ஆத்­ம­லிங்­கத்­துக்­காக பூலோ­கம் வரும் பாம்பு!

08-10-2019 07:13 PM

விஜய் டிவி­யின் மற்­றொரு புதிய மெகா சீரி­யல் ‘தாழம்பூ’ திங்­கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. ராஜீவ் மேனன் உத­வி­யா­ளர் சண்­மு­கம் டைரக்ட் செய்­கி­றார்.

நாக­லோ­கம், பாம்­பு­க­ளின் உல­கம்.  அவர்­க­ளின் தலை­வர், நாக­யோகி.  வாசுகி, அவ­ரது மகள். நாகா, நாக­லோ­கத்­தின் இளம் போர் வீரன். வாசு­கி­யும் நாகா­வும் நிச்­ச­யம் ஆன­வர்­கள். அவர்­க­ளது பொக்­கி­ஷ­மான ஆத்­ம­லிங்­கம் நாக­லோ­கத்­தில் தொலைந்து விடு­கி­றது. ஆத்­ம­லிங்­கம் இல்­லை­யென்­றால், அவர்­க­ளது சக்­தி­கள் முழுமை பெறாது.  அவர்­க­ளது உல­கமே அழி­யும் நிலை ஏற்­பட்­டு­வி­டும். அந்த நிலை­யில் ஆத்­ம­லிங்­கத்தை மீட்­டெ­டுக்க நாகா  பூலோ­கம் வரு­கி­றான். இந்த நிலை­யில், அழ­கிய இளம் பெண் ரேவதி மற்­றும் அவ­ளது குடும்­பத்­தி­னர் ஆத்­ம­லிங்­கத்தை பாது­காத்து பூஜித்து வரு­கின்­ற­னர்.  

நாகா மானி­ட­னாக உரு­மாறி பூலோ­கம் வரு­கி­றான். ஆத்­ம­லிங்­கத்தை மீட்­டெ­டுக்­கும் நோக்­கில் ரேவ­தி­யி­டம் நெருங்கி பழ­கு­கி­றான்.  ரேவதி நாகாவை காத­லிக்­கி­றாள். அவ­ளுக்கு நாகா மனி­தன் அல்ல பாம்பு என்று தெரி­ய­வ­ரு­கி­றதா? ஆத்­ம­லிங்­கத்தை காப்­பாற்­று­கி­றாளா?

நாகா­வாக அம்­ரித்­தும், ரேவ­தி­யாக சாந்­தி­னி­யும், வாசு­கி­யாக அங்­கனா ராயும், நாக­யோ­கி­யாக காளி­தா­சும், சண்­மு­க­நா­த­னாக ரவி­யும் நடிக்­கின்­ற­னர்.Trending Now: