‘மகுடம்’ விருது!

29-10-2019 05:19 PM

தமி­ழ­கத்­தில் கலை, இலக்­கி­யம், சினிமா, விளை­யாட்டு, சமூக சேவை என பல்­வேறு துறை­க­ளில் சாதனை புரிந்­த­வர்­களை கொண்­டா­டும் வகை­யில், நியூஸ் 18 தமிழ்­நாடு ஆண்­டு­தோ­றும் ‘மகு­டம்’ விரு­து­கள் பரி­ச­ளிப்பு விழாவை நடத்தி சாத­னைத் தமி­ழர்­களை கவு­ர­வித்து வரு­கி­றது. அந்த வகை­யில், மூன்­றாம் ஆண்­டாக இந்த ஆண்­டுக்­கான ‘மகு­டம்’ விரு­து­கள் பரி­ச­ளிப்பு விழா சமீ­பத்­தில்   சென்­னை­யில் நடை­பெற்­றது.

இந்த விழா­வில், தெலங்­கானா ஆளு­நர் தமி­ழிசை சவுந்­தி­ர­ரா­ஜன், மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யின் தலை­வ­ரும், நடி­க­ரு­மான கமல்­ஹா­சன், உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்­கள் கிரு­பா­க­ரன், மகா­தே­வன், சுப்­பி­ர­ம­ணி­யம் மற்­றும் அர­சி­யல் பிர­மு­கர்­கள், திரை பிர­ப­லங்­கள், கல்­வி­யா­ளார்­கள், தொழி­ல­தி­பர்­கள், சமூக செயல்­பாட்­டா­ளர்­கள் உட்­பட பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

சிறந்த நடி­க­ருக்­கான விருதை ‘பேரன்பு’ படத்­துக்­காக நடி­கர் மம்­முட்­டி­யும், ‘சீதக்­காதி,’ ‘சூப்­பர் டீலக்ஸ்’ ஆகிய படங்­க­ளுக்­காக நடி­கர் விஜய் சேது­ப­தி­யும், சிறந்த நடி­கைக்­கான விருதை ‘கனா’ படத்­துக்­காக நடிகை ஐஸ்­வர்யா ராஜே­ஷும், சிறந்த டைரக்­ட­ருக்­கான விருதை, ‘பேரன்பு’ படத்­திற்­காக இயக்­கு­நர் ராமு­வும், சிறந்த தொழில்­மு­னை­வோ­ருக்­கான விருதை ராம்­ராஜ் காட்­டன் நிறு­வ­னத்­தின் தலை­வர் கே.ஆர். நாக­ரா­ஜும், சிறந்த தொழில் ஆளு­மைக்­கான விருதை பாரத் பெட்­ரோ­லிய நிறு­வ­னத்­தின் தலை­வர் மற்­றும் நிர்­வாக இயக்­கு­நர் டி. ராஜ்­கு­மா­ரும் பெற்­றுக் கொண்­ட­னர்.

அந்த வகை­யில் தமி­ழ­கத்­தில் தனி முத்­திரை பதித்த திற­மை­யா­ளர்­களை அங்­கீ­க­ரித்து சுமார் 10 பிரி­வு­க­ளில் 13 பேருக்­கும், ‘தமி­ழ­ருக்கு பெருமை சேர்த்த தமி­ழர் பெரு­மி­தம்’ என்ற சிறப்பு விரு­தும் வழங்­கப்­பட்­டன.

இவ்­விழா சமீ­பத்­தில் ஒளி­ப­ரப்பு செய்­யப்­பட்­டது.Trending Now: