பிசினஸ் : வித்தியாசமாக யோசியுங்கள்... பெரிய தொழிலதிபர் ஆகலாம்... – ஞானசேகர்

30-10-2019 05:14 PM

நம்­மில் பல­ருக்கு வாழ்க்­கை­யில் முதல்­மு­றை­யாக தொழில் தொடங்கி ஜெயிக்க ஆசை. இன்­னும் சிலர், ஏற்­க­னவே ஒரு தொழிலை வெற்­றி­க­ர­மாக செய்­து­கொண்டு இருப்­பார்­கள். ஆனா­லும், அதிக லாபம் தரக்­கூ­டிய புதிய தொழில் ஏதே­னும் தொடங்க வாய்ப்பு கிடைத்­தால் அதை­யும் ஒரு கை பார்த்­து­வி­டத் துடிப்­பார்­கள். இந்த இரண்டு வகை­யி­ன­ருக்­கும், அதிக ரிஸ்க் இருந்­தா­லும் அதிக லாபம் தரக்­கூ­டிய புதிய பொரு­ளா­தா­ரத் தொழில்­கள் ஏற்­றவை. அது என்ன புதிய பொரு­ளா­தா­ரத் தொழில்­கள் என்று கேட்­கி­றீர்­களா..?  

1990-ல் நம் பொரு­ளா­தா­ரம் தாரா­ள­ம­ய­மாக்­கப்­பட்­ட­போது பல துறை­க­ளி­லும் புதிய தொழில் வாய்ப்­பு­கள் கிடைத்­தன. தொலை­பே­சித் துறை­யில் பார்தி ஏர்­டெல், ஐ.டி. துறை­யில் இன்­போ­சிஸ், விப்ரோ, வங்­கித் துறை­யில் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி., யெஸ் பேங்க், மருந்­துத் துறை­யில் பயோ­கான், டாக்­டர் ரெட்­டீஸ் என பல நிறு­வ­னங்­கள் உரு­வாகி, இந்­தி­யா­வின் புதிய தொழில் முகத்தை உல­குக்கு காட்­டி­யது. கன்ஸ்­யூ­மர் துறை­யில் ஐ.டி.சி., கவின்­கேர், மாரிகோ என பல நிறு­வ­னங்­கள் உரு­வாகி, இன்­றும் சக்­கைப்­போடு போட்டு வரு­கின்­றன.

இரு­பத்து மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு தொடங்­கிய இந்­தப் பொரு­ளா­தார மாற்­றங்­க­ளி­னால் இன்­றும் புதிது புதி­தாக பல தொழில் வாய்ப்­பு­கள் உரு­வாகி வரு­கின்­றன. இவற்­றில், இன்­டர்­நெட், மொபைல் டெக்­னா­லஜி, டெலி­காம் போன்ற துறை­க­ளில் உரு­வா­கி­வ­ரும் வாய்ப்­பு­களை புதிய பொரு­ளா­தா­ரத் தொழில்­க­ளாக நாம் கரு­த­லாம். உதா­ர­ணத்­திற்கு, உண­வ­கங்­கள் (ரெஸ்­டா­ரன்ட்ஸ்) முன்­பெல்­லாம் ஒரு வகை­தான். ஆனால், இன்றோ துரித உண­வ­கம், தோசை ஹட், பிட்ஸா ஹட், சைனீஸ், அமெ­ரிக்­கன், இத்­தா­லி­யன், அரே­பிக் என்று பல வகை - ஒவ்­வொ­ரு­நா­ளும் பெரு­கிக்­கொண்டே போகின்­றன.

கம்ப்­யூட்­டர் டெக்­னா­ல­ஜி­யில் ஒரு சின்ன அப்­ளி­கே­ஷனை கஷ்­டப்­பட்டு உரு­வாக்கி, அத­னைப் பயன்­ப­டுத்­து­வ­தால் என்­னென்ன நன்மை கிடைக்­கும் என்­ப­தைச் சொல்லி பிர­ப­லப்­ப­டுத்­து­கி­றார்­கள். அது ஓர­ள­வுக்கு பிர­ப­ல­மாகி, பல­ரும் பயன்­ப­டுத்­தத் தொடங்­கி­விட்­டால், பல நூறு கோடி ரூபாய்க்கு அந்த சாப்ட்­வேரை விற்­று­விட்டு, சென்­று­வி­டு­கி­றார்­கள்.

இவை மட்­டு­மல்ல, இன்­னும் பல புதிய தொழில் வாய்ப்­பு­க­ளைச் சொல்­ல­லாம். உதா­ர­ண­மாக, கால் டாக்ஸி ஏற்­க­னவே இருக்­கி­றது. இப்­போது கால் டாக்­ஸிக்­குப் பதி­லாக கால் ஆட்­டோ­வும் வந்­து­விட்­டது! வாட­கைக்கு சைக்­கிள் விட்­டோம் முன்பு. இனி வாட­கைக்கு கார்/பைக் விட்­டால் எப்­படி இருக்­கும்?

நாம் எல்­லோ­ரும் கடை­கள் வைத்து ஒரு குறிப்­பிட்ட ஏரி­யா­வில் சேவை செய்­கி­றோம். ஆன்­லைன் கடை வைத்து உல­கம் முழு­வ­தும் தொழில் செய்­தால் எப்­படி இருக்­கும்? டாக்­டர்­களை பல வியா­தி­க­ளுக்­கும் நேரி­லேயே சென்று பார்த்து உரிய

கட்­ட­ணத்­தைச் செலுத்­தி­விட்டு வரு­கி­றோம். போன் அல்­லது இ-மெ­யில் மூலம் டாக்­டர் கன்­சல்­டிங் செய்­தால் எப்­படி இருக்­கும்? மருந்­துக் கடை­க­ளுக்­குச் சென்று மருந்து வாங்கி வரு­கி­றோம். ஆன்­லைன் அல்­லது போன் மூலம் மருந்து விற்­பனை செய்­தால்? இது­போல் இன்­றைய இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு என்­னென்ன தேவை என்­ப­தைக் கூர்ந்து கவ­னி­யுங்­கள். புதிய ஒயினை புதிய கோப்­பை­யில் தர முடி­யுமா என்று பாருங்­கள். அல்­லது பழைய ஒயினை புதிய கோப்­பை­யில் தர­மு­டி­யுமா என்று யோசி­யுங்­கள்.  

அமெ­ரிக்­கா­விற்­கும் பிற நாடு­க­ளுக்­கும் உள்ள ஒரு பெரிய வித்­தி­யா­சம், அமெ­ரிக்­கர்­கள் குறைந்த மார்­ஜின் உள்ள பிசி­னசைத் தூக்கி எறிந்து கொண்டே இருப்­பார்­கள். அதே­ச­ம­யம், புதிய ஹை மார்­ஜின் தொழில்­கள் உலை­யில் வெந்­து­கொண்டே இருக்­கும். இதுவே அந்­நாட்டை எப்­போ­தும் உல­க­ள­வில் தலை­மை­யாக வைத்­துக்­கொள்ள உத­வு­கி­றது. இது­மா­தி­ரி­யான தொழில்­க­ளைத் தேர்வு செய்­யும்­போது நிச்­ச­யம் வெற்றி கிடைக்­கும் என்று சொல்ல

முடி­யாது. அனு­ப­வம் இல்­லாத புதிய தொழில், ஜெயிக்­கும் என்­கிற நம்­பிக்கை பல­ருக்­கும் இருக்­காது என்­ப­தால் முத­லீடு கிடைப்­பது கடி­னம், அர­சின் சட்­ட­திட்­டங்­கள் திடீர் பாத­கங்­களை உரு­வாக்­க­லாம்... என நெகட்­டிவ் அம்­சங்­கள் இத்­தொ­ழி­லில் இருந்­தா­லும், பாசிட்­டிவ் விஷ­யங்­க­ளும் நிறைய இருக்­கவே செய்­கின்­றன.  புதிய தொழில்­கள் மூலம் நம் நாட்­டில் தோண்டி எடுக்­க­வேண்­டிய பணம் இன்­னும் ஏரா­ள­மாக உள்­ளது. அதைத் தோண்­டு­ப­வ­ராக ஏன் நீங்­கள் இருக்­கக் கூடாது? அப்­படி நீங்­கள் தோண்ட நினைத்­தால், ஹை மார்­ஜின் பிசி­னசாக யோசி­யுங்­கள். உங்­கள் சிந்­த­னைக் குதி­ரை­யைத் தட்­டி­வி­டுங்­கள். வெளி­யில் சென்று உங்­கள் எண்­ணங்­களை உங்­க­ளுக்கு நம்­ப­க­மா­ன­வ­ரி­டம் பகிர்ந்­து­கொள்­ளுங்­கள். பிசி­னஸ் பிளானை பட்டை தீட்­டுங்­கள்! தொடர்ந்து பாடு­ப­டுங்­கள். உங்­கள் உழைப்பு இன்­னும் சில ஆண்­டு­க­ளில் பல நூறு கோடி ரூபா­யைச் சம்­பா­தித்­துத் தரும் என்­ப­தற்கு மூன்று நிஜ உதா­ர­ணங்­களை இனி சொல்­கி­றேன்.

ரெட்­பஸ்:

2006-ல் ரெட் பஸ் என்ற வெப்­சைட் பனிந்த்ர சமா மற்­றும் இரண்டு நண்­பர்­க­ளால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இவர்­கள் மூவ­ரும் பிட்ஸ் பிலா­னி­யில் படித்­த­வர்­கள். தீபா­வ­ளி­யின்­போது தாங்­கள் வேலை பார்த்த இட­மான பெங்­க­ளூ­ரு­வில் இருந்து ஐத­ரா­பாத்­தில் இருக்­கும் வீட்­டிற்கு பஸ்­ஸுக்கு டிக்­கெட் கிடைக்­கா­மல் தவித்­த­போது உரு­வான ஐடி­யா­தான் ரெட்­பஸ்.இன். இந்த வெப்­சைட் மூலம் இந்­தி­யா­வில் அனைத்து இடங்­க­ளி­லி­ருந்­தும் தொலை­தூர பஸ்­ஸிற்கு டிக்­கெட் முன்­ப­திவு செய்­ய­லாம். சமீ­பத்­தில் இந்த நிறு­வ­னத்­தினை தென் ஆப்­பி­ரிக்­கா­வைச் சேர்ந்த நேஸ்ப்­பர்ஸ் என்ற நிறு­வ­னத்­தின் இந்­திய

அங்­க­மான இபிபோ ரூ.500 முதல் -600 கோடிக்கு வாங்­கி­யுள்­ளது.  மூன்று பேர் ஏழு ஆண்­டு­க­ளா­கத் தொடர்ந்து உழைத்­த­தற்கு கிடைத்­தப் பரி­சு­தானே இது!

ஜஸ்ட்­ட­யல்:

ஒரு தொழி­லின் டெலி­போன் எண் அல்­லது முக­வ­ரியை அறிந்­து­கொள்ள ஜஸ்ட்­ட­யல் என்ற நிறு­வ­னத்­தின் சேவையை உங்­க­ளில் பலர் பயன்­ப­டுத்தி இருப்­பீர்­கள். இத்­தொ­ழிலை ஆரம்­பித்­த­வர் மும்­பை­யைச் சேர்ந்த வி.எஸ்.எஸ். மணி. இதற்­கு­முன் பல தொழில்­க­ளில் தனது கையை நனைத்­தார். ஆனால், இத்­தொ­ழில்­தான் அவ­ருக்கு பெரும் வெற்­றி­யைக் கொடுத்­தது. வெறும் ரூ.50,000-த்தைக்­கொண்டு 1996-ல் தனது 29-வது வய­தில் ஜஸ்ட்­ட­யலை ஆரம்­பித்­தார். ஓரிரு மாதங்­க­ளுக்கு முன்பு வந்த ஐ.பி.ஓ-வில் பல நூறு கோடிக்கு அதி­ப­தி­யாக மாறி­யி­ருக்­கி­றார்.

மேக்­மை­டி­ரிப்:

தீப் கார்லா மேக்­மை­டி­ரிப் என்ற ஆன்­லைன் டிரா­வல் வெப்­சைட்டை 2000-த்தில் டில்­லி­யில் ஆரம்­பித்து 2010-ல் அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­யான நாஸ்­டாக்­கில் வெற்­றி­க­ர­மாக லிஸ்ட் செய்­தார். ஒரு பங்கு அமெ­ரிக்க டாலர் 14 என விற்று 70 மில்­லி­யன் டாலர்­களை நிறு­வ­னம் திரட்­டி­யது. இது­மா­திரி நீங்­க­ளும் ஏன் ஒரு புதிய தொழி­லைத் தொடங்­கக்­கூ­டாது?Trending Now: