ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு

13-10-2019 01:12 PM

ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.

ராஜஸ்தானில் பிகானீர் மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் இன்று காலை 10.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தினை உணர்ந்தவுடன், நிலநடுக்கம் பற்றிய செய்திகள் பிகானீர் பகுதியில் பரவியவுடன், பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
எனினும், நிலநடுக்கம் பற்றிய வதந்தி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அரசு நிர்வாகம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என பிராந்திய MeT துறை இயக்குனர் சிவ் கணேஷ் கூறியுள்ளார்.

இன்றைய நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.Trending Now: