இந்திய துணைக்கண்ட அல்கொய்தா தலைவர் ஆப்கானிஸ்தானத்தில் சுட்டுக்கொலை

08-10-2019 09:06 PM

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இந்திய துணைக்கண்ட அல்கொய்தா பிரிவின் தலைவர் ஆசிம் உமர் சுட்டுக் கொல்லப்பட்டார் என ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவமும் ஆப்கானிஸ்தான் ராணுவமும் இணைந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த தாக்குதல் நடந்தபோது உமர் கொல்லப்பட்டார் என்ற தகவல் அக்டோபர் மாதம் எட்டாம் தேதி தான் உறுதி செய்யப்பட்டது என ஆப்கானிஸ்தான் செய்தி கூறுகிறது.

இவர் ஆசிம் உமர் என்று அழைக்கப்பட்டாலும் இதைத் தவிர வேறு பல பெயர்களும் அவருக்கு உண்டு. அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டாலும் அவர் இந்தியாவில் பிறந்தவர் என்று ஆப்கானிஸ்தானில் சில செய்திகள் கூறுகின்றன.

அல்-கொய்தா இயக்கம் தெற்கு ஆசியாவில் துவக்கப்பட்ட போது இந்தியாவில் சீக்கியர்கள் மத்தியில் இருந்த அல்கொய்தா பிரிவின் உமர் பணியாற்றினார் என்றும் கூறப்படுகிறது.

அவர் பாகிஸ்தானில் சில காலம் பணியாற்றினார் என்றும் கூறப்படுகிறது ஒரு பெரிய வளாகத்தில் நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது .

2014ஆம் ஆண்டு இந்தியத் துணைக்கண்டத்தில் அல்கொய்தா பிரிவு துவக்கப்பட்ட போது அந்தப் பிரிவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். உமருக்கு இப்பொழுது 48 வயதாகிறது என்ன பாகிஸ்தான் செய்தி ஒன்று கூறுகிறது.

உமர் பலநாடுகளில் அல்கொய்தா அமைப்புடன் இணைந்து பணியாற்றிய போதிலும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்புவதற்கு முன்னர் சிரியாவில் பணிபுரிந்தார் என்று பாகிஸ்தான் உளவு அறிக்கை ஒன்று கூறுகிறது.Trending Now: