உத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: 12 பேர் பலி

14-10-2019 09:58 AM

லக்னோ,      

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்த வீடு ஒன்றில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில், 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் காயமடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் மவு மாவட்டம் வாலித்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால், 2 மாடி கொண்ட அந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் உடல்நிலை சரியில்லாததால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தேவையான நிவாரண உதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.Trending Now: