அதி­க­ரிக்­கும் ஒளி மாசு!

31-10-2019 05:31 PM

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­தில் ஆராய்ச்சி செய்­யும் விண்­வெளி வீரர்­கள், பூமி­யில் தற்­போது அதி­க­ரித்து வரும் ஒளி மாறு­பாட்டை கட்­டுப்­ப­டுத்த உத­வக்­கூ­டும்.'விண்­வெளி வீரர்­கள், நிலை­யத்­தின் கண்­ணாடி சன்­னல்­கள் வழியே அவ்­வப்­போது பூமியை பல கோணங்­க­ளில் புகைப்­ப­டம் எடுப்­பர்.

இரவு, பகல், புயல், மழை, வறட்சி என்று பல சூழல்­க­ளில் எடுக்­கப்­ப­டும் இந்­தப் புகைப்­ப­டங்­க­ளில் பெரும்­பா­லா­னவை கிடப்­பில் போடப்­ப­டு­கின்­றன. அவற்றை பயன்­ப­டுத்தி ஒளி மாசினை கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில், 'லாஸ்ட் அட் நைட்' என்ற ஆய்வு அமைப்பை சில விஞ்­ஞா­னி­கள் தொடங்­கி­யுள்­ள­னர்.

அறி­வி­யல் ஆர்­வ­லர்­க­ளைக் கொண்ட இந்த அமைப்பு, விண்­வெளி வீரர்­கள் எடுக்­கும் புகைப்­ப­டங்­களை வைத்து நக­ரப்­ப­கு­தி­க­ளில் மனி­தர்­க­ளுக்­கும் உயி­ரி­னங்­க­ளுக்­கும் இரவு முழு­வ­தும் எரி­யும் விளக்­கு­க­ளால் ஏற்­ப­டும் தாக்­கத்தை குறைக்­க­லாம் என நம்­பு­கி­றது.

புகைப்­ப­டங்­க­ளில் தெரி­யும் நக­ரங்­கள், சாலை­கள் போன்­ற­வற்றை கணி­னி­க­ளை­விட மனி­தர்­கள் எளி­தில் அடை­யா­ளம் காண முடி­யும். எனவே பெயர் குறிக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை வைத்து, அப்­ப­கு­தி­யில் ஒளி­மா­சின் தீவி­ரம், அதை குறைக்­கும் நட­வ­டிக்கை போன்­ற­வற்­றில், 'லாஸ்ட் அட் நைட்' அமைப்பு ஈடு­ப­டும்.Trending Now: