சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 21–10–19

21-10-2019 04:08 PM

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

பங்­குச்­சந்­தைக்கு இந்த வாரம் ஒரு வசந்­த­மான வாரம் என்றே கூற­லாம். மும்பை பங்­குச்­சந்தை இந்த வாரம்

கிட்­டத்­தட்ட 1100 புள்­ளி­க­ளுக்கு மேல் கூடி­யுள்­ளது முக்­கி­ய­மா­னது விஷ­யம் ஆகும். இது­த­விர மிட் கேப் பங்­கு­கள் இந்­த­வா­ரம் 5%, ஸ்மால் கேப் பங்­கு­கள் 3% கூடி­யுள்­ளன.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை  246 புள்­ளி­கள் கூடி  39298 புள்­ளி­க­ளு­ட­னும், தேசிய பங்­குச் சந்தை  75 புள்­ளி­கள் கூடி  11661  புள்­ளி­க­ளு­டன் முடி­வ­டைந்­தது.

இது மும்பை பங்­குச் சந்­தை­யில் சென்ற வாரத்தை விட 1171 புள்­ளி­கள் கூடு­த­லா­கும்.

எப்­படி கூடி­யது? ஏன் கூடி­யது?

அமெ­ரிக்கா, சீனா வர்த்­தக பேச்சு வார்த்­தை­க­ளில் சிறிய முன்­னேற்­றம். பிரிட்­டன் பிரிக்­சிட் உடன்­பாடு. வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் 9000 கோடி வரை இந்­திய சந்­தை­க­ளில் வாங்­கி­யது. இவை­யெல்­லாம் இந்த வாரம் சந்­தை­கள் மேலே செல்­வ­தற்கு கார­ண­மாக இருந்­தி­ருக்­கின்­றன.

இது­த­விர மேலே செல்­வ­தற்கு பெரிய கார­ணங்­கள் இல்லை. உள்­நாட்­டில் ஏற்­று­மதி, இறக்­கு­மதி இரண்­டும் குறைந்­தி­ருக்­கி­றது. கிரா­மப்­பு­றங்­க­ளில் மக்­க­ளின் உப­யோ­கம் கடந்த 7 வரு­டங்­க­ளில் குறை­வான அள­வாக தற்­போது இருக்­கி­றது.

காலாண்டு முடி­வு­கள்

காலாண்டு முடி­வு­கள் என்று வைத்­துப் பார்க்­கும்­போது இந்த வாரம் காலாண்டு முடி­வு­கள் சந்­தைக்கு சாத­க­மா­கவே இருந்­தன. ஹெயூ­எல் கம்­பெனி சென்ற வரு­டம் இதே காலாண்­டில் விட 21 சத­வீ­தம் கூடு­த­லாக லாபம் ஈட்­டி­யுள்­ளது. இதே போலவே ரிலை­யன்ஸ், விப்ரோ, டிசி­எஸ், ஏசிசி போன்ற கம்­பெ­னி­க­ளும் சென்ற வரு­டம் இதே காலாண்­டில் விட இந்த வரு­டம் காலாண்­டில் கூடு­தல் லாபங்­களை ஈட்டி உள்­ளன.

மோட்­டார் கம்­பெ­னி­யின்  பங்­கு­கள்

மோட்­டார் கம்­பெ­னி­க­ளின் பங்­கு­கள் இந்த வாரம் பார்த்­தால் இந்த வாரம் பெரும்­பா­லான மோட்­டார் கம்­பெ­னி­க­ளின் பங்­கு­கள் மேலே சென்­றன. குறிப்­பாக மாருதி சுசுகி கம்­பெனி இந்த வாரம் சுமார் 9 சத­வீ­தம் வரை மேலே சென்­றது குறிப்­பி­டத்­தக்­கது. இதை இரண்டு வித­மாக எடுத்­துக்­கொள்­ள­லாம் ஒன்று பண்­டி­கைக்­கால விற்­ப­னை­கள் கூடு­த­லாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப் படு­வது,  இரண்­டா­வது பொது­வா­கவே இந்த மாதத்­தில் விற்­ப­னை­கள் கூடி இருக்­கி­றது என்­றும் எடுத்­துக்­கொள்­ள­லாம். மோட்­டார் கம்­ப­னி­க­ளின் பங்­கு­களை தொடர்ந்து வைத்­தி­ருப்­ப­வர்­கள் இந்த ஏற்­றத்­தால் சிறிய ஆறு­தல் அடைந்­தி­ருப்­பார்­கள்.

புதிய வெளி­யீ­டு­கள்

ஐஆர்­சி­டிசி கம்­பெ­னி­யின் பங்­கு­களை அப்ளை செய்­யுங்­கள் என்று வலி­யு­றுத்­திக் கூறி இருந்­தோம். அப்­படி அப்ளை அப்ளை செய்­த­வர்­க­ளில் கிடைத்­த­வர்­க­ளுக்கு நல்ல ஒரு ஜாக்­பாட் சென்­ற­வா­ரம் கிடைத்­தி­ருக்­கும். சிறிய முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு  310 ரூபாய் அள­வில் கொடுக்­கப்­பட்ட பங்­கு­கள் இந்த வார கடை­சி­யில் சுமார் 780 ரூபாய் வரை சென்­றி­ருக்­கி­றது. உங்­க­ளு­டைய அறி­வுரை அலாட்­மெண்ட் கிடைத்­த­வர்­கள்  தற்­போது விற்று வெளி­யேறி பின்­னர் பங்­கு­கள் விலை குறை­யும் போது வாங்­கிக் கொள்­ள­லாம்.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

அடுத்த வாரம் பல பெரிய கம்­பெ­னி­க­ளின் காலாண்டு முடி­வு­கள் வெளி­யாக உள்­ளன. அவை சந்­தை­க­ளின் போக்கை நிர்­ண­யிக்­கும் என எதிர்­பார்க்­க­லாம்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.comTrending Now: