பணத்துக்காக பல சமரசங்கள்; மனம் திறக்கிறார் சீனியர் நடிகை

31-10-2019 05:35 PM

நடிகை இஷா கோபி­கர் 2000ல் வெளி­யான ‘பிசா’ என்ற படத்­தில் அறி­மு­க­மா­னார். 2011ல் வெளி­யான ‘ஹலோ டார்­லிங்’ படத்­து­டன் சினி­மா­வுக்கு குட்பை சொல்­லி­விட்­டார். இஷா­வுக்கு இப்­போது 43 வயது. வெப் சீரி­யல்­க­ளில் மட்­டுமே நடித்து வரு­கி­றார்.

சினிமா அனு­ப­வங்­கள் பற்றி இஷா மனம் திறந்­துள்ள லேட்­டஸ்ட் பேட்டி:

‘‘சினிமா, திடீர் திடீ­ரென ஏற்ற இறக்­கங்­க­ளைச் சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும் தொழில். அத­னால், எப்­போது நமது மார்க்­கெட் சரி­யுமோ என்ற நம்­பிக்­கை­யின்மை எப்­போ­தும் மன­தைக் குடைந்து கொண்டே இருக்­கும். புதிய படம் புக் ஆகாத நிலை­யில், எதிர்­கா­ல கவ­லை­கள் வாட்டி வதைக்­கும்.

நான், சிறிது கால­மாக சினி­மாத்­து­றையை விட்டு விலகி வெளியே இருந்து கொண்­டி­ருக்­கி­றேன். ஆனால், எனக்கு இதில் எந்த கவ­லை­யும் இல்லை. வயது அதி­க­ரித்­தா­லும், என்­னு­டைய தோற்­றம் நல்­ல­ப­டி­யா­கவே இருந்து கொண்­டி­ருக்­கி­றது.  திற­மை­யான நடிகை என்ற நற்­பெ­ய­ரைப் பெற்­றி­ருப்­ப­தில் எனக்கு திருப்தி இருக்­கி­றது.

நான் மட்­டு­மல்ல, திற­மை­யான பல கலை­ஞர்­க­ளும் ‘போதும்’ என்ற மன­நி­லை­யில் சினி­மாத்­து­றை­யில் இருந்து வெளியே வந்­துள்­ள­னர்.

என்­னு­டைய 20 வயது கால­கட்­டத்­தில், சினி­மாக்­க­ளில் வித்­தி­யா­ச­மான கேரக்­டர்­க­ளில் நடிக்க சான்ஸ்­கள் வந்­தன. 30, 40 என்று வயது ஏற ஏற, நடிப்பு சான்ஸ்­க­ளில் மாறு­பட்ட சூழல்­கள் வந்­தன. இப்­படி, நடிப்பு தொழி­லில் எல்லா சூழல்­க­ளை­யும் சந்­தித்­து­விட்­டேன்.

சினி­மா­வில் நடிக்க ஆரம்­பித்த கால­கட்­டத்­தில், நிறைய பணம் சம்­பா­திக்க வேண்­டும் என்ற சிந்­தனை மட்­டுமே இருந்­தது. அத­னால், பல சம­ர­சங்­க­ளைச் செய்து கொண்­டேன். அது, அந்த கால­கட்­டத்­தில் இருந்த சிந்­தனை. அதெல்­லாம், கடந்து போன அனு­ப­வங்­கள்.

இப்­போது, என் வாழ்க்கை மகிழ்ச்­சி­யாக நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. கட­வுள், அனைத்­தை­யும் எனக்கு வழங்கி சந்­தோ­ஷ­மாக வாழ வைத்­தி­ருக்­கி­றார்.

இப்­போது, வெப் சீரி­யல்­க­ளில்­தான் என்­னு­டைய கவ­னம் குவிந்­தி­ருக்­கி­றது. ஆவ­ணப்­ப­டங்­க­ளில் நடிப்­ப­தற்­கும் ஆசை இருக்­கி­றது’’.

***Trending Now: