நையாண்டி விமர்­ச­னம்!

08-10-2019 07:14 PM

24 மணி­நேர செய்­தி­க­ளை­யும், அன்­றாட அர­சி­யல் நிகழ்­வு­க­ளை­யும் நையாண்டி + கல­கல தொகுப்­பாக தரும் இவன் ‘இவன் தந்­தி­ரன்’, தினந்­தோ­றும் இரவு 9 மணிக்கு கலை­ஞர் செய்­தி­க­ளில் ஒளி­ப­ரப்­பா­கி­றது.

யூ டியூப் பார்­வை­யா­ளர்­க­ளி­டம் பிர­ப­ல­மான வர­வணை செந்­தில் தொகுத்து வழங்­கும் இந்­நி­கழ்ச்­சி­யில், அர­சி­யல் தலை­வர்­க­ளாக அரி­தா­ரம் பூசி வரு­கி­றார்­கள் நக்­க­லைட்ஸ்- – மஞ்ச நோட்­டீஸ் புகழ் ஜென்­சன் திவா­கர் மற்­றும் முர­சொலி.

சம­கால அர­சி­யல்­வா­தி­கள் தொடங்கி ஹிட்­லர் வரை இவர்­கள் நடத்­தும் கற்­பனை நேர்­கா­ணல் பகுதி தற்­கால அர­சி­ய­லை­யும், அட்­மின்­க­ளின் உள­றல்­க­ளை­யும் சம­ர­சம் இல்­லா­மல் நையாண்டி செய்­வ­தில் தயங்­கு­வ­தில்லை. அதே நேரத்­தில் நீட் திணிப்பு பிரச்­னை­கள், இந்தி திணிப்பு நட­வ­டிக்­கை­கள் போன்ற தமிழ் மக்­களை பாதிக்­கும் பிரச்­னை­க­ளும் நேர­டி­யாக விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றன.Trending Now: