அரசியல்மேடை : திசை மாறும் தமிழக அரசியல்!

04-10-2019 08:26 PM

இந்த ஆண்­டின் இறு­திக்­குள் உள்­ளாட்­சித் தேர்­த­லும், 2021–ம் ஆண்­டில் பொதுத் தேர்­த­லும், நடை­பெ­ற­வுள்­ளது. இந்த தேர்­தல்­களை எதிர்­கொள்­வ­தற்­காக தமி­ழக அர­சி­யல் கட்­சி­கள் அனைத்­தும் ஆளுக்­கொரு  வியூ­கங்­களை வகுக்­கத் தொடங்­கி­விட்­டன.

நடை­பெற்று முடிந்த 2019 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அதி­முக, பா.ஜ, பாமக, தேமு­திக, புதிய தமி­ழ­கம் உள்­ளிட்ட கட்­சி­கள் கூட்­டணி அமைத்­துப் போட்­டி­யிட்­டன. மத்­திய ஆட்­சிக் கட்­சி­யான பா.ஜ.மீது தமி­ழக மக்­க­ளுக்கு இருந்த அதி­ருப்­தி­யும், கோப­மும், மாநில ஆட்­சிக் கட்­சி­யான அதி­முக மீது இருந்த கடும் அதிப்­ப­தி­யும் கடும் ஆத்­தி­ர­மாக மாறி அதி­முக அணியை படு­தோல்­வி­ய­டைய செய்­து­விட்­டது. கைவ­சம் அதி­முக வைத்­தி­ருந்த 38 தொகு­தி­க­ளை­யும் அப்­ப­டியே திமுக.வுக்கு தாரை­வார்க்க வேண்­டிய நிலை உரு­வா­கி­விட்­டது.

தேனி தொகு­தி­யில் – போட்­டி­யிட்ட ஓபி­எஸ் மகன் ஓ.பி.ரவீந்­தி­ர­நாத் குமார் மட்­டுமே வெற்றி பெற்று அதி­மு­க­வின் கவு­ர­வத்தை காப்­பாற்­றும் நிலை ஏற்­பட்டு விட்­டது. வெற்­றியை இழந்­தது ஒரு புறம் பின்­ன­டைவு என்­றா­லும், லட்­சக்­க­ணக்­கான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் திமுக வெற்றி பெற்­றது. அதி­முக.வினரை பெரி­தும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­விட்­டது.

அதி­மு­க­வின் அடி­மட்­டத் தொண்­டன் முதல் தலை­மைக்­க­ழக நிர்­வா­கி­கள் வரை அனைத்து பிரி­வி­ன­ரும் பா.ஜ.வுடன் தேர்­தல் கூட்­டணி வேண்­டாம் என வலி­யு­றுத்­திய நிலை­யில், வேறு வழி­யின்றி, ஏதோ ஒரு நிர்ப்­பந்­தத்­தின் கார­ண­மாக வேண்டா வெறுப்­பாக இந்த கூட்­ட­ணியை உரு­வாக்கி, அதன் மூலம் மிகப் பெரிய தோல்­வியை பெற்று பாடம் கற்­றுக் கொண்­ட­னர். ஆட்சி ரீதி­யாக மத்­திய அர­சோடு மட்­டும் இணக்­கம் வைத்­துக் கொள்­ள­லாம். அர­சி­யல் ரீதி­யி­லான ஒட்­டு­றவு வேண்­டாம் என்­ப­து­தான் அதி­மு­க­வின் நிர்­வா­கி­கள், தொண்­டர்­கள் மன­நி­லை­யாக இன்­னும் உள்­ளது. நாடா­ளு­மன்ற பெரும் தோல்­விக்கு பிறகு கட்­சி­யின் உயர்­மட்ட நிர்­வா­கி­க­ளும், மறு சிந்­த­னைக்கு உட்­பட்டு இருக்­கி­றார்­கள் என்­ப­து­தான் அதி­முக முக்­கிய வட்­டா­ரத் தக­வல்­க­ளாக இருக்­கி­றது. அத­னால்­தான் வேலூர் தொகு­தி­யில் பா.ஜ.வின் தோழ­மை­யாக இருந்து, அதன் மூல­மா­கவே வேட்­பா­ள­ராக ‘இரட்டை இலை’ சின்­னத்­தில் களம் இறக்­கப்­பட்ட புதிய நீதிக்­கட்­சி­யின் ஏ.சி.சண்­மு­கத்­தின் பிரச்­சா­ரத்­திற்கு பா.ஜ.வை அழைக்­க­வில்லை என்­கின்­ற­னர் அதி­முக முக்­கிய புள்­ளி­கள். இப்­போ­தும், இம்­மா­தம் 21–ம் தேதி நடை­பெ­ற­வுள்ள விக்­கி­ர­வாண்டி, நாங்­கு­நேரி ஆகிய இரண்டு தொகு­தி­க­ளின் இடைத்­தேர்­த­லுக்கு கூட, விஜ­ய­காந்த், சரத்­கு­மார் உள்­ளிட்­ட­வர்­களை அதி­முக நிர்­வா­கி­கள் சந்­தித்து ஆத­ரவு கேட்ட நிலை­யில் பா.ஜ.வை சந்­திப்­பதை தள்­ளிப்­போட்­டுக் கொண்டே வந்­த­னர். இது ஊட­கங்­க­ளில் பெரும் விவா­தப் பொரு­ளாகி, இரு­த­ரப்­பும் தர்ம சங்­க­டத்தை சந்­தித்த வேளை­யில், வேண்டா வெறுப்­பாக பா.ஜ. மேலிட பார்­வை­யா­ளரை சந்­தித்து ஆத­ரவு கேட்­டுள்­ள­னர். ஆனா­லும் இந்த உறவு தாமரை இலை தண்­ணீர்  போலத்­தான் இருக்­கி­றது என்­பது தெளி­வா­கத் தெரி­கி­றது.

எதிர்­வ­ரும் உள்­ளாட்­சித் தேர்­த­லி­லும் அடுத்து வரும் பொதுத் தேர்­த­லி­லும் பா.ஜ.வுடன் இணைந்து, தேர்­தலை சந்­தித்­தால், தோல்வி தொடர்­வ­தற்­கான வாய்ப்பு அதி­கம் இருப்­ப­தாக அதி­முக தரப்பு கரு­து­கி­றது. இத­னால் மனத்­தாங்­கல் இரு­த­ரப்­பி­லும் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. இதை முழு­மை­யாக புரிந்­து­கொண்ட பா.ஜ.வின் டில்லி தலைமை அதி­முக ஆட்­சியை, அமைச்­சர்­களை, விமர்­சிக்­க­லாம். அர­சின் தவ­று­களை தாரா­ள­மாக சுட்­டிக்­காட்­டுங்­கள்  என தமிழ்­நாடு பா.ஜ.வுக்கு மறை­முக உத்­த­ரவு ஒன்றை பிறப்­பித்து இருப்­ப­தாக தெரி­கி­றது.

கடந்த 10 நாட்­க­ளுக்­கும் மேலாக, பா.ஜ.வின் தமி­ழக தொழில் நுட்­ப­பி­ரிவு ஆட்­சிக்கு எதி­ரான பதி­வு­களை வெளி­யி­டத் தொடங்­கி­விட்­டது. ‘கழ­கங்­கள் இல்­லாத தமி­ழ­கம்’ என்ற கோஷத்தை முன்­னெ­டுத்து களப்­ப­ணியை தொடங்கி விட்­ட­னர்.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் மூல­மா­க­வும், ‘லோக் ஆயுக்தா’ மூல­மும் பல்­வேறு தக­வல்­களை கொண்டு வந்து அதி­முக அரசை விமர்­ச­னத்­துக்கு உட்­ப­டுத்த வேண்­டும் என பா.ஜ. தேசிய பொதுச் செய­லா­ள­ரும், தமி­ழக பா.ஜ. பொறுப்­பா­ள­ரு­மான முர­ளி­தர் ராவ், மாநில பொது் செய­லா­ளர் ஜி.எஸ். நரேந்­தி­ரன் ஆகி­யோர் தமி­ழக பாஜ, ஐ.டி. பிரி­வுக்கு ஒப்­பு­தல் அளித்­து­விட்­ட­தாக அக்­கட்­சி­யி­னரே தெரி­விக்­கி­ன­ற­னர்.

கடந்த மாதம் சென்­னை­யில் அதி­மு­க­வி­னர் வைத்­தி­ருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ மர­ணம் அடைந்த விவ­கா­ரத்­தில், பா.ஜ, ஐ.டி. பிரிவு தமி­ழக ஆட்­சிக் கட்­சி­யான அதி­முக.வை கடு­மை­யாக விமர்­சித்து  பதி­வு­களை வெளி­யிட்­டது. அதை தொடர்ந்து இப்­போது அர­சின் மீதான குற்­றச்­சாட்­டு­கள் ஏதா­வது ஒரு இணை­ய­தள தக­வ­லாக வந்­தால், அதை பா.ஜ.  ஐ.டி.பிரிவு மறு ட்வீட் செய்து ‘ஊழ­லற்ற ஆட்­சியை உரு­வாக்­கு­வோம்’ என பதி­வி­டு­கி­றது.

சட்­ட­வி­ரோத மணல் சுரங்­கத்­திற்கு எதி­ரான உயர்­நீதி மன்­றத்­தின் உத்­த­ரவை தமி­ழக அரசு ஏன் அமல் செய்­ய­வில்லை என்­றும், மணல் மாபியா கும்­பல் தொடர்ந்து செயல்­பட அர­சாங்­கம் ஏன் அனு­ம­திக்­கி­றது என்­றும் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர். முத­ல­மைச்­சர் மற்­றும் சட்ட அமைச்­ச­ரின் அலு­வ­ல­கங்­களை குறி வைத்தே இது போன்ற பதி­வு­களை வெளி­யி­டும் பா.ஜ. ஐ.டி. பிரிவு ஆங்­காங்கே உள்ள நிர்­வாக சீர்­கே­டு­கள், சாலை வச­தி­யின்மை, சட்ட விரோ­தச் செயல்­க­ளை­யும் சுட்­டிக் காட்டி வரு­கி­றது.

இது தொடர்­பாக, கருத்து தெரி­விக்­கும் பா.ஜ. ஐ.டி. பிரி­வின் நிர்­வாகி நிர்­மல் குமார் ‘நாங்­கள் சமூக ஊட­கங்­க­ளில் அர­சாங்­கத்­தின் தவ­றான செயல்­களை விமர்­சிப்­ப­தோடு மட்­டும் அல்­லா­மல் ஊழலை ஒழிக்க ‘லோக் ஆயுக்­தா’வை பயன்­ப­டுத்த மக்­க­ளுக்கு எடுத்­துக்­கூறி வரு­கி­றோம்’ என்­கி­றார்.

ஒரு­பு­றம் கூட்­ட­ணி­யில் இருக்­கி­றோம். உறவு நீடிக்­கி­றது என கூறிக்­கொண்டு மறு­பு­றம் ஆட்­சிக்கு எதி­ரான செயல்­க­ளில் பா.ஜ. ஈடு­ப­டு­வதை உணர்ந்து கொண்ட அதி­மு­க­வும், கொஞ்­சம் கொஞ்­ச­மாக அவர்­க­ளி­டம் இருந்து விடு­ப­டத் தொடங்கி வரு­கி­றது. இது விரை­வில் உற­வில் விரி­சல், வெளி­யேற்­றம் என மாறி­னா­லும் ஆச்­சர்­ய­மில்லை.

இதே போல திமுக தரப்­பும் காங்­கி­ரசை கழற்­றி­விட சம­யம் பார்த்­துக் கொண்­டுள்­ளது என்ற பேச்சு அறி­வா­லய வட்­டா­ரத்­தின் தக­வல்­கள் மூலம் அறிய முடி­கி­றது.

கடந்த 2016–ம் ஆண்டு சட்­ட­சபை தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்­சிக்கு 47 இடங்­கள் கொடுத்து அவர்­கள் எட்டு இடங்­கள் மட்­டுமே வெற்றி பெற்­ற­னர். மேலும் திமுக போட்­டி­யிட்ட பல தொகு­தி­க­ளில் காங்­கி­ர­சார் தேர்­தல் பணியே செய்­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்­டும் இருந்­தது. 89,91,96,2001,2006,2011 போல 2016–லும் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு திமுக ஆட்­சிக்கு வரா­த­தற்கு காங்­கி­ரஸ் கட்­சி­யும் ஒரு தடை­யாக இருந்­தது என திமுக தலைமை முதல் அடுத்­த­டுத்த கட்ட நிர்­வா­கி­கள் வரை மறை­மு­க­மா­க­வும், சிலர் நேர­டி­யா­க­வும் விமர்­சித்து வந்­த­னர்.

தற்­போது நடை­பெற்று முடிந்த 2019 நாடா­ளு­மன்ற தேர்­த­லில் டில்­லி­யில் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு, தாம் முன்­மொ­ழிந்த ராகுல் பிர­த­மர் பொறுப்பை ஏற்­பார் என்ற நம்­பிக்­கை­யில் காங்­கி­ரஸ் கட்­சிக்கு 10 எம்.பி. தொகு­தி­களை கொடுத்­தார் ஸ்டாலின். அதில் 9 பேர் வெற்றி பெற்று டில்லி சென்று விட்­ட­னர். இதை  வைத்து உள்­ளாட்சி தேர்­த­லி­லும், அடுத்து வரும் தமி­ழக சட்­ட­சபை தேர்­த­லி­லும் சுமார் 30 சத­வீ­தம் அள­விற்கு காங்­கி­ரஸ் தொகு­தி­களை கேட்­கி­ற­தாம். இம்­முறை அதி­க­பட்­சம் 200 அல்­லது குறைந்­த­பட்­சம் 180 தொகு­தி­க­ளி­லா­வது திமுக நிற்க விரும்­பு­கி­ற­தாம். அத­னால் காங்­கி­ரஸ் கட்­சிக்கு 10 அல்­லது 15 சத­வீ­தம் அள­விற்கே தொகு­தி­களை ஒதுக்க திமுக தலைமை, (அதன் வழி­காட்டு குடும்ப குழு ஆலோ­ச­னைப்­படி) முடி­வெ­டுத்­துள்­ள­தாம்.

நாங்­கு­நேரி தொகுதி வெற்றி, தோல்­வியை பொறுத்து இது தொடர்­பான பிரச்­னை­கள், விவா­தங்­கள் வெளிப்­ப­டை­யாக வர­வாய்ப்­புள்­ளது என்று அர­சி­யல் வட்­டா­ரத்­தி­லும் கூறப்­ப­டு­கி­றது.  இது தவிர ரஜி­னி­யின் புதிய அர­சி­யல் கட்சி, கம­லின் தீவிர பாய்ச்­சல், திமுக அதி­முக கூட்­ட­ணி­யில் உள்ள அர­சி­யல் கட்­சி­க­ளின் போக்கு இவை அனைத்­தை­யும் கணித்­தால், தமி­ழக அர­சி­யல் திசை­மா­றிச் செல்­வதை நம்­மால் உணர முடி­யும்.Trending Now: