மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 14

23-10-2019 03:56 PM

ஒரு எழுத்­தா­ளனை கவு­ர­வப்­ப­டுத்­து­வது  கதை­யைக் காட்­டி­லும்  அவன் கையா­ளும் நடையே ஆகும் என்­பதை பால பாட­மாக படித்­த­வர் வாலி. அந்த நாளில் லாச­ரா­வின் அனல் நடை­யும், வாச­வ­னின் புனல்  நடை­யும், இவர்­க­ளுக்கு  முன்­ன­தாக புது­மைப்­பித்­த­னின் நக்­க­லும், நையாண்­டி­யும் கலந்த நவீன நடை­யும் வாலியை கிறங்­க­டித்­தது உண்டு.

 திருச்சி  வானொ­லிக்கு வாலி அனுப்­பிய `வராளி வைகுண்­டம்’ என்­னும் சிறு­க­தை­யும் ஜன­ரஞ்­ச­க­மான பாணி­யி­லி­ருந்து விலகி புதிய உவ­மை­கள் உரு­வ­கங்­களை தாங்­கிய வித்­தி­யா­ச­மான நடைச்­சித்­தி­ர­மா­கவே  அமைந்­தி­ருந்­தது.

வைகுண்­டம் என்­னும் ஒரு இளம் நாத­சுர வித்­வான் பற்­றிய கதை அது. அந்த இளை­ஞன் கடு­மை­யான குரு­கு­ல­வா­சம் செய்து பத்து களைச் சவுக்­கத்­தில்  பல்­லவி பாடு­வ­தை­யெல்­லாம் அநா­ய­ாச­மா­கக் கற்­றுத்  தேறு­கி­றான். 128 அட்­ச­ரங்கள் கொண்ட சிம்ம நந்­தன தாளத்தை சர்­வ­சா­தா­ர­ண­மாக கையாண்டு தன் குரு­நா­தரை அவன் அசத்­து­கி­றான்.

அவன் சீவா­ளி­யில்  சரஸ்­வதி வாசம் செய்­கி­றாள் என்று அவரே, அவனை விழுந்து நமஸ்­க­ரித்­தார். அவ­னுக்கு ஒரு ஆணை­யும் இடு­கி­றார் அவர். தெய்வ சன்­னி­தா­னத்தை தவிர வேறு எவ்­வி­டத்­தி­லும்  அவன் வராளி ராகத்­தில் இசைக்­கக்­கூ­டாது என்­ப­து­தான் இந்த ஆணை. ஒரு தேவ­தா­சி­யின் பால் மையல் கொண்டு அந்த ஆணையை மீறு­கி­றான்

வைகுண்­டம். இப்­ப­டிப் போகி­றது கதை.

 திருச்சி வானொலி நிலை­யத்­தி­லி­ருந்து கதையை ஒலி­ப­ரப்ப சம்­ம­தம் தெரி­வித்து வாலிக்கு கடி­தம் வந்­தது. இருப்­பி­னும் சில மாற்­றங்­கள் செய்­வ­தற்­காக நேரில் வந்து தன்னை சந்­திக்­கும்­படி நிர்­வா­கப் பொறுப்­பில் இருந்த அதி­காரி ஒரு­வர் வாலிக்கு கடி­தம் எழு­தி­னார்.

வாலி வானொலி நிலை­யத்­திற்கு சென்று அந்த அதி­கா­ரியை சந்­தித்­தார். அந்த அதி­காரி விரும்­பி­ய­படி அங்­கேயே அமர்ந்து அரை மணி நேரத்­தில் அந்த கதையை அவர் விரும்­பிய வண்­ணம் மாற்றி கொடுத்­தார் வாலி.

படித்­து­விட்டு அந்த அதி­காரி சொன்­னார். `இப்­போது நீங்க மாத்தி கொடுத்­ததை நான் ஒலி­ப­ரப்­பப் போற­தில்லை. ஓரி­ஜி­னலா நீங்க தபால்ல எழுதி அனுப்­பிய  கதை­யைத்­தான் ஒலி­ப­ரப்ப போறேன்.’ என்­றார்

`ஏன் சார்?’ என்று கேட்­டார் வாலி.`வாலி, தபாலை பிரிச்சு உங்க கதையை படித்­த­தும் நான் திகைச்­சுப்  போயிட்­டேன். இவ்­வ­ளவு அற்­பு­த­மான நடை­யில் ஒரு சிறு­க­தையை நான் இது­வ­ரைக்­கும் படித்­த­தில்லை. இது நீங்க எழு­தி­னது தானான்னு, சோதிச்­சுப் பார்க்­கத்­தான் உங்­களை இங்கே வர­வ­ழைத்து பிற்­ப­கு­தியை மாற்றி எழு­தச் சொன்­னேன்.இப்ப நீங்க எழு­திக்­கொ­டுத்­த­தி­லே­யும் அதே நடை அமர்க்­க­ளமா அமைந்­ததை பார்த்­தப்­பி­ற­கு­தான்  இது உங்க சொந்­தக்­க­தை­தான்னு  தீர்­மா­னம் பண்­ணி­னேன். இவ்­வ­ளவு நாள் என்­னய்யா பண்­ணிக்­கிட்டு இருந்­தீங்க? என்ற அந்த அதி­காரி வாலியை ஆரத்­த­ழுவி கட்­டிக்­கொண்­டார். அந்த அதி­கா­ரி­யின் பெயர் ஏ.ஏ. ஹக்­கீம். சென்னை வானொலி நிலை­யத்­தில் அதி­கா­ரி­யாக பணி­பு­ரிந்து பின்­னர் ஓய்வு பெற்­றார்.

பிறகு வாலி ஏரா­ள­மான நாட­கங்­களை எழு­தி­னார். நடித்­தார். நிறைய மெல்­லிசை பாடல்­கள் எழு­தி­னார். அந்த வாய்ப்­பு­களை எல்­லாம் அவ­ருக்கு வழங்­கி­ய­வர் திருச்சி வானொ­லி­யில் அதி­கா­ரி­யாக இருந்த துறை­வன். வாலி எழு­திய மெல்­லி­சைப் பாடல்­க­ளுக்­கெல்­லாம் இசை­ய­மைத்­த­வர்­கள் அப்­போது திருச்சி வானொலி துறை­யில் இசை­ய­மைப்­பா­ள­ராக பணி­யாற்­றிக்­கொண்­டி­ருந்த இரண்டு மேதை­கள். ஒரு­வர் எஸ்.வி. பார்த்­த­சா­ரதி.  இவர் அண்­ணா­ம­லைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் டைகர் வர­தாச்­சா­ரி­யா­ரி­டம் இசை பயின்று ‘சங்­கீத பூஷ­ணம்’  விருது பெற்­ற­வர். இவர் புகழ் வாய்ந்த நகைச்­சுவை எழுத்­தா­ளர் திரு எஸ். வி. வியின் மக­னும் ஆவார்.

 திருச்சி வானொ­லிக்­காக வாலி எழு­திய பாடல்

`நில­வுக்கு முன்னே

 நீ வர­வேண்­டும்

 நீ வந்த பின்னே

 நில­வெ­தற்கு வேண்­டும்’

வாலி எழு­திய இந்­தப் பாடலை டி.எம்.சவுந்­த­ரா­ஜன் பாடி­னார். சென்­னைக்கு வந்­தால் சினி­மா­வில் புகழ் பெற முடி­யும் என்று வாலியை உற்­சா­கப்­ப­டுத்­தி­னார் டி.எம்.எஸ். கண்­ண­தா­ச­னுக்கு ஜனா­தி­பதி விருது கிடைத்­தது. ஏ.வி.எம் ராஜேஸ்­வரி கல்­யாண மண்­ட­பத்­தில் கண்­ண­தா­ச­னுக்கு ஒரு பாராட்டு விழா நடத்­தி­னார். அந்த விழா­வில் வாலி கலந்து கொண்டு பேசி­னார்.

`என் முன்­னேற்­றத்­தில் எவ­ருக்­கே­னும் வருத்­தம் இருந்­தால் என்­னுள் நம்­பிக்­கையை விதைத்து சினி­மா­விற்கு வர­வேண்­டும் என்று அழைப்பு விடுத்த டி.எம். சவுந்­த­ர­ரா­ஜ­னைத்­தான்  குறை சொல்­ல­வேண்­டும். நான் நிர­ப­ராதி’ என்­றார். இப்­படி வாலி பேசி­ய­தைக் கேட்டு டி.எம்.எஸ் நெகிழ்ந்து போனார். விழா முடிந்­த­தும் எம்.ஜி.ஆர்., உட்­பட பல திரைப்­பட பிர­மு­கர்­கள் கண்­ண­தா­ச­னுக்கு மாலை அணி­வித்­தார்­கள். வாலி­யும் கண்­ண­தா­ச­னுக்கு மாலை சூட்­டி­னார். உடனே கண்­ண­தா­சன் வாலியை  இறுக அணைத்­துக் கொண்டு ‘எங்க ரெண்டு பேரை­யும் போட்டோ எடுங்­கய்யா’ என்று சொல்­லி­விட்டு `வாலி! நீங்க முன்­னுக்கு வந்­த­திலே எனக்கு எந்­த­வித மனத்­தாங்­க­லும்  இல்லை’ என்று வாலி­யின் காதோடு சொன்­னார்.

கண்­ண­தா­ச­னின் அன்­பில் கரைந்து போனார் வாலி. வாலி சினி­மா­வுக்கு வரு­வ­தற்கு முன்­னால் ஒரு முறை அவ­ரு­டைய நண்­பர் மா. லட்­சு­ம­ணன் வாலியை கண்­ண­தா­ச­னி­டம் அழைத்­துச் சென்­றார். அப்­போது கண்­ண­தா­ச­னின் அலு­வ­ல­கம் தி. நகர் உஸ்­மான் சாலை­யில் இருந்­தது. லக்ஷ்­ம­ணன் வாலியை கண்­ண­தா­ச­னி­டம் அறி­மு­கம் செய்து வைத்­த­தும் `தெரி­யுமே திருச்சி ரேடி­யோ­வில் நாட­கம் எல்­லாம் எழு­திக்­கிட்டு இருந்த வாலி­தானே நீங்க?’ என்று கேட்­டார் கண்­ண­தா­சன்.

அவ­ரு­டைய ஞாபக சக்­தியை கண்டு வாலி வியக்­கை­யிலே இரண்டு கோப்­பை­க­ளில் காபி கொண்­டு­

வ­ரப்­பட்டு கவி­ஞர் தன் கையா­லேயே காபி வழங்­கி­னார். `நான் ஒரு தீவி­ர­மான ஆஸ்­தி­கன். நீங்­க­ளும் இப்போ ஆஸ்­தி­கனா  மாறிட்­ட­திலே  எனக்கு ரொம்ப சந்­தோ­ஷம்’ என்று சொன்­னார் வாலி.

`அட! நான் எப்­ப­வுமே ஆஸ்­தி­கன்­தான்.  ஜூபி­டர் பிக்­சர்ஸ்ல இருக்­கு­றப்போ விபூதி குங்­கு­மத்­தோ­டு­தான் இருப்­பேன். சுப்­பையா நாயு­டு­வைக் கேட்­டீங்­கன்னா சொல்­லு­வார்’ என்­றார் கவி­ஞர் கண்­ண­தா­சன். அவர் குறிப்­பிட்­டது இசை­ய­மைப்­பா­ளர் எஸ்.எம். சுப்­பையா நாயு­டு­வைத்­தான்.  உங்­க­ளைப் பற்றி நாலு வரி கவிதை எழு­தி­யி­ருக்­கி­றேன்  கேட்­கி­றீர்­களா?’ என்­றார் வாலி. என்­னைய

பத்­தியா?  சொல்­லுங்க சொல்­லுங்க’ என்று உற்­சா­கத்­தோடு சொன்­னார் கண்­ண­தா­சன்.

 உடனே வாலி

 ‘காட்­டுக்­குள் தேனீக்­கள்

கூட்­டுக்­குள் வைத்­ததை பாட்­டுக்­குள் வைத்­த­வனே!

 காக்கை கூட்­டுக்­குள் குயி­லாக திரி­யா­மல்

 காலம் கழித்­த­வனே’

 இன்­னும் சில வரி­கள் பாடி­னார்.

‘அது என்ன காக்கை கூட்­டுக்­குள் குயி­லாக திரி­யா­மல் காலங்­க­ழித்­த­வ­னேன்­னும்  சொல்­லி­யி­ருக்­கீங்­களே,  அது எந்த அர்த்­தத்­திலே?’

 வாலி விளக்­கி­னார். விளக்­கத்­தைக் கேட்டு வியந்து போனார் கவி­ஞர் கண்­ண­தா­சன்.

(தொட­ரும்)Trending Now: