காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கே.சி. ராமமூர்த்தி பாஜகவில் ஐக்கியம்!

22-10-2019 06:17 PM

புதுடில்லி

மாநிலங்களவை காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கே.சி. ராமமூர்த்தி, இன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்வானவர் கே.சி. ராமமூர்த்தி. இவர், கடந்த அக்டோபர் 16ம் தேதி தன் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தார். அவரது, ராஜினாமாவை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஏற்றுக்கொண்டார்.

இது கர்நாடக காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்த கே.சி.ராமமூர்த்து, பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்துகொண்டார்.

பாஜக தேசிய துணை தலைவர் ஜே.பி நட்டா, பாஜக பொதுச் செயலாளர்கள் பூபேந்தர் யாதவ், அருண் சிங், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் முன்னிலையில், ராமமூர்த்தி கட்சியில் இணைந்துகொண்டார்.

சமீபத்தில், புவனேஷ்வர் கலிதா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.Trending Now: