ஏற்­று­மதி உல­கம்: மலே­ஷி­யா­விற்கு ஏற்­று­மதி செய்ய

06-10-2019 06:32 PM

மலே­ஷி­யா­விற்கு ஏற்­று­மதி செய்ய கீழ்­கண்ட இணை­ய­த­ளங்­கள் உத­வி­யாக இருக்­கும். சென்று பாருங்­கள்.

Ministry of International Trade and Industry, Malaysia: www.miti.gov.my

Malaysia External Trade Dev.Corp.: www.matrade.gov.my

Malaysia Timber Council : www.mtc.gov.my

Dept.of Statistics, Malaysia: www.statistics.gov.my

Federation of Malaysian Manufacturer: www.fmm.org.my  

ஏற்­று­மதி இறக்­கு­ம­தி­யில்

ஏற்­ப­டும் சர்ச்­சை­களை

எவ்­வாறு தீர்ப்­பது?

ஏற்­று­மதி / இறக்­கு­மதி சர்ச்­சை­கள் தீர்த்­தல் (Resolving Disputes in Exports / Imports)

எவ்­வ­ள­வு­தான் நீங்­கள் கவ­ன­மாக ஏற்­று­மதி / இறக்­கு­மதி ஒப்­பந்­தங்­கள் (Export/Import Contracts) போட்­டா­லும், ஆவ­ணங்­கள் (Documents) தயார் செய்­தா­லும் சர்ச்­சை­க­ளைத் தவிர்க்க இய­லாது.

ஒப்­பந்­தங்­கள் போடும்­போது அதில் உள்ள ஒரு ஷரத்து (Clause) இவ்­வ­கை­யில்­தான் அர்த்­தம் தொனிக்­கி­றது என்று நீங்­கள் நினைத்­தி­ருப்­பீர்­கள். ஆனால், வெளி­நாட்­டில் உள்­ள­வரோ (இறக்­கு­ம­தி­யா­ளர்) வேறு­வ­கை­யில் நினைத்­தி­ருக்­கக்­கூ­டும். இது உங்­கள் இரு­வ­ருக்­கி­டையே சர்ச்­சை­களை எழுப்­பக்­கூ­டும்.

மேலும், முன்பு கூறி­ய­படி பல வெளி­நாட்டு வர்த்­த­கங்­கள் தொலைவு கார­ண­மாக ஒரு­வரை ஒரு­வர் நேர­டி­யா­கப் பார்க்­கா­ம­லேயே ஒப்­பந்­தங்­கள் மூல­மா­கவோ நடை­பெ­று­கி­றது. பல­ருக்கு தற்­ச­ம­யம் ஒப்­பந்­தங்­கள் போடவே நேரம் இருப்­ப­தில்லை.

வர்த்­த­கங்­கள் தொலை­பேசி மூல­மா­கவோ அல்­லது தந்தி, தொலை­ந­கல் (Fax), மின் அஞ்­சல் (E-mail) மூல­மா­கவோ நடை­பெ­று­கி­றது. இன்­னும் பல சம­யங்­க­ளில் ஏஜண்­டு­க­ளின் மூல­மாக நடை­பெ­று­கி­றது.

ஆத­லால் வெளி­நாட்டு வர்த்­த­கத்­தில் ஏற்­ப­டும் சர்ச்­சை­களை எப்­படி தீர்ப்­பது என்று அறிந்து கொள்­வது அவ­சி­யம்.

சர்ச்­சை­கள் எத­னால் ஏற்­ப­ட­லாம்?

1. வாய்­வழி ஒப்­பந்­தங்­கள்

2. விலைக்­கு­றி­யீ­டு­களை (Incoterms 2010) சரி­யாக புரிந்து கொள்­ளா­த­தால் ஏற்­ப­டும் சர்ச்­சை­கள்.

3. இரு­வ­ருக்­கி­டை­யே­யான மொழிப் பிரச்­னை­யால் புரிந்து கொள்­வ­தில் ஏற்­ப­டும் சிர­மங்­கள்

4. அவ­ர­வர் நாட்­டுப் பழக்க வழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிப்­ப­தால் ஏற்­ப­டும் கருத்து வேறு­பா­டு­கள். ஜன­வரி 2020 லிருந்து இண்­டோ­டெர்ம்ஸ் 2020 வெளி­வ­ர­வுள்­ளது.

5. முக­வர்­க­ளால் ஏற்­ப­டும் பிரச்­னை­கள்

6. பேசி­ய­படி தள்­ளு­படி/கமி­ஷன் கொடுக்­கா­த­போது

7. சரி­யான சம­யத்­தில் சரக்­கு­களை அனுப்­பா­த­போது

8. சரக்­கு­களை அனுப்­பா­மல் ஏமாற்­றும்­போது

9. சரக்­கு­க­ளின் தரம் சரி­யில்­லா­த­போது

10.  சரக்­கு­களை வாங்­கிக் கொண்டு பணம் அனுப்­பா­மல் இருக்­கும்­போது

11. ஆவ­ணங்­க­ளில் ஏற்­ப­டும் தவ­று­க­ளால்

சர்ச்­சை­களை எவ்­வாறு

குறைப்­பது?

சர்ச்­சை­களை முழு­வ­து­மாக தீர்க்க முடி­யா­விட்­டா­லும், நிச்­ச­ய­மாக குறைக்க இய­லும். குறைப்­ப­தற்கு கீழே கண்­ட­வை­க­ளில் அதிக கவ­னம் செலுத்­தி­னால் போதும்.

ஒப்­பந்­தப் பத்­தி­ரங்­கள்

சரி­யாக போடப்­பட்ட ஒப்­பந்­தம் சர்ச்­சை­கள் ஏற்­ப­டா­மல் இருக்­கு­மாறு பார்த்­துக் கொள்ள உத­வும். ஒரு ஒப்­பந்­தத்­தில் என்­னென்ன முக்­கி­ய­மான ஷரத்­துக்­கள் வர­வேண்­டும் என்று International Chamber of Commerce அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அந்த நிறு­வ­னம் ‘மாதிரி ஒப்­பந்­தத்­தை­யும்’ (Model Contract) வெளி­யிட்­டுள்­ளது.

விலைக்­கு­றி­யீ­டு­கள் (Incoterms 2010)

சரக்­கு­களை ஏற்றி அனுப்­பும் முன் Terms of Payment (FOB/CIF/C&F போன்­றவை) அறிந்து கொள்­ளு­தல் அவ­சி­யம். அவற்­றின் அர்த்­தங்­க­ளைப் புரிந்து கொள்­வ­து­டன், அவற்­றில் நீங்­கள் ஆற்ற வேண்­டிய கடமை என்ன என்­ப­தை­யும் தெரிந்து கொள்­வது மிக­வும் அவ­சி­யம்.

கேள்வி : தமிழ்­நாட்­டில் பல வங்­கி­க­ளில் ஏற்­று­மதி கடன் வழங்க தகுந்த செக்­யூ­ரிட்டி / கியா­ரண்டி  கேட்­கி­றார்­கள். ECGC  பாலிசி மட்­டும் இருந்­தால் போதாதா?

பதில் : வங்­கி­கள் குறிப்­பிட்ட தொகைக்கு மேல் கடன் வழங்­கி­னால் தான் செக்­யூ­ரிட்டி வாங்க வேண்­டும் என்று ரிசர்வ் வங்கி அறி­வுரை வழங்­கி­யுள்­ளது.  அதே­ச­ம­யம் சிறிய அள­வில் செக்­யூ­ரிட்டி / கியா­ரண்டி  இல்­லா­மல் கடன்­கள் வழங்­கிய வங்கி மனே­ஜர்­கள் அவற்றை திரும்ப வசூ­லிக்க மிக­வும் சிர­மப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.  ஆகவே சிலர் மேனே­ஜர்­கள் செக்­யூ­ரிட்டி வழங்­க­வேண்­டும் என்று நிர்­பந்­திக்­க­லாம்.

ECGC  பாலிசி என்­பது செக்­யூ­ரிட்டி / கியா­ரண்­டிக்கு ஈடா­காது. அவற்றை வைத்­துக்­கொண்டு லோன் தர இய­லாது.  கடன்­கள் வழங்­கு­வது  மேனே­ஜர் களின் கடமை.  அவற்றை சரி­வர கொடுக்­கி­றார்­களா என்று சரி­பார்க்க அவர்­க­ளுக்கு மேல­தி­கா­ரி­கள் உள்­ள­னர்.  வங்­கி­க­ளில் வைத்­தி­ருக்­கும் உங்­க­ளது கணக்கு பேச­வேண்­டும்.  மேனே­ஜர் கடன் வழங்­கும் முன் வரு­வார்.Trending Now: