ஸ்டார்ட் அப்: இன்­னொரு 59 நிமிட லோன்

21-10-2019 04:05 PM

அப்ளை செய்த 59 நிமி­டத்­தில் தேசி­ய­ம­ய­மாக்­கப்­பட்ட வங்­கி­க­ளின் மூலம் உங்­க­ளுக்கு பிசி­னஸ் லோன் (டோர்ம் லோன் மற்­றும் வொர்க்­கிங் கேபி­டல் லோன்) இன் பிரின்­ஸி­பல்  சாங்­ஷன் செய்­யப்­ப­டும் என்ற அர­சாங்க அறி­விப்­பு­கள் கடந்த வரு­டத்­தில் வந்­தது எல்­லோ­ருக்­கும் ஞாப­கம் இருக்­க­லாம்.

இது சக்­ஸஸ் என்று ஒரு புற­மும், இல்லை தோல்வி என்று மறு­பு­ற­மும் கருத்­துக்­கள் குவிந்­தன.  அப்ளை செய்து பல நாட்­கள் ஆகி­யும் எந்த பதி­லும் இல்லை என்ற குரல்­க­ளும் ஒலிக்க  ஆரம்­பித்­தன.  

அவை ஓய்ந்து இருக்­கும் சம­யத்­தில் இன்­னொரு 59 நிமிட லோன் அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

இது தற்­போது பர்­ச­னல் லோன், கார் லோன் வேண்­டு­ப­வர்­கள் அப்ளை செய்­ய­லாம் என்ற அறி­விப்பு தான்.  

பர்­ச­னல் லோன், கார் லோன், வீட்­டுக் கடன் தேசி­ய­ம­ய­மாக்­கப்­பட்ட வங்­கி­க­ளின் மூலம் வாங்­கு­வது வட்டி குறைவு என்­றா­லும், காலம் கடந்து வழங்­கப்­ப­டு­வ­தால் இந்த வங்­கி­க­ளி­டம் அதி­கம் யாரும் செல்­வ­தில்லை. பெரும்­பா­லும் என்.பி.எப்.சி., நிறு­வ­னங்­க­ளில் சென்று வாங்கி விடு­கி­றார்­கள் வட்டி கூடு­த­லாக இருந்­தா­லும் உட­ன­டி­யாக லோன் கிடைத்து விடு­வ­தால்.

இதை அறிந்து கொண்ட தேசி­ய­ம­ய­மாக்­கப்­பட்ட வங்­கி­கள் தற்­போது இந்த பிரி­வு­க­ளில் அதி­கம் கவ­னம் செலுத்­து­கின்­றன. அதன் விளைவு தான் இந்த 59 நிமிட லோன் சாங்­ஷன். இது போல லோன்­கள் கொடுக்­கும் போது வாராக்­க­டன்­கள் சத­வீ­தம் குறை­வாக இருப்­பது ஒரு முக்­கி­ய­மான விஷ­யம்.

பர்­ச­னல் லோன் ரூபாய் 15 லட்­சம் வரை­யி­லும், கார் கடன்­கள் ரூபாய் 1 கோடி வரை­யி­லும், வீட்­டுக் கடன்­கள் ரூபாய் 10 கோடி வரை­யி­லும் தர இந்த இணை­ய­த­ளம் மூலம் பெற வாய்ப்­புக்­கள் உண்டு.  

என்­னென்ன டாக்­கு­மெண்­டு­கள் இணைக்­கப்­பட வேண்­டும் என்­பதை பற்­றிய முழு விப­ரங்­கள் கீழ்­கண்ட அர­சாங்க இணை­ய­த­ளத்­தில் இருக்­கின்­றது.

கீழ்­கண்ட இண­ய­த­ளத்­திற்கு செல்­ல­வும். https://www.psbloansin59minutes.com/home

எப்­படி அப்ளை செய்ய வேண்­டும் என்­றும், எந்­தெந்த லோனுக்கு எந்­தெந்த டாக்­கு­மெண்­டு­கள் இணைக்­கப்­பட வேண்­டும் என்­றும் தெளி­வாக இந்த இணை­ய­த­ளத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது தவிர உங்­க­ளுக்கு ஏற்­ப­டும் சந்­தே­கங்­க­ளுக்கு விடை­ய­ளிக்­கும் வித­மாக “அடிக்­கடி கேட்­கப்­ப­டும் கேள்­வி­கள்” என்ற தலைப்­பு­க­ளில் ஒவ்­வொரு லோனுக்­கும் விளக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.Trending Now: