ஸ் ஏன் தேவை?

பதில்: சரக்குகளை எடுத்துச் செல்லும் போது யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள் என்பதை வரையறுக்கும் டாக்குமெண்ட் இன்கோ டெர்ம்ஸ் விதிகள் தான். இது 2010ம் வருடம் உலகளவில் திருத்தப்பட்ட புதிய விதிகள் வெளிவந்தது. இது உலக அளவில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இறக்குமதி, ஏற்றுமதி கிளியரன்ஸில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கிறது என்பதை விரிவாக எடுத்துக் கூறும் டாக்குமெண்ட் ஏற்றுமதி, இறக்குமதியில் சம்பந்தப்பட்டவர்களில் யார் யாருக்கு என்னென்ன ரிஸ்க்குகள் இருக்கிறது, யார் யாரை என்னென்ன செலவுகள் சேரும் என்பதை விரிவாக எடுத்துக் கூறும் டாக்குமெண்ட் 2020ம் ஆண்டு ஜனவரி முதல் திருத்தப்பட்டு வெளிவர இருக்கிறது என்பது முக்கியமான ஒரு அம்சமாகும்.Trending Now: