பிரபல வி.ஜே நடிக்குற படத்துல புதிய அறிமுகங்கள்!

01-11-2019 10:51 AM

சென்னை,    

அணி கிரியேஷன்ஸ் சார்பில நியூட்டன் பிரபு என்ற புதுமுக டைரக்டர் தயாரிச்சு இயக்குகிற படம் "ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்". பெயரிடப்படாத இப்படத்தோட பூஜை இன்னைக்கு வளசரவாக்கத்தில இருக்குற சாய்பாபா கோவிலில நடந்துச்சு. இதுல சிறப்பு விருந்தினராக ஜாக்குவார் தங்கம் ,ரோபோ ஷங்கர், எழுமின் விஜி ஆகியோர் கலந்துகிட்டாங்க.

இந்த படம், சைக்கோ திரில்லர் வகையை சேர்ந்தது. இதில் நாயகனாக பிரபல டிவி தொகுப்பாளர்  தணிகை நடிச்சு இருக்காரு. இவரோட முகம், நிறைய பேருக்கு பரிச்சயமா இருக்கும். சமீபத்துல நடிகர் அருண் விஜய் நடிச்சு வெளியான தடம் படத்துல முக்கிய கதாபாத்திரத்துல நம்ம தணிகை நடிச்சு இருக்காரு. இது அவருக்கு ஒரு திருப்புனையா அமஞ்சுது. இது மட்டுமல்லாம, ‘தொடுப்பி’ என்னும் படத்துல ஹீரோவா நடிச்சு இருக்காரு. 

அப்படி அனுபவமான நம்ம தணிகை, இந்த படத்தோட ஹீரோவா நடிக்கிறாரு. கதாநாயகியாக அறிமுக நடிகை குயின்ஸ்லி நடிக்கிறாங்க. இவங்க, பிரபல மாடலாக வளம் வராங்க. சென்னை, பெங்களூருனு மாடலிங்க்ல அசத்துறவங்கதான் நம்ம குயின்ஸ்லி. 

வில்லனாக விஜய் டிவி புகழ் பாண்டி கமல்  நடிக்கிறாரு.இவர்களோட முக்கிய கதாபாத்திரத்திலயும் சிறப்பு தோற்றத்திலயும் பிரபல நடிகர்கள் நடிக்க இருக்குறாங்க. 

இந்த படத்தோட டைரக்டர் இயக்குர முதல் படம் இதுவா இருந்தாலும், இவர் சில குறும்படங்களை இயக்கி இருக்காரு. அதுமட்டுமல்லாம பிரபல பத்திரிகை நிறுவனத்தில பல வருடங்களாக சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி இருக்குறாரு. இவர் தயாரிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் சைக்கோ த்ரில்லர் வகைய சேர்ந்தது. 

இந்த படத்துக்கு சம்சத் ஒளிப்பதிவாளராக இருந்து இருக்காரு உள்ளார். சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்க இருக்காரு. இவர்  மலையாள  திரையுலகில் இருந்து தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துல பல முன்னணி டெக்னீஷியன்ஸ் வேலை செய்ராங்க. அதனால, இந்த படம் சிறப்பான முறையில வரும்னு உறுதியா சொன்னாரு நம்ம டைரக்டர். 

இந்த படத்தோட பூஜை முடிஞ்ச கையோட ஷூட்டிங்க தொடங்கிட்டாங்க நம்ம படக்குழுவினர். Trending Now: