காஷ்மீர்: புதிய கட்சி உதயம்!

04-10-2019 08:29 PM

ஜம்­மு–­காஷ்­மீர் கோடை­கால தலை­ந­க­ரான ஸ்ரீந­க­ரில் சரோ­வர் போர்­டிகோ ஹோட்­டல் அமைந்­துள்­ளது. இங்கு அர­சின் ஊடக வசதி மையம் உள்­ளது. இந்த மையத்­தில் தான் அரசு அதி­கா­ரி­கள் நிரு­பர்­களை சந்­தித்து தக­வல்­களை தெரி­விக்­கின்­ற­னர். மத்­திய அரசு செப்­டம்­பர் 5ம் தேதி, ஜம்­மு–­காஷ்­மீர் மாநி­லத்­திற்கு சிறப்பு அதி­கா­ரம் வழங்­கும் 370 வது சட்­டப்­பி­ரிவை நீக்­கி­யது. அத்­து­டன் ஜம்­மு–­காஷ்­மீர், லடாக் என இரண்டு யூனி­யன் பிர­தே­சங்­க­ளாக பிரித்­தது. இத­னால் சட்­டம்–­ஒ­ழுங்கு பாதிக்­கப்­ப­டும், பயங்­க­ர­வா­தி­கள் தாக்­கு­தல் நடத்­த­லாம் என பல கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. பல அர­சி­யல் கட்சி தலை­வர்­கள், பிரி­வி­னை­வாத தலை­வர்­கள் வீட்டு காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். இதில் இந்­திய ஆத­ரவு நிலை தலை­வர்­க­ளும் அடக்­கம். பார­திய ஜன­தா­வைச் சேர்ந்த உள்­ளூர் தலை­வர்­கள் மட்­டும் காவ­லில் வைக்­கப்­ப­ட­வில்லை.

இந்த சூழ்­நி­லை­யில் செப்­டம்­பர் 9ம் தேதி, அர­சின் ஊடக வசதி மையத்­திற்கு ஐந்து பேர் வந்­த­னர். இவர்­கள் எந்த அர­சி­யல் கட்­சி­யை­யும் சாரா­த­வர்­கள். இவர்­கள் நிரு­பர்­களை சந்­திக்க வந்த நோக்­கம், புதிய கட்சி தொடங்­கப்­பட்­டுள்­ளதை பற்றி அறி­விக்­கவே. அவர்­கள் தொடங்­கி­யுள்ள புதிய கட்­சி­யின் பெயர் “ஜம்­மு–­காஷ்­மீர்  அர­சி­யல் இயக்­கம்” (தற்­சார்பு) [Jammu and Kashmir Political Movement (Independent)].

இந்த புதிய கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள், மத்­திய அரசு அறி­வித்­துள்ள ஜம்­மு–­காஷ்­மீர் மாநி­லத்­தில் எல்லா தரப்பு மக்­க­ளும் புதிய விடி­ய­லில் பங்­கேற்க வேண்­டும் என்று கேட்­டுக் கொண்­ட­னர். அத்­து­டன் மத்­திய அரசு இந்த மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளின் உரி­மை­க­ளில், இப்­போ­துள்ள நிலையை தொடர அனு­ம­திக்க வேண்­டும். இந்த மாநி­லத்­திற்கு முழு மாநில அந்­தஸ்து வழங்க வேண்­டும் என்­றும் கேட்­டுக் கொண்­ட­னர். இந்த புதிய கட்­சி­யான ஜம்­மு–­காஷ்­மீர்  அர­சி­யல் இயக்­கம் (தற்­சார்பு) தலை­வர் நிரு­பர்­கள் சந்­திப்­பின் போது பங்­கேற்­க­வில்லை. இதன் தலை­வர் 49 வய­தான பீர்­சடா சையத் (Peerzada Syeed). இவர் பலத்த பாது­காப்­பு­டன் ஸ்ரீந­க­ரில் உள்ள ஒரு ஹோட்­ட­லில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளார். கல்­லூரி முன்­னாள் விரி­வு­ரை­யா­ள­ரான சையத், தன்னை தேசி­ய­வாதி என்று கூறிக் கொள்­கின்­றார். டில்­லி­யில் இருந்து ஆங்­கி­லம், உருது ஆகிய மொழி­க­ளில் ‘வதன் கி பன்­சன்’ என்ற மாத இதழை நடத்தி வரு­வ­தா­க­வும் கூறு­கின்­றார். அத்­து­டன் காஷ்­மீ­ரில் இருந்து வெளி­வ­ரும் உருது பத்­தி­ரி­கை­க­ளில் தொடர்ந்து எழு­தி­யும் வந்­துள்­ள­தாக கூறு­கின்­றார்.  

பீர்­சடா சையத்  தங்­கி­யுள்ள இடத்­தில் ஸ்கோரல் இணை­ய­தள நிரு­பர் சந்­தித்து பேட்டி எடுத்­தார். தன்னை போட்டோ எடுக்க கூடாது என தடுத்­து­விட்­டார். அவ­ரது பேட்டி:

கேள்வி: நீங்­கள் அர­சி­யல் வாழ்க்­கையை எவ்­வாறு தொடங்­கி­னீர்­கள்?

பதில்: நான் அனந்த்­நாக் மாவட்­டத்­தில் உள்ள சாங்­குஸ் என்ற இடத்­தைச் சேர்ந்­த­வன். அங்கு தேசிய மாநாட்டு கட்­சி­யில் அர­சி­யல் வாழ்க்­கையை தொடங்­கி­னேன். தேசிய மாநாட்டு கட்­சியை ஷேக் அப்­துல்லா தொடங்­கிய காலத்­தில், எனது தாத்தா பீர் குலாம் ரசூல், சாங்­குஸ் தாலுகா தலை­வ­ராக இருந்­தார். காஷ்­மீ­ரில் பயங்­க­ர­வா­தம் கட்­ட­விழ்த்த (1989) பின்­னர் முதன் முறை­யாக 1996ல் தேர்­தல் நடை­பெற்­றது. அப்­போது நான் கல்­லூரி விரி­வு­ரை­யா­ளர் வேலையை ராஜி­னமா செய்து விட்டு, தேசிய மாநாடு கட்­சி­யில் இணைந்­தேன்.

நான் எப்­போ­தும் மக்­க­ளுக்கு சேவை செய்ய வேண்­டும் என்று எண்­ணு­வேன்.அதற்கு அர­சி­ய­லில் ஈடு­பட்­டால் மக்­க­ளுக்கு நல்­லது செய்ய முடி­யும் என்று கரு­தி­னேன். எனது நோக்­கம் தெளி­வா­னது. நான் எவ்­வித ஊதி­ய­மும் பெறா­மல் தேசிய மாநாட்டு கட்­சி­யில் வேலை பார்த்­தேன். 1999ல் அப்­போ­தைய முதல்­வர் பரூக் அப்­துல்லா, அரசு வேலை கொடுப்­ப­தாக கூறி­னார். ஆனால் நான் வேண்­டாம் என்று மறுத்­து­விட்­டேன். அதற்கு பதி­லாக சட்­ட­சபை உறுப்­பி­ன­ராக ஆக்­கும்­படி கேட்­டேன். 2002ல் நான் தேசிய மாநாடு கட்­சி­யில் இருந்து வெளி­யே­றி­னேன்.

கேள்வி: தேசிய மாநாட்டு கட்­சி­யில் இருந்து வெளி­யேற என்ன கார­ணம்?

பதில்: 2002ல் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் சாங்­குஸ் தொகு­தி­யில் இருந்து போட்­டி­யிட வாய்ப்பு கிடைக்­கும் என்று எதிர்­பார்த்­தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்­க­வில்லை. இது அதி­கார அர­சி­யல் என்­பதை புரிந்து கொண்­டேன். நீங்­கள் கட்­சி­யில் வளர்ச்சி அடைய கல்வி, விசு­வா­சம், நன்­ன­டத்தை, திறமை முக்­கி­ய­மல்ல. பணம்­தான் முக்­கி­யம். எவ்­வ­ளவு பணம் இருக்­கின்­றது என்­பதை பொருத்தே, கட்­சி­யில் உயர்ந்த இடங்­க­ளுக்கு போக­மு­டி­யும். என்­னி­டம் பணம் இல்லை. எனவே எனக்கு கட்­சி­யில் எதிர்­கா­லம் இல்லை. என்­னி­டம் பணம் மட்­டும் இருந்­தி­ருந்­தால், நான் நீண்ட நாட்­க­ளுக்கு முன்பே அமைச்­ச­ராக ஆகி இருப்­பேன்.

கேள்வி: இத­னால் நீங்­கள் அர­சி­ய­லில் இருந்து விலகி விட்­டீர்­களா?

பதில்: முழு­வ­து­மாக இல்லை. தேசிய மாநாட்டு கட்­சி­யில் இருந்து வில­கிய பிறகு, எனது நண்­பர்  டில்­லி­யில் பெரிய மனி­த­ரு­டன்  தொடர்பை ஏற்­ப­டுத்­தி­னார். நான் அவரை சந்­தித்த போது, அவர் பத்­தி­ரி­கையை தொடங்­கும் படி­யும், காஷ்­மீர் பற்றி எழு­தும் படி­யும் கூறி­னார். 2010ல் பழைய டில்­லி­யில் இருந்து ஆங்­கி­லம், உருது ஆகிய மொழி­க­ளில் ‘வதன் கி பன்­சன்’ என்ற பெய­ரில் மாத இதழை தொடங்­கி­னேன்.

கேள்வி: அந்த பெரிய மனி­தர் யார்?

பதில்: அவ­ரது பெயரை கூற­மாட்­டேன். இப்­போது உள்ள சூழ்­நி­லை­யில் அவர் செல்­வாக்­கா­ன­வர்.

கேள்வி: ஜம்­மு–­காஷ்­மீர்  அர­சி­யல் இயக்­கம் (தற்­சார்பு) என்ற கட்­சியை தொடங்க வேண்­டும் என்ற யோசனை எப்­படி வந்­தது?

பதில்: ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முன்­னர் என்­னைப் போன்ற பலர் காஷ்­மீ­ரில் இரண்டு குடும்­பங்­க­ளின் பரம்­பரை ஆட்சி நடப்­ப­தில் மகிழ்ச்சி இல்­லா­மல் இருந்­த­னர். காஷ்­மீ­ரில் அர­சி­ய­லில் ஈடு­பட நினைக்­கின்­ற­வர்­க­ளுக்கு  பரூக் அப்­துல்லா அல்­லது முப்தி சையத் ஆகி­யோ­ரின் தலை­மை­யி­லான இரண்டு கட்­சி­க­ளின் வாய்ப்­பு­கள் மட்­டுமே இருந்­தது. மூன்­றா­வது கட்சி இல்லை. மூன்­றா­வது கட்சி காஷ்­மீ­ரில் ஆட்சி செய்ய முடி­யாது என்ற நிலை இருந்­தது.

அதே நேரத்­தில் இந்த கட்­சி­க­ளைச் சேர்ந்த 90 சத­வி­கித தலை­வர்­கள் ஊழ­லில் திளைப்­ப­வர்­கள். ஜம்­மு–­காஷ்­மீர் மக்­க­ளுக்கு தன்­னாட்சி என்­பது போன்­ற­வை­களை கூறி பிழைப்பு நடத்­து­ப­வர்­கள். எனவே ஜம்­மு–­காஷ்­மீ­ரைப் பொருத்த அள­வில் எது­வும் தெளி­வாக இல்லை. எதுவோ மறைக்­கப்­ப­டு­கி­றது. எங்­க­ளைப் பொருத்த மட்­டில் நாங்­கள் தேசி­ய­வா­தி­கள். எங்­க­ளது எதிர்­கா­லம் இந்­தி­யா­வு­டன் இருக்­கி­றது என்று கரு­து­கின்­றோம்.

1947ல் இருந்து காஷ்­மீர் அர­சி­யல் கட்சி தலை­வர்­கள், மத்­திய அர­சி­டம் இருந்து பெற்ற பணத்தை பற்­றிய வெள்ளை அறிக்­கையை மத்­திய அரசு வெளி­யிட்­டால், உண்மை  நில­வ­ரம் தெரி­ய­வ­ரும்.  

கேள்வி: ஆனால் நீங்­கள் ஆகஸ்ட் 5ம் தேதிக்கு பிறகு புதிய அர­சி­யல் கட்­சியை பற்றி அறி­வித்­துள்­ளீர்­களே?

பதில்: ஆகஸ்ட் 5ம் தேதிக்கு பிறகு சூழ்­நிலை மாறி­யுள்­ளது. அர­சி­யல் சூன்­ய­மாக இருக்­கின்­றது. யாரும் காஷ்­மீர் நிலைமை பற்­றியோ, அதன் எதிர்­கா­லத்தை பற்­றியோ பேச தயா­ராக இல்லை. மயான அமைதி நில­வு­கி­றது. நாங்­கள் மக்­க­ளின் துய­ரத்­தில் பங்­கேற்க விரும்­பு­கின்­றோம். இப்­போது காஷ்­மீர் மக்­க­ளி­டம் தேசிய மாநாடு கட்சி, மக்­கள் ஜன­நாய கட்சி என்ன சொல்­லப்­போ­கின்­றது என்­பதை பற்றி யோசிக்­கின்­றோம். நாங்­கள் எங்­க­ளது திட்­டங்­களை பற்றி மக்­கள் மத்­தி­யில் சமர்ப்­பிக்க விரும்­பு­கின்­றோம். காஷ்­மீ­ரின் சாமா­னிய மக்­க­ளும் கூட, அவர்­க­ளது எதிர்­கா­லத்தை நிர்­ண­யிப்­ப­தில் பங்­கேற்க வேண்­டும் என்று விரும்­பு­கின்­றோம். வன்­மு­றை­யால் எந்த பிரச்­னைக்­கும் தீர்வு கண்­டு­விட முடி­யாது என்­பதை மக்­கள் மத்­தி­யில் விளக்க விரும்­பு­கின்­றோம். காஷ்­மீர் மக்­க­ளின் எதிர்­கால வாழ்க்­கைக்கு உத்­த­ர­வா­தம் தேவை. கடந்த 30 வரு­டங்­க­ளாக இங்கு (காஷ்­மீர்) நடந்து கொண்­டுள்­ள­வற்­றில் (வன்­மு­றை­யில்) இருந்து, இளைய தலை­மு­றையை பாது­காக்க வேண்­டும் என்று கரு­து­கின்­றோம். நாங்­கள் தொடங்­கி­யுள்ள ஜம்­மு–­காஷ்­மீர் அர­சி­யல் இயக்­கம் (தற்­சார்பு) கட்சி, மக்­க­ளின் குரலை பிர­தி­ப­லிக்க வேண்­டும் என்று கரு­து­கின்­றோம். காஷ்­மீ­ரில் மாற்­றம் தேவை. ஊழல் இல்­லாத, மக்­க­ளுக்கு பதில் சொல்­கின்ற பொறுப்பு இருக்க வேண்­டும். கல்வி, விசு­வா­சம், நம்­பிக்கை மதிக்­கப்­பட வேண்­டும். பணம் அல்ல.

கேள்வி: ஜம்­மு–­காஷ்­மீ­ரில் கிட்­ட­தட்ட எல்லா தலை­வர்­க­ளும் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்த நிலை­யில் உங்­கள் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­களை மட்­டும் பேச அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­தன் கார­ணம் என்ன?

பதில்: அனு­மதி எளி­தாக கிடைக்­க­வில்லை. செப்­டம்­பர் 9ம் தேதி கட்­சியை தொடங்­கு­வ­தற்கு அர­சி­டம் இருந்து மிகுந்த சிர­மப்­பட்டு அனு­மதி பெற்­றுள்­ளோம். செப்­டம்­பர் 5ம் தேதி முதல் கட்­சியை தொடங்­கு­வ­தற்­கான அறி­விப்பை வெளி­யிட பல­வாறு முயற்சி செய்­தோம். ஆனால் உரிய அனு­மதி கிடைக்­க­வில்லை.

கேள்வி: உங்­கள் கட்­சியை பற்­றி­யும், அதன் செயல்­பா­டு­க­ளைப் பற்­றி­யும் விரி­வாக கூறுங்­க­ளேன்?

பதில்: தற்­ச­ம­யம் பல்­வேறு மட்­டங்­க­ளில் இருந்து வந்த பத்து முதல் 15 நிர்­வா­கி­கள் உள்­ள­னர். எங்­கள் கட்­சி­யில் மருத்­து­வர்­கள், வழக்­க­றி­ஞர்­கள், அறிவு ஜீவி­கள், சமூக ஆர்­வ­லர்­கள் என பல­த­ரப்­பட்­ட­வர்­கள் உள்­ள­னர். அத்­து­டன் எங்­கள் கட்­சி­யில் 25 ஆயி­ரம் பேர் பிர­தி­நி­தி­க­ளாக உள்­ள­னர். இளம் சமு­தா­யத்­தி­னரை தொடர்பு கொண்டு அவர்­களை காஷ்­மீர் அர­சி­ய­லில் ஈடு­ப­டுத்­து­வ­தற்­காக கல்­லூரி, பல்­க­லை­க­ழ­கங்­க­ளி­லும் பிர­தி­நி­தி­கள் உள்­ள­னர். ஜம்மு பிராந்­தி­யத்­தி­லும் கட்சி கிளையை தொடங்க உள்­ளோம்.

கேள்வி: முஸ்­லீம்­கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பகு­தி­க­ளில், அந்த நிலையை மாற்ற மத்­திய அரசு முயற்­சிப்­ப­தாக அச்­சம் நில­வு­கி­றதே. இந்த அச்­சத்தை பற்றி உங்­கள் கட்சி என்ன கரு­து­கி­றது?

பதில்: இந்த அச்­சத்தை நாங்­கள் புரிந்து கொள்­கின்­றோம். இத­னால் தான் நாங்­கள் இமா­ச­ல­பி­ர­தே­சத்­தில் இருப்­பது போல், ஜம்­மு–­காஷ்­மீ­ரி­லும், வெளி ஆட்­கள் நிலத்தை வாங்க முடி­யாது. இந்த மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள் மட்­டுமே வாங்க முடி­யும் என்ற உரி­மையை கேட்­கின்­றோம். நாங்­கள் காஷ்­மீ­ரி­கள் என்ற வகை­யில், காஷ்­மீ­ரி­கள் அவர்­க­ளது நிலத்தை எந்த அளவு நேசிக்­கின்­ற­னர் என்­பதை புரிந்து வைத்­துள்­ளோம். இந்த உரிமை கிடைத்து விட்­டால், மக்­கள் மத்­தி­யில் உள்ள அச்­சம் அகன்­று­வி­டும். இதே போல் ஜம்­மு–­காஷ்­மீர் மாநி­லத்தை இரண்­டாக பிரித்து, லடாக்கை தனி யூனி­யன் பிர­தே­ச­மாக அறி­வித்­துள்­ளதை திரும்ப பெற வேண்­டும் என்று கோரு­கின்­றோம். லடாக் உட்­பட ஜம்­மு–­காஷ்­மீர் மீண்­டும் ஒரே மாநி­ல­மாக ஆக வேண்­டும்.

அதே போல் ஜம்­மு–­காஷ்­மீர் பப்­ளிக் கமி­ஷன் மீண்­டும், முன்­பி­ருந்­தது போல் இயங்க வேண்­டும். காஷ்­மீர் அட்­மி­னிஸ்­டி­ரே­டிவ் சர்­வீஸ், காஷ்­மீர் போலீஸ் சர்­வீஸ் தொடர வேண்­டும்.  இந்­தி­யா­வும், பாகிஸ்­தா­னும் பேச்­சு­வார்த்தை நடத்தி பிரச்­னைக்கு தீர்­வு­காண வேண்­டும். நாங்­கள் வன்­மு­றைக்கு ஆத­ரவு தெரி­விக்க மாட்­டோம்.

கேள்வி: ஜம்­மு–­காஷ்­மீர் மாநி­லத்­திற்கு சிறப்பு அந்­தஸ்து வழங்­கும் அர­சி­யல் சட்ட 370 பிரிவு நீக்­கப்­பட்­டது பற்றி உங்­கள் கட்­சி­யின் நிலை என்ன?

பதில்: மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, சிறப்பு அந்­தஸ்­துக்கு பதி­லாக, அதற்­கும் மேலா­னதை வழங்­கு­வோம் என்று கூறி­யுள்­ளதை நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்­றேன். எனவே மத்­திய அர­சின் திட்­டம் என்ன என்­பதை பொருத்­தி­ருந்து பார்க்க வேண்­டும்.

கேள்வி: மத்­திய அரசு உறு­தி­மொ­ழியை காப்­பாற்றா விட்­டால் என்ன செய்­வீர்­கள்?

பதில்: சாதா­ர­ண­மாக, அவர்­கள் (மத்­திய அரசு) அப்­படி செய்ய மாட்­டார்­கள். அப்­படி நடந்­தால் காஷ்­மீ­ரில் பெரு­வா­ரி­யான மக்­க­ளி­டம் கலந்­தா­லோ­சித்து மாநி­லத்­தின் வளர்ச்சி, சிறந்த எதிர்­கா­லம், காஷ்­மீ­ரி­க­ளின் பாது­காப்பை உறுதி செய்ய கோரு­வோம். மத்­திய அர­சுக்கு ஜம்­மு–­காஷ்­மீர் மாநி­லத்­தின் வளர்ச்­சி­யி­லும், மேம்­பாட்­டி­லும் உண்­மை­யி­லேயே அக்­கறை இருந்­தால், காஷ்­மீ­ரி­க­ளின், குறிப்­பாக இளை­ஞர்­க­ளின் நம்­பிக்­கையை பெற வேண்­டும்.

கேள்வி: நீங்­கள் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வீர்­களா?

பதில்: நிச்­ச­ய­மாக, நாங்­கள் போட்­டி­யி­டு­வோம்.  

கேள்வி: காஷ்­மீ­ரில் பா.ஜ. தவிர எல்லா அர­சி­யல் கட்­சி­க­ளும் ஆகஸ்ட் 5ம் தேதி­யில் இருந்து முடக்­கப்­பட்­டுள்­ளன. இந்த நிலை­யில் நீங்­கள் எப்­படி காஷ்­மீர் மக்­கள் மத்­தி­யில் உங்­கள் கட்­சி­யின் சித்­தாந்­தம், திட்­டத்தை பற்றி எடுத்­துக் கூறு­வீர்­கள்?

பதில்: எங்­க­ளி­டம் விரி­வான திட்­டம் உள்­ளது. உதா­ர­ண­மாக நாங்­கள் உண்­மை­யான மாதிரி கிரா­மத்தை உரு­வாக்கி காட்­டு­வோம், நான் அர­சின் மாதிரி கிராம திட்­டத்தை பற்றி கூற­வில்லை. நாங்­கள் மாதிரி கிரா­மத்தை உரு­வாக்கி, அதை மக்­கள் மத்­தி­யில் காண்­பிக்­கும் போது, மக்­கள் நம்­பு­வார்­கள் என்ற நம்­பிக்கை உள்­ளது. இதற்கு அதிக காலம் பிடிக்­கும் என்­பதை உணர்ந்­துள்­ளேன். ஆனால் இதுவே எங்­கள் திட்­டம்.

கேள்வி: கடை­சி­யாக நீங்­கள் ஏன் போலீஸ் பாது­காப்­பு­டன் வாழ்­கின்­றீர்­கள்?

பதில்: நான் வாரத்­தின் ஐந்து நாட்­கள் எனது சொந்த ஊர் சாங்­குஸ்­சில் இருக்­கின்­றேன். நான் ஸ்ரீந­க­ருக்கு பதிவு பெற்ற குடி­பெ­யர்ந்­த­வன். காஷ்­மீர் போன்ற இடத்­தில் உங்­க­ளது கருத்­தில் சில­ருக்கு உடன்­பாடு இல்­லை­யெ­னில், உங்­க­ளுக்கு ஆபத்து காத்­துள்­ளது. நாங்­கள் கத்தி முனை­யில் நடக்­கின்­றோம். இவ்­வாறு பேட்­டி­யின் போது பீர்­சடா சையத் பதி­ல­ளித்­தார்.

நன்றி: ஸ்கோரல் இணை­ய­த­ளத்­தில் சப்­வாட் ஜார்­கர்.

Trending Now: