டில்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.,ஆர்வம்!

04-10-2019 08:31 PM

டில்லி மாநில சட்­ட­சபை தேர்­தல் அடுத்த வரு­டம் ஜன­வ­ரி–­­பிப்­ர­வரி மாத வாக்­கில் நடை­பெற வேண்­டும். ஆனால் முன்­னரே தேர்­தல் நடத்த வேண்­டும் என்று பார­திய ஜனதா கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் கரு­து­கின்­ற­னர். சென்ற 2015ல் பிப்­ர­வரி 5ம் தேதி வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது. முடி­வு­கள் 8ம் தேதி அறி­விக்­கப்­பட்­டன. ஆம் ஆத்மி பெரும்­பான்மை பெற்று ஆட்சி அமைத்­தது. அர­விந்த் கெஜ்­ரி­வால் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­றார்.பா.ஜ.,வும், காங்­கி­ரஸ் கட்­சி­யும் படு தோல்வி அடைந்­தன.

 “தேர்­தல் நடை­பெ­றும் நேரம் மிக முக்­கி­யம். முன்­னரே தேர்­தல் நடத்த வேண்­டும் என்­கின்­றார் பார­திய ஜனதா தொண்­டர். தேர்­தல் முன்­னரே நடத்­த­வில்லை எனில், ஆம் ஆத்மி வெற்றி பெற்று, மீண்­டும் கெஜ்­ரி­வால் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்­ளது என்­கின்­ற­னர்.

டில்லி சட்­ட­சபை உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை மொத்­தம் 70. தற்­போது 64 உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர். இதில் ஆம் ஆத்மி கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் 60 பேர். பா.ஜ.,வைச் சேர்ந்­த­வர்­கள் 4 பேர். (ஆம் ஆத்மி கட்­சி­யில் இருந்து வில­கிய அல்கா லம்பா, தகுதி நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார். இவர் கணக்­கில் சேர்க்­கப்­ப­ட­வில்லை. ஆனால் வழக்கை சந்­தித்து வரும் ஆம்  ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.)

2015ல் நடை­பெற்ற தேர்­த­லில் ஆம் ஆத்மி 67 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. ஆனால் பல எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்­கம் செய்­யப்­பட்­ட­னர். அதே நேரத்­தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி சட்­ட­ச­பையை கலைத்­து­விட்டு, முன்­னரே தேர்­தல் நடத்த கோரி­னால் மட்­டுமே முன்­னரே தேர்­தல் நடத்த முடி­யும். தற்­போது அரசை கலைத்­து­விட்டு முன்­னரே தேர்­தல் நடத்த வாய்ப்பு இல்லை.

பா.ஜ.,.வின­ரின் ஆசையை நிறை­வேற்ற எதா­வது கார­ணங்­களை சொல்லி, ஆட்­சியை கலைத்­து­விட்டு, முன்­னரே தேர்­தல் நடத்­தி­னால் என்­ன­வா­கும் என்று பார்ப்­போம். காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த டில்லி முன்­னாள் முதல்­வர் ஷீலா தீட்­சித் இயற்கை எய்­தி­விட்­டார். இது காங்­கி­ரஸ் கட்­சிக்கு மட்­டும் இழப்பு அல்ல. பா.ஜ.,வுக்­கும் தான் இழப்பு. சென்ற லோக்­சபா தேர்­த­லில் காங்­கி­ரஸ் 23 சத­வி­கித வாக்­கு­களை வாங்கி இருந்­தது. டில்­லி­யில் உள்ள ஏழு லோக்­சபா தொகு­தி­க­ளில் ஐந்­தில் காங்­கி­ரஸ் இரண்­டா­வது இடத்­திற்கு வந்­தது. பா.ஜ.,56.5 சத­வி­கித வாக்­கு­களை வாங்கி ஏழு தொகு­தி­க­ளை­யும் கைப்­பற்­றி­யது.

இத­னால்­தான் பா.ஜ., விரை­வில் சட்­ட­சபை தேர்­தலை நடத்த வேண்­டும் என்று கரு­து­கி­றது. ஜம்­மு–­­காஷ்­மீர் மாநி­லத்­திற்கு சிறப்பு அந்­தஸ்து வழங்­கும் 370 வது சட்­டப்­பி­ரிவு நீக்­கம், அந்த மாநி­லத்­தில் ஜனா­தி­பதி ஆட்சி அமல்­ப­டுத்­தி­யது ஆகி­யவை பா.ஜ.,வுக்கு சாத­மாக உள்­ளது. பொரு­ளா­தார சரி­வின் பாதிப்­பு­கள் தெரி­ய­வ­ரும் முன் தேர்­தலை நடத்­தா­விட்­டால், 370 வது பிரிவை நீக்­கி­ய­தால் ஏற்­பட்ட பலன் பய­னற்­றுப் போகும் என்று பா.ஜ.,தலை­வர் கூறு­கின்­றார்.

ஷீலா தீட்­சித் மறை­வால் ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டத்­தால் காங்­கி­ரஸ் கட்­சி­யின் வாக்­கு­கள் 3 முதல் 4 சத­வி­கி­தம் மட்­டுமே குறை­யும். அதற்கு மேல் பாதிப்பு இருக்­காது. காங்­கி­ரஸ் கட்­சிக்கு 18 சத­வி­கித வாக்­கு­கள் இருக்­கும் பட்­சத்­தில், இது ஆம் ஆத்மி கட்­சி­யின் வாக்­கு­களை பறிக்­கும். இது பா.ஜ.வுக்கு சாத­க­மாக அமை­யும். அதே நேரத்­தில் காங்­கி­ரஸ் செல்­வாக்கு இழந்து , ஆம் ஆத்மி பலப்­பட்­டால், அது பா.ஜ.,.வுக்கு பாத­க­மாக அமை­யும் என்று பா.ஜ.,தலை­வர் கூறு­கின்­றார்.

பொரு­ளா­தார மந்த நிலைக்கு கட்­ட­மைப்பு மற்­றும் சுழற்சி கார­ணங்­கள் இருப்­பது போல், டில்­லி­யில் பா.ஜ.,வின் செல்­வாக்கு சரிந்­த­தற்­கும் இதே போன்ற கார­ணங்­கள் உள்­ளன. கடந்த காலங்­க­ளில் டில்­லி­யில் வாழும் பஞ்­சா­பி­யர்­க­ளின் பல­மான வாக்­கு­களை கவர விஜய் குமார் மல்­கோத்ரா, மதன் லால் குரானா, கிதர் நாத் சகானி ஆகி­யோரை நம்பி இருந்த்து. இந்த நிலை மாறி வியா­பா­ரி­கள் சமூ­க­மான பனியா சமூ­கத்­தி­ன­ரின் வாக்­கு­களை பா.ஜ., கவர்ந்­தது. பனியா சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளில் குறிப்­பி­டத்­தக்­க­வர்­கள் விஜய் கோயல், மத்­திய சுகா­தார துறை அமைச்­ச­ராக உள்ள ஹர்ஷ் வர்­தன் ஆகி­யோர்.

2013ல் நடை­பெற்ற தேர்­த­லில் பா.ஜ.,32 இடங்­க­ளில் வெற்றி பெற்­றது. இது பெரும்­பான்­மைக்கு நான்கு இடங்­கள் குறைவு. ஹர்ஷ் வர்­தன் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­றார். 1996ல் ஜெயின் ஹவாலா டைரி­யில் அத்­வா­னி­யின் பெயர் இடம் பெற்­ற­தால், அவ­ருக்கு ஆத­ரவு தெரி­வித்து 1996ல் டில்லி முத­ல­மைச்­ச­ராக இருந்த மதன்­லால் குரானா பத­வியை ராஜி­னமா செய்­தார். அப்­போது எல்­லோ­ரது கவ­ன­மும் ஹர்ஷ் வர்­தன் பக்­கம் திரும்­பி­யது. ஆர்.எஸ்.எஸ்.,சும் ஹர்ஷ் வர்­தனை ஊக்­கு­வித்­தது. ஆனால் அவர் ஆர்­வம் காண்­பிக்­க­வில்லை.

தற்­போது ஹர்ஷ் வர்­தன் மத்­திய அமைச்­ச­ராக உள்­ளார். இந்த பத­வியை இழக்க அவர் விரும்­ப­மாட்­டார். விஜய் கோயல் எல்லா தரப்­பி­ன­ரின் ஆத­ரவை பெற­வில்லை. அடுத்து வரி­சை­யில் இருப்­ப­வர் மனோஜ் திவாரி. டில்­லி­யில் பூர்­வாஞ்­சல் பிராந்­தி­யம் என்று அழைக்­கப்­ப­டும் உத்­த­ர­பி­ர­தே­சம், பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை மிக வேக­மாக அதி­க­ரித்து வரு­கி­றது. இவர்­க­ளின் பிர­தி­நி­தி­யாக கரு­தப்­ப­டு­ப­வர் மனோஜ் திவாரி. தற்­போது மனோஜ் திவாரி எம்.பி.,யாக உள்­ளார். டில்லி மாநில பா.ஜ., தலை­வ­ரா­க­வும் உள்­ளார். கட்சி தேர்­தல் நடை­பெ­றாத கார­ணத்­தி­னால், மனோஜ் திவாரி தலை­வ­ராக நீடிக்­கின்­றார். இவர் தலை­வ­ராக நீடித்­துக் கொண்டே, சட்­ட­சபை தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றால். பா.ஜ., ஆட்சி அமைத்­தால், இவரே முத­ல­மைச்­ச­ராக வாய்ப்பு உள்­ளது.

அதே நேரத்­தில் காங்­கி­ரஸ் 18 சத­வி­கித வாக்­கு­களை தக்­க­வைத்­துக் கொண்­டால் மட்­டுமே, இது சாத்­தி­யம். ஆனால் காங்­கி­ரஸ் வாக்­கு­கள் 8 சத­வி­கி­த­மாக குறை­யும் பட்­சத்­தில், பார­திய ஜன­தா­வுக்­கும், ஆம் ஆத்மி கட்­சிக்­கும் இடையே நேர­டி­யான போட்டி இருக்­கும். அப்­போது யார் வெற்றி பெற்று ஆட்­சியை அமைப்­பார்­கள் என்று உறு­தி­யாக கூற இய­லாது. அத­னால் தான் டில்லி பார­திய ஜனதா கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் ஆட்­சியை கலைத்­து­விட்டு உட­ன­டி­யாக தேர்­தலை நடத்த விரும்­பி­னா­லும், பா.ஜ., தலைமை தேர்­தலை எதிர் கொள்ள தயக்­கம் காட்­டு­கி­றது.

நன்றி: ரீடிப் இணை­ய­த­ளம்– பிசி­னஸ் ஸ்டாண்­டர்ட் நாளி­த­ழில் அதிதி பட்­னிஸ்.

Trending Now: