சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 7–10–19

06-10-2019 06:35 PM

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

சென்ற வாரம் சந்­தை­க­ளில்  நிர்­மலா சீதா­ரா­மன் அவர்­க­ளின் அறி­விப்­பிற்கு பிறகு ஒரு பெரிய ரெக்­க­வரி இருந்­தது.  ஆனால் சந்­தை­கள் இந்த வாரம் ஒரு யூ-டர்ன் அடித்­தது என்றே கூற­லாம். கார­ணம் செண்­டி­மெண்ட் தான்.

அமெ­ரிக்­கா­வில் சந்­தை­கள் விழுந்­தது,  இந்த வார மானிட்­டரி பாலி­சி­யில் குறு­கிய காலத்­தில் இந்­திய பொரு­ளா­தா­ரத்­தில் பெரிய திருப்­பங்­கள் இருக்­காது என்று கூறப்­பட்­டது ஆகி­யவை கார­ணங்­க­ளாக கொண்டு சந்­தை­கள் இறங்­கிக்­கொண்டே சென்­றது.

 மானிட்­டரி பாலி­சி­யில் 25 புள்­ளி­கள் சத­வீ­தம் வட்டி விகி­தங்­கள் குறைக்­கப்­பட்டு இருந்­தா­லும் சந்­தை­கள் அதை பெரி­தாக எடுத்­துக் கொள்­ள­வில்லை. அன்­றைய தினம் சந்­தை­கள் பெரிய இறக்­கத்­தி­லேயே முடி­வ­டைந்­தன.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை 433    புள்­ளி­கள் குறைந்து    37673        புள்­ளி­க­ளு­ட­னும், தேசிய பங்­குச் சந்தை 139    புள்­ளி­கள் குறைந்து      11174    புள்­ளி­க­ளு­ட­னும் முடி­வ­டைந்­தன.  மும்பை பங்­குச்­சந்­தை­யில் இது கடந்த வாரத்தை விட 808 புள்­ளி­கள் கூடு­த­லா­கும்.

தனி­யார் வங்­கி­கள்

சில தனி­யார் வங்­கி­கள் கடந்த ஒரு வரு­ட­மா­கவே தள்­ளா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றன. யெஸ் பேங்க் கார்ப்­பட்­ரேட் கவர்­னன்ஸ் சரி­யில்­லாத வகை­யில் பங்­குச் சந்­தை­யில் அதன் பங்­கு­கள் தொடர்ந்து அடி வாங்­கிக் கொண்­டி­ருக்­கின்­றன.  

இந்த வகை­யில் யெஸ் பாங்கை தொடர்ந்து தள்­ளா­டும் வங்­கி­கள் ஆர்­பி­எல் பேங்க், இண்­டஸ் இண்ட் பேங்க், லெஷ்மி விலாஸ் பாங்க் ஆகி­யவை ஆகும்.  இந்த வங்­கி­க­ளில் நீங்­கள் பங்­கு­கள் வைத்­தி­ருந்­தால் அவற்றை சமீப காலத்­திற்கு குறைத்­துக் கொள்­வது நல்­லது.   ஆர்­பி­எல் பேங்க் கடந்த ஒரு வரு­டத்­தில் கிட்­டத்­தட்ட பங்கு மதிப்­பில் 50 சத­வீ­தம் விழுந்­துள்­ளது.  இன்­டஸ் இந்த் பாங்க் கடந்த ஒரு வரு­டத்­தில் தனது பங்கு மதிப்­பில் 30 சத­வீ­தம் இழந்­துள்­ளது குறிப்­பி­ட­தக்­கது. லெஷ்மி விலாஸ் பாங்க் ஒரு வரு­டத்­திற்கு முன்பு ஒரு பங்­கின் விலை சுமார் 100 ரூபா­யாக இருந்­தது தற்­போது 30 ரூபாய் அள­வில் வந்து விட்­டது.

யெஸ் பாங்­கின் மொத்த நெட் வொர்த் 29000 கோடி ரூபாய். வாராக் கடன் 15000 என்று தள்­ளு­படி செய்­தா­லும் மீத­முள்ள நெட்­வொர்த் 14000கோடி ரூபாய் பாசி­டிவ் நெட்­வொர்த்­தாக இருக்­கி­றது.

மேலும் பாங்­கின் சி.ஈ.ஓ., இந்த வாரம் இன்­வஸ்­டர் மற்­றும் அன­லிஸ்­ட­க­ளி­டம் வங்கி பேசும் போது வங்­கி­யின் தொடர்ந்த நட­வ­டிக்­கை­கள் எப்­படி இருக்­கும் என்று விளக்­கி­யி­ருக்­கி­றார். இத­னால் இந்த வாரம் மட்­டும் இந்த பங்கு 30 சத­வீ­தத்­திற்கு மேல் கூடி­யி­ருக்­கி­றது.

புதிய வெளி­யீடு

இந்­தி­யன்  ரயில்வே கேட­ரிங் அண்ட் டூரி­சம் கார்ப்­ப­ரே­ஷன் கம்­பெ­னி­யின் (ஐ.ஆர்.சி.டி.சி.,)  புதிய வெளி­யீடு சென்­ற­வா­ரம் வெளி­வந்­தி­ருந்­தது. இந்த வெளி­யீட்­டில் கட்­டா­யம் பங்கு பெறுங்­கள் என்று கூறி­யி­ருந்­தோம்.  அப்­படி பங்கு பெற்­ற­வர்­க­ளில் அலாட்­மெண்ட் உங்­க­ளுக்கு கிடைக்­கப் பெற்­றால் நீங்­கள் அதிர்ஷ்­ட­சாலி.  கார­ணம் என்­ன­வென்­றால் இந்த வெளி­யீடு மொத்­த­மாக 112 தட­வை­கள் செலுத்­தப்­பட்டு முடி­வ­டைந்து இருக்­கி­றது.  சிறிய முத­லீட்­டா­ளர்­கள் பகுதி சுமார் 15 தட­வை­கள் செலுத்­தப்­பட்ட முடி­வ­டைந்து இருக்­கி­றது. ஒரு ஆச்­ச­ரி­ய­மான விஷ­யம் அங்கு வேலை பார்க்­கும் எம்­பி­ளா­யீஸ் கோட்டா ஆறு தட­வை­கள் செலுத்­தப்­பட்ட முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது. பல தட­வை­கள், பல கம்­பெ­னி­க­ளில் எம்­பி­ளா­யீஸ் கோட்டா ஒரு தடவை கூட செலுத்­தப்­ப­டா­மல் முடி­வ­டை­யும் நிலையே உள்­ளது.  இந்த வெளி­யீட்­டிற்கு க்ரே மார்க்­கெட்­டில் ஒரு பங்­கிற்கு சுமார் 160 ரூபாய் வரை ப்ரிமி­யம் உள்­ளது குறிப்­பி­ட­தக்­கது.

நல்ல செய்­தி­கள் பெரி­தாக இல்லை

செப்­டம்­பர் ஆட்டோ சேல்ஸ் சென்ற வரு­டம் இதே மாதத்தை வைத்து பார்க்­கும் போது மிக­வும் குறை­வாக இருக்­கி­றது. ஜி.எஸ்.டி. கலெ­க்ஷன் 19 மாத குறை­வான தொகை­யாக 91000 கோடியை செப்­டம்­ப­ரில் வசூ­லித்­துள்­ளது. இவை­யெல்­லாம் சந்­தைக்கு நெக­டி­வான செய்­தி­கள் ஆகும்.

லாப­முள்ள பங்­கு­கள்

20 சத­வீ­தத்­திற்கு மேல் லாபம் உள்ள பங்­கு­களை விற்று விட்டு பின்­னர் நீங்­கள் விற்ற விலையை விட குறை­வாக வரும் போது சிறிது சிறி­தாக வாங்­குங்­கள். அது தான் இந்த சந்­தை­யில் ஒரு நல்ல முடி­வா­கும்.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

இண்­டஸ்­டி­ரி­யல் புர­ட­க்ஷன் நம்­பர்ஸ் (ஐ.ஐ.பி.) வியா­ழ­னன்று வர­வி­ருக்­கி­றது. காலாண்டு முடி­வு­கள் அடுத்த வாரம் தொடங்­க­வி­ருக்­கி­றது. அது எப்­படி இருக்­கி­றது என்­பது மிக­வும் முக்­கி­யம். காலாண்டு முடி­வு­கள் சந்­தையை வரும் வாரங்­க­ளில் வழி நடத்­தும் என்­றால் மிகை­யா­காது.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com

Trending Now: