ஸ்டார்ட் அப் கம்­பெ­னி­க­ளுக்கு விப்­ரோ­வின் உதவி

21-10-2019 04:04 PM

விப்ரோ கம்­பெ­னியை தெரி­யா­த­வர்­கள் இருக்க முடி­யாது. ஒரு சாதா­ரண சிறிய கம்­பெ­னி­யாக ஆரம்­பிக்­கப்­பட்டு இன்று பல்­லா­யி­ரம் கோடிக்­க­ணக்­காண மதிப்­புள்ள கம்­பெ­னி­யாக வளர்ந்­தி­ருக்­கி­றது.

இன்று அப்­படி உயர்ந்த நிலைக்கு வளர்ந்த பின்­னும், வள­ரும் கம்­பெ­னி­களை ஊக்­கு­விக்­கும் முக­மாக ஒரு 200 கோடி ரூபாய் ஸ்டார்ட் அப் பண்ட் ஒன்றை ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

ஒரு கம்­பெ­னிக்கு 20 கோடி ரூபாய் என்ற வகை­யில் பத்து கம்­பெ­னி­க­ளில் முத­லீடு செய்ய இருக்­கி­றது. அப்­படி முத­லீடு செய்­யும் போது அந்த கம்­பெ­னி­கள் குறைந்­த­பட்­சம் ஒரு கோடி ரூபாய் லாபம் ஈட்­டும் கம்­பெ­னி­கள் ஆக இருக்க வேண்­டு­மென்­பதை விரும்­பு­கி­றது.

விப்ரோ மட்­டு­மல்ல, மாரிகோ, டாபர், ஹெயூல் ஆகிய கம்­பெ­னி­க­ளும் இது­போன்ற ஸ்டார்ட்­அப் கம்­ப­னி­யில் முத­லீடு செய்­வதை விரும்­பு­கின்­ற­னர். இதன்­மூ­லம் என்ன தெரி­கி­றது நல்ல கம்­பெ­னி­க­ளுக்கு பெரிய கம்­பெ­னி­க­ளி­ட­மி­ருந்து  வர­வேற்பு இருக்­கி­றது என்­பது தெளி­வாக தெரி­கி­றது.Trending Now: