ஆன்மிக கோயில்கள்: பிரிந்த தம்பதியரை ஒன்றுசேர்க்கும் பள்ளி கொண்டீஸ்வரர்!

31-10-2019 05:50 PM

தல வர­லாறு : துர்­வாச மக­ரி­ஷி­யின் சாபத்­தால் இந்­தி­ர­லோக பத­வியை இழந்­தான் இந்­தி­ரன். அசு­ரர்­கள் அவ­னது ராஜ்­யத்­தைப் பிடித்­த­னர். இழந்த பத­வியை பெற வேண்­டு­மா­னால் பாற்­க­டலை கடைந்து, அமு­தம் உண்டு பலம் பெற வேண்­டும் என தேவ­குரு பிர­கஸ்­பதி கூறி­னார்.

திரு­மா­லின் உத­வி­யு­டன் வாசுகி என்ற பாம்பை கயி­றா­க­வும், மந்­திர மலையை மத்­தா­க­வும் கொண்டு, தேவர்­கள் ஒரு புற­மும், அசு­ரர்­கள் ஒரு புற­மு­மாக பாற்­க­டலை ஏகா­தசி தினத்­தில் கடைந்­த­னர். வாசுகி பாம்பு வலி தாங்­கா­மல் விஷத்தை கக்­கி­யது. தேவர்­க­ளும், அசு­ரர்­க­ளும் பயந்து இதி­லி­ருந்து தங்­களை காப்­பாற்ற சிவனை வேண்­டி­னர். சிவன் தன் நிழ­லில் தோன்­றிய சுந்­த­ரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறி­னார். சுந்­த­ரர் மொத்த விஷத்­தை­யும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவ­னி­டம் தந்­தார். அப்­போது முப்­பத்து முக்­கோடி தேவர்­க­ளும், ‘‘சிவ­பெ­ரு­மானே! இந்த விஷத்தை வெளி­யில் வீசி­னா­லும், தாங்­களே உண்­டா­லும் அனைத்து ஜீவ­ரா­சி­க­ளும் அழி­யும். இந்த இக்­கட்­டான சூழ்­நி­லை­யி­லி­ருந்து எங்­களை காத்­தி­டுங்­கள்’’ என மன்­றா­டி­னர்.

உடனே சிவன் வி­ஷா­ப­க­ரண மூர்த்­தி­யாகி அந்த கொடிய நஞ்­சினை விழுங்­கி­னார். இதைக் கண்டு பயந்த லோக­மாதா பார்­வதி, சிவனை தன் மடி­யில் கிடத்தி அவ­ரது வாயி­லி­ருந்த விஷம் கழுத்­தினை விட்டு செல்­லா­த­வாறு கண்­டத்­தில் கைவைத்து அழுத்­தி­னாள். இத­னால் சிவ­னின் கழுத்­தில் நீல­ நி­றத்­தில் விஷம் தங்­கி­யது. அவர் ‘நீல­கண்­டன்’ ஆனார். விஷத்தை தடுத்து அமு­தம் கிடைக்­கச் செய்­த­தால் அம்­மன் ‘அமு­தாம்­பிகை’ ஆனாள். பிறகு சிவன் பார்­வ­தி­யு­டன் கைலா­யம் சென்­றார். அப்­படி செல்­லும் வழி­யில் இத்­த­லத்­தில் சற்று இளைப்­பா­றி­ய­தாக சிவ­பு­ரா­ணத்­தி­லும், ஸ்கந்த புரா­ணத்­தி­லும் கூறப்­ப­டு­கி­றது. பார்­வ­தி­யின் மடி­யில் படுத்து ஓய்­வெ­டுத்­தார். இந்த அருட்­காட்­சியை சுருட்­டப்­பள்­ளி­யில் பார்க்­க­லாம். சுவாமி பள்ளி கொண்­டி­ருப்­ப­தால், ‘பள்ளி கொண்­டீஸ்­வ­ரர்’ எனப்­ப­டு­கி­றார். பிர­தோஷ காலத்­தில் இத்­த­லத்து ஈசனை வழி­பட்­டால் சகல சவு­பாக்­கி­யங்­க­ளும் கிடைக்­கும் என்­பது நம்­பிக்கை.

அதி­ச­யத்­தின் அடிப்­ப­டை­யில்: எங்­குமே காண­ மு­டி­யாத கோலத்­தில் சிவன் பள்ளி கொண்ட நிலை.

தல பெருமை: மூல­வரை வால்­மீ­கிஸ்­வ­ரர் என்­கி­றார்­கள். இவ­ருக்கு எதி­ரில் ராம­லிங்­கம் உள்­ளது. இந்த சன்­ன­திக்கு வெளியே துவார பால­க­ருக்கு பதில் சங்­க­நி­தி­யும், பது­ம­நி­தி­யும் உள்­ள­னர். அம்­மன் மர­க­தாம்­பிகை சன்­ன­திக்கு வெளி­யில் துவார பால­கி­ய­ருக்கு பதில் பாற்­க­ட­லி­லி­ருந்து கிடைத்த காம­தே­னு­வும், கற்­ப­க­வி­ருட்­ச­மும் உள்­ளன.

பொது தக­வல்: தட்­சி­ணா­மூர்த்தி இத்­த­லத்­தில்தான் தன் மனைவி தாரா­வு­டன் தம்­பதி சமே­த­ராக அருள்­பா­லிக்­கி­றார். வியா­ழக்­கி­ழ­மை­க­ளில் இவரை வழி­பட்­டால் இரட்­டிப்பு பலன் கிடைக்­கும். பிர­ாகா­ரத்­தில் விநா­யகர், முரு­கன், பிருகு முனி­வர், பிரம்மா, விஷ்ணு, மார்க்­கண்­டே­யர், நார­தர், சந்­தி­ரன், குபே­ரன், சூரி­யன், சப்­த­ரி­ஷி­கள், இந்­தி­ரன் வீற்­றி­ருக்கி­றார்­கள்.

பிரார்த்­தனை : பிர­தோஷ பூஜை தோன்­று­வ­தற்கு மூல­க்கா­ர­ண­மாக இருந்த தலமே சுருட்­டப்­பள்­ளி­தான். இவ்­வு­லகை காப்­ப­தற்­காக அமிர்­தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்­ளி­கொண்ட நாதனை சனிக்­கி­ழ­மை­க­ளில் வரும் மகா­பி­ர­தோஷ தினத்­தில் வழி­பட்­டால் இழந்த செல்­வம் மீண்­டும் கிடைக்­கும். பத­வி­யி­ழந்­த­வர்­கள் மீண்­டும் அடை­வர், பதவி உயர்வு கிடைக்­கும், திரு­ம­ணத்­தடை வில­கும், பிரிந்த தம்­ப­தி­யி­னர் ஒன்று சேரு­வர் என்­பது நம்­பிக்கை.

நேர்த்­திக்­க­டன்: பிரார்த்­தனை நிறை­வே­றி­ய­வு­டன் சிவ­பெ­ரு­மா­னுக்கு பிர­தோஷ தினத்­தன்று வில்­வ­மாலை அர்ச்­சனை செய்து நேர்த்­திக்­க­டன் செலுத்­து­கின்­ற­னர்.

திரு­விழா: சிவ­ராத்­திரி, திரு­வா­திரை, ஐப்­பசி அன்­னா­பி­ஷே­கம்.

திறக்­கும் நேரம்: காலை 6  மணி முதல் 12.30 மணி வரை, மாலை  4 மணி முதல் இரவு 8 மணி வரை.

முக­வரி: பள்ளி கொண்­டீஸ்­வ­ரர் திருக்­கோ­யில், சுருட்­டப்­பள்ளி, சித்­தூர் -517 589, ஆந்­திரா.Trending Now: