ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 9–10–19

08-10-2019 06:58 PM

எந்த சொல்லும் மந்திரம்தான்!

(சென்ற வார தொடர்ச்சி...)

நாம் சொல்­லும் எந்த சொல்­லும் மந்­தி­ர­மா­கும். அதற்கு ஒரு உதா­ர­ணம் சொல்­கி­றேன். ஒரு பெரிய சித்­தர் ஞானி காடுமேடு­க­ளில் அலைந்து கொண்­டி­ருந்­தார்.

அவரை உணர்ந்து புரிந்து கொண்ட மக்­கள் அவ­ருக்கு பழங்­கள் கொடுப்­பார்­கள். அவரை வணங்கி தங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள சந்­தே­கங்­களை கேட்டு பதிலை பெற்று செல்­வார்­கள். இதை­யெல்­லாம் அங்கு மாடு மேய்க்­கும் சிறு­வன் வேடிக்கை பார்த்து கொண்­டி­ருந்­தான். ஒரு நாள் சிறு­வன் அந்த சித்­த­ரி­டம் வந்து, ‘‘சாமி எல்­லோ­ருக்­கும் ஏதா­வது சொல்­றீங்­களே எனக்­கும் ஏதாச்­சும் சொல்­லுங்­க­ளேன்’’ என்­றான்.

அப்­போது அவர் மாம்­ப­ழம் சாப்­பிட்­டுக் கொண்­டி­ருந்­தார். அதை சாப்­பிட்டு முடித்து வெறும் கொட்டை மட்­டும் இருந்­தி­ருக்­கி­றது. அதை அவர் அந்த சிறு­வன் கையில் துாக்­கிப்­போட்டு இந்தா இதை வைத்து பூஜை பண்ணு என்று சொல்லி­விட்­டார். அந்­தச் சிறு­வன் வீட்­டுக்கு வந்து அந்த மாங்­கொட்­டையை வைத்­துக் கொண்டு, திரும்ப திரும்ப ‘மாங்­கொட்டை.... மாங்­கொட்டை...’ என்று ஜெபிக்க தொடங்கி விட்­டான். அந்த ஜெபத்­தின் பல­னாக பிற்­பாடு பெரிய சாமி­யா­ராகி 'மாங்­கொட்டை சித்­தர்' என்ற பெய­ரில் பிர­ப­ல­மா­னார். அந்த சித்­த­ரின் சமாதி மது­ரை­யில் இருக்­கி­றது. இத­னால் இந்த சொல்­தான் மந்­தி­ரம், அந்த சொல்­தான் மந்­தி­ரம் என்று நினைக்க வேண்­டாம். எல்லா சொல்­லுக்­கும் மந்­திர சக்தி உள்­ளது.

சித்­தர் கரு­வூ­ரார் பற்­றி­யும் சொல்­கி­றேன். அவர் கரு­வூ­ரில் அம்­பாள் கோயில் கட்டி இருக்­கி­றார். சுத்­த­மான தங்­கத்­தில் செய்­வத்­தின் சிலை செய்ய வேண்­டும் என விருப்­பம் கொண்ட ராஜ­ரா­ஜன், அவ்­வாறு செய்ய முடி­யா­த­வருக்கு தண்­டனை கொடுத்து வந்­தான்.

அப்­போது கரு­வூ­ரார் சிலையை செய்து காட்­டி­னார். அசந்து போன அர­சன், அவரை தன் குரு­வாக ஏற்று கொண்­டான். அப்­போது அர­ச­னைப் பார்த்து கரு­வூரார், ''மூட அர­சனே! சுத்­த­மான தங்­கத்­தில் எந்த பொரு­ளை­யும் செய்ய முடி­யாது. கொஞ்­சம் செம்பு கலந்­தால்­தான் அது வளை­யும் தன்­மைக்கு வரும்'' என்ற உண்­மையை சொன்­னார்.

அதை கேட்டு மகிழ்ச்­சி­ய­டைந்த மன்­னன், கரு­வூ­ரா­ரின் ஆலோ­ச­னைப்­படி தஞ்சை பெரிய கோயிலை கட்­டி­னான். கும்­பா­பி­ஷே­கம் செய்­யும் போது, அவர் கூறிய வழி­யில் செய்­யா­மல், மந்­திரி சில பிர­தா­னி­க­ளின் பேச்சை கேட்டு சித்­தர் கூறி­ய­தில் பாதி­யும், மற்­றவை மீதி­யு­மாக கும்­பா­பி­ஷே­கம் நடத்­தி­னான். பிர­க­தீஸ்­வ­ரர் என்ற லிங்­கத்­தில் மருந்து பிடிக்­க­வில்லை என கரு­வூ­ரா­ரி­டம் சொல்ல, அவர் சென்று பார்த்து வாயில் குதப்­பி­யி­ருந்த வெற்­றிலை எச்­சிலை அதன் மேல் துப்பி, இப்­போது லிங்­கத்தை வையுங்­கள் என்று சொல்ல, மருந்து பிடித்­துக் கொண்­டது. லிங்­கம் பிர­திஷ்­டை­யா­னது.

ராஜ­ரா­ஜனை அழைத்து ‘‘நான் உனக்கு நல்­லது நடக்க வேண்டி கும்­பா­பி­ஷேக முறையை சொன்­னேன். நீயோ ஒரு அர­சன் என்ற ஆண­வத்­தால் யார் யாரையோ திருப்­தி­ப­டுத்த ஏதோ ஒரு முறை­யில் கும்­பா­பி­ஷே­கத்தை நடத்­தி­விட்­டாய். என் சொல் ஏறாத இடத்­தில் எனக்­கென்ன வேலை? ஆத­லால் இங்­கேயே இப்­போதே இந்த இடத்­தி­லேயே சமா­தி­யா­கி­றேன்’’ என்று குழி­யைத் தோண்டி உள்­ள­மர்ந்து ஜீவ­ச­மா­தி­யில் ஆழ்ந்து சீடர்­களை அதை மூடச் சொன்­னார். சமா­தி­யும் ஆகி­விட்­டார். அதற்கு முன் கரு­வூ­ரார் சொன்­னது....

ஆண­வத்­தால் நிமிர்ந்­தி­ருக்­கும் நீ கட்­டிய கோயிலை தரி­சிக்க வந்­தால் வந்­தோர் பதவி இழப்­பார்­கள் என்று சாப­மும் தந்­து­விட்­டார். இதன்­படி இந்த கோயி­லுக்கு வரும் இந்­திய அள­வில் பிர­ப­ல­மான அர­சி­யல் தலை­வர்­க­ளும், தமி­ழ­கத் தலை­வர்­க­ளும் இன்­னும் உயர்­மட்ட பொறுப்­பில் இருப்­ப­வர்­க­ளும் தங்­கள் பத­வியை இழப்­பார்­கள். இக்­கு­றிப்பு கன்­னி­மாரா நுால­கத்­தில் உள்­ளது.Trending Now: