பாட்டி பேரன் காம்பினே௸ன் கஷ்டம்! – விநோத்­பாபு

29-10-2019 05:20 PM

“சுந்­தரி நீயும் சுந்­த­ரன் நானும்” சீரி­ய­லில் ஹீரோ­வா­க­வும், லதா பேர­னா­க­வும் நடித்து வரு­கி­றார் விநோத்­பாபு. “ஒரு சீரி­யல்ல ஹீரோ – ஹீரோ­யி­னுக்கு காம்­பி­னே­ஷன் செட்­டா­கி­றது ரொம்ப ஈசி. ஆனா, பாட்­டிக்­கும் பேர­னுக்­கும் காம்­பி­னே­ஷன் செட்­டா­கி­றது ரொம்ப ரொம்ப கஷ்­டம். அதுக்கு லதாம்­மா­தான் முக்­கிய கார­ணம்!” என்­கி­றார்.

   அவ­ரு­டைய பேட்டி:-

   “இந்த சீரி­ய­லோட புரொ­மோவை பார்த்­துட்டு என்­னோட நிறத்தை வச்சு  நிறைய பேர் ‘நெகட்­டிவா’  கமெண்ட்ஸ் பண்­ணி­யி­ருந்­தாங்க.  அதை பார்த்­த­தும் ரொம்ப அதிர்ச்­சியா இருந்­துச்சு. தமிழ்­நாட்ல இருக்­கோம், ஆனா கலர் குறைச்­சலா இருந்தா நம்­மள ஏத்­துக்­க­மாட்­டேன்­கி­றாங்­க­ளேன்னு வருத்­தப்­பட்­டேன். ஆனா, நாம நல்லா நடிச்சா, எல்­லா­ருக்­கும் பிடிக்­கும்னு என் உள்­ம­னசு சொல்­லுச்சு. இப்போ, என்னை பத்தி ‘நெகட்­டிவ்’ கமெண்ட்ஸ் வர்­ற­தில்லே. ‘பாசிட்­டிவ்’ கமெண்ட்ஸ்­தான் வந்­துக்­கிட்­டி­ருக்கு. என்­னோட திற­மைக்­கும் கடின உழைப்­புக்­கும் கிடைச்ச வாய்ப்பு இது.

   நான் சினிமா பேக் – கிர­வுண்ட் இல்­லா­த­வன். பேசிக்­கலி,  நான் ஒரு மிமிக்ரி கலை­ஞன். நடிக்­கும்­போது சில சினிமா ஹீரோக்­கள் ஸ்டைல்ல என்னை அறி­யா­மல் பேசி­டு­வேன்.  நான் விஜய் சேது­பதி சார் பாணி­யிலே பேசி நடிக்­கி­றதா  நிறைய பேரு சொல்­லி­யி­ருக்­காங்க. எனக்கு அவரை  ரொம்ப பிடிக்­கும்­கி­ற­தால  தானா அப்­படி வருதோ என்­னவோ! அத­னால, நாம அப்­படி இருக்­கக்­கூ­டா­துன்னு நினைக்­கி­றேன். அத­னால, முடிஞ்ச அள­வுக்கு என் சொந்த ஸ்டைல்ல நடிச்­சுக்­கிட்­டி­ருக்­கேன். இதுக்கு முன்­னாடி நான் “சிவ­காமி” சீரி­யல்ல முன்­னணி கேரக்­டர்ல நடிச்­சி­ருக்­கேன். அந்த சீரி­யல் மூல­மா­தான் நடிப்பை கத்­துக்­கிட்­டேன்.

   நான் மெக்­கா­னிக்­கல் இன்­ஜி­னி­ய­ரிங் படிச்­சிட்டு அப்­ப­டியே எம்­பி­ஏ­வும் முடிச்­சேன். அதுக்கு பிறகு, கொக்கோ கோலா நிறு­வ­னத்­திலே குழு தலை­வரா வேலை பார்த்­தேன். அங்கே ஒர்க்­லோட்  கொஞ்­சம் அதி­க­மாச்சு. அந்த சம­யத்­தி­லே­தான் ஆதித்யா டிவி­யிலே ஆங்க்­க­ரிங் வாய்ப்பு வந்­துச்சு. நீ நல்லா டான்ஸ் ஆடுறே, பாட்டு பாடுறே, சினி­மா­விலே உனக்கு நல்ல எதிர்­கா­லம் இருக்கு, ஆஹா ஓஹோன்னு பிரண்ட்ஸ் எல்­லா­ரும் என்னை நல்லா என்­க­ரேஜ் பண்­ணாங்க. சினிமா கனவு என்னை தூங்க விடலே. வேலையை ரிசைன் பண்ண போறேன்னு எங்க வீட்ல சொன்­ன­தும், அவங்க எல்­லா­ரும்  நான் தலை­யிலே கல்லை தூக்கி போட்ட மாதிரி பீல் பண்­ணாங்க.  என் பியூச்­சரை பத்தி  ரொம்ப கவ­லைப்­பட்­டாங்க. இருந்­தா­லும், என் விருப்­பத்­துக்கு தடை போடலே. அதுக்­கப்­பு­றம் ஆதித்யா டிவி­யிலே சேர்ந்­தேன். அந்த துறை ரொம்ப ஜாலியா இருக்­கும்னு நினைச்­சேன். ஆனா, அதிலே ரொம்ப கஷ்­டப்­பட்­டேன். அந்த சம­யத்­தி­லே­தான் “சிவ­காமி” வாய்ப்பு வந்­துச்சு. அதிலே நடிச்­சுக்­கிட்டு இருக்­கும்­போது சில ஆங்க்­க­ரிங் வாய்ப்­பு­கள் வந்­துச்சு. மீண்­டும் ஆங்க்­க­ரிங் வேணாம்னு முடிவு பண்ணி, ஆக்­ட­ரா­கவே இருக்­கேன். ‘கலக்க போவது யாரு?’ ஷோவிலே போட்­டி­யா­ளரா கலந்­துக்­கிட்­டேன். அதிலே பைனல் ரவுண்ட் வரை வந்­தேன். அது ஒரு நல்ல அனு­ப­வமா எனக்கு இருந்­துச்சு.  காமெடி ஷோக்­கள்ல பங்­கேற்­கி­றது அவ்­வ­ளவு ஈசி கிடை­யாது.  வெளி­யிலே இருந்து பார்க்­கும்­போது  ஈசியா தெரி­யும். ஆனா, ரொம்ப கஷ்­டப்­ப­ட­ணும்.”Trending Now: