புற்று நோயில் இருந்து பெண்களை காப்பாற்றிய லடாக் டாக்டர்!

04-10-2019 08:21 PM

லடாக்­கைச் சேர்ந்த டாக்­டர் நோர்­டன் ஓட்­சர் (37) வாழ்க்கை பாதையை இரண்டு பெண்­கள் மாற்­றி­விட்­ட­னர். முதல் பெண் அவ­ரது தாயார். “2007ல் நான் தமிழ்­நாட்­டில் ஒரு கிரா­மத்­தில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் வேலை செய்து கொண்­டி­ருந்­தேன். எனது அம்மா கர்­பப்பை வாய் புற்று நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும், இந்த புற்று நோய் கல்­லீ­ரல் வரை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தக­வல் வந்­தது. ஒரே மாதத்­தில் அம்மா இறந்து விட்­டார்” என்று நினைவு கூறு­கின்­றார் நோர்­டன்.

லடாக்­கில் மணல் குன்­று­க­ளுக்­கும், இரட்டை திமிங்­கில ஒட்­ட­க­மான பாக்­டி­ரி­யன் ஒட்­ட­கத்­திற்­கும் புகழ் வாய்ந்த நுப்ரா பள்­ளத்­தாக்­கில் உள்ள ஹண்­டர் கிரா­மத்­தில் பிறந்­த­வர் நோர்­டன். அவ­ரது தந்தை அரசு பள்ளி ஆசி­ரி­யர். தாய் விவ­சாயி. திக்­சிட் என்ற அரு­கா­மை­யில் உள்ள கிரா­மத்­தில் ஆறா­வது வரை படித்­தார். பிறகு ஜம்மு மாவட்­டத்­தில் நகோர்டா என்ற இடத்­தில் உள்ள சைனிக் பள்­ளி­யில் ஏழா­வது முதல் படித்­தார்.

“எனது தந்தை அரசு பள்ளி ஆசி­ரி­யர். அவ­ரது வரு­மா­னம் நான்கு குழந்­தை­க­ளின் மேல் படிப்பு செல­வுக்கு போத­வில்லை. வரு­மா­னத்­திற்­காக நானும், எனது சகோ­த­ர­னும் விடு­முறை நாட்­க­ளில் நாள் முழு­வ­தும் காய்­கறி தோட்­டத்­தில் வேலை பார்ப்­போம். காய்­க­றி­களை ராணு­வத்­தி­டம் விற்­பனை செய்­வோம் என்று நினைவு கூறு­கின்­றார் டாக்­டர். நோர்ட்ன்.

தங்­க­ளது பெற்­றோர்­க­ளைப் போலவே நான்கு சகோ­த­ரர்­க­ளும் நேர்த்­தி­யாக வேலை செய்­த­னர். கடைசி பைய­னான நோர்­ட­னுக்கு 2000ல் வேலூ­ரில் உள்ள சி.எம்.சி மருத்­துவ கல்­லூ­ரி­யில் படிக்க இடம் கிடைத்­தது. இங்கு எம்.பி.பி.எஸ் படித்து முடித்­தார்.

அவ­ரது தாயார் புற்று நோயால் இறந்­தது, அவ­ரது வாழ்க்­கை­யில் பெரும் திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தி­யது. அது­வரை பெரிய மருத்­து­வ­ம­னை­யில் வேலை செய்ய வேண்­டும். வெளி­நாட்­டிற்கு சென்று நிரந்­த­ர­மாக தங்­கி­விட வேண்­டும் என்று திட்­ட­மிட்டு இருந்­தார். அந்த திட்­டத்தை எல்­லாம் கைவிட்டு விட்டு, லடாக்­கில் நுப்ரா பள்­ளத்­தாக்­கில் உள்ள சொந்த கிரா­ம­மான ஹண்­டர் கிரா­மத்­திற்கு திரும்­பி­னார். அரு­கில் உள்ள மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் வேலைக்கு சேர்ந்­தார்.

“மருத்­து­வ­ம­னை­யில் நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளித்­துக் கொண்­டி­ருக்­கும் போது, லேக்­கில் உள்ள பள்­ளிக்­கூட முதல்­வர் இஷே டண்­டப் இடம் இருந்து போன் வந்­தது. தனது மாணவி சோனம் டோல்மா பள்­ளிக்­கூ­டத்­திற்கு வர­வில்லை. அவர் பற்­றிய விப­ரம் தெரி­ய­வில்லை என்று கூறி­னார்” என்று நினைவு கூர்ந்­தார் நோர்­டன்.

டாக்­டர். நோர்­ட­னும், அவ­ரது நண்­ப­ரும் இணைந்து அந்த மாணவி சோனம் டோல்­மாவை தேடி­னார்­கள். அந்த மாணவி டிக்­கர் கிரா­மத்­தில் இருப்­பதை கண்டு பிடித்­த­னர். மாண­வி­யின் வீட்­டிற்கு சென்ற போது, அவ­ரது பெற்­றோர்­கள் வய­லில் வேலைக்கு சென்று இருந்­த­னர். மாணவி சோனம் டோல்மா மட்­டும் வீட்­டில் இருந்­தார். அவ­ரது வலது கால் எலும்பு புற்று நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. முழங்­கா­லுக்கு கீழ் கால் வெட்டி எடுக்­கப்­பட்டு இருந்த்து. அவர் வலி­யால் துடித்­துக் கொண்­டி­ருந்­தார். என்­னால் எது­வும் செய்ய முடி­யாத கவ­லை­யில் ஆழ்ந்­தேன். அவ­ரது பெற்­றோ­ரி­டம் பேசி­னேன். மாணவி சோனத்­திற்கு டில்­லி­யில் சிகிச்சை அளிப்­ப­தா­க­வும், அதற்­கான செலவை ஏற்­றுக் கொள்ள நன்­கொ­டை­யா­ளரை தேடி ஏற்­பாடு செய்­வ­தா­க­வும் கூறி­னேன் என்று நினைவு கூறு­கின்­றார் டாக்­டர். நோர்­டன்.  

இந்த சம்­ப­வ­மும் டாக்­டர். நோர்­டன் வாழ்க்­கை­யில் திருப்பு முனையை ஏற்­ப­டுத்த கார­ண­மாக இருந்­தது. மாணவி சோனம் உடல்­நிலை படு­மோ­ச­மாக இருந்­தது. அவள் வலி இல்­லா­மல் இருக்க உதவி செய்ய வேண்­டும் என்று எண்­ணி­னார். மாண­வி­யின் சிகிச்சை செல­வுக்கு நன்­கொ­டை­யா­ளரை கண்­டு­பி­டித்­தார். சிகிச்சை அளிக்க டில்லி அழைத்­துச் சென்­றார். வலது காலில் புற்று நோய் பரவி இருந்­தது. டில்­லி­யில் மருத்­து­வர்­கள் இடுப்­புக்கு கீழே காலை வெட்டி எடுத்­த­னர். அந்த மாண­விக்கு வலி இல்லை. குண­ம­டைந்து வந்­தார். அவ­ருக்கு செயற்கை கால்­க­ளை­யும் பொருத்­தி­னார்­கள். துர­திஷ்­ட­வ­ச­மாக திடீ­ரென ஒரு நாள் மாணவி சோனம் மர­ண­ம­டைந்து விட்­டார்.  

இதற்கு பின் இனி யாரும் இது போன்று புற்று நோய்க்கு பலி­யாக கூடாது என்று கரு­தி­னேன். மக்­கள் அவர்­க­ளது உடம்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்­டும். குறிப்­பாக பெண்­கள் தெரிந்து கொள்ள வேண்­டும். இது மாற்­றத்தை உண்­டாக்­கும் என்று கரு­தி­னேன் என்­கின்­றார் டாக்­டர். நோர்­டன்.

அதற்கு பிறகு ஒரே மருத்­து­வ­ம­னை­யில் உட்­கார்ந்து சிகிச்சை அளிக்­கா­மல், லடாக்­கில் பல பகு­தி­க­ளுக்­கும் சென்று சிகிச்சை அளிக்க தொடங்­கி­னார். பெண்­கள் மத்­தி­யில் அவர்­க­ளது உடல் நலம், கர்ப்ப்பை போன்­ற­வை­களை பற்றி பேச தொடங்­கு­வது பெரிய சவா­லாக இருந்­தது. எல்லா தடை­க­ளை­யும் உடைத்­தெ­றிய வேண்­டி­ய­தி­ருந்­தது.

நான் பெண்­கள் மத்­தி­யில் கர்­பப்பை,மார்பு பற்றி பேச தொடங்­கும் போது, அவர்­கள் தலையை குனிந்து கொள்­வார்­கள். அதே நேரத்­தில் அவர்­க­ளது கண்­களை பார்த்­தால், இது பற்றி பேசு­வதை மகிழ்ச்­சி­யு­டன் கேட்­ப­து­டன், இது பற்­றிய புரி­தல் உண்­டாக்­கு­வதை பற்றி மகிழ்­வார்­கள். ஒரு வரு­டம் இடை­விடா முயற்சி செய்து நுப்ரா பள்­ளத்­தாக்­கில் உள்ள எல்லா பெண்­க­ளி­டத்­தி­லும் பேசி விட்­டேன். அவர்­க­ளி­டம் மார்­பக புற்­று­நோய், கர்ப்­பபை புற்று நோய் பற்றி விளக்­கி­னேன். இது பற்றி தொடர்ந்து பரி­சோ­தனை செய்து கொள்­வ­து­டன், தேவை­யான சிகிச்சை செய்து கொள்ள வேண்­டும் என்று விளக்­கு­வேன் என்­கின்­றார் டாக்­டர். நோர்­டன்.

அத்­து­டன் தனது நண்­பர்­கள் மூலம் சிங்­கப்­பூ­ரில் உள்ள மகப்­பேறு மருத்­து­வர்­க­ளி­டம் தொடர்பு கொண்டு, அவர்­களை லடாக்­கிற்கு வரு­மா­றும், இங்­குள்ள பெண்­க­ளுக்கு கர்ப்­பப்பை புற்று நோய் பரி­சோ­தனை செய்­யு­மா­றும் அழைப்பு விடுத்­தார். ஏனெ­னில் இங்கு யாருமே இதை செய்­வ­தில்லை என்­கின்­றார்.

“எங்­க­ளது முயற்­சி­யால் பரி­சோ­தனை முகாம் நடத்­தி­ய­போது, நூற்­றுக் கணக்­கான பெண்­கள் பரி­சோ­தனை செய்து கொள்ள வந்­த­னர். நன்கு உடல்­ந­லத்­து­டன் இருப்­ப­வர்­க­ளும், எவ்­வித பிரச்­னை­யும் இல்­லா­த­வர்­க­ளும் கூட பரி­சோ­தனை செய்து கொள்ள வந்­த­னர்” என்­கின்­றார் டாக்­டர். நோர்­டன்.

2010 முதல் ‘ஹிமா­ல­யன் உமன் ஹெல்த் புரா­ஜக்ட்’ என்ற பதா­கை­யின் கீழ். டாக்­டர் நோர்­டன் தலை­மை­யி­லான மருத்­து­வர்­கள் குழு, கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளில் லடாக் பிராந்­தி­யத்­தில் பத்­தா­யி­ரத்­திற்­கும் அதி­க­மான பெண்­களை பரி­சோ­தனை செய்­துள்­ள­னர். இதில் ஆயி­ரம் பேருக்கு புற்று நோய் அறி­கு­றி­கள் இருப்­பது தெரி­ய­வந்­தது.

“இது பர­வும் புற்று நோய் அல்ல. குறைந்த வீரி­யம் உள்­ளது. இதற்கு வலி இல்­லா­மல், எளி­தாக சிகிச்சை அளிக்­க­லாம். இதற்கு முறை­யான பரி­சோ­தனை செய்து, சிகிச்சை அளிக்க வேண்­டும். ஒரே தட­வை­யில் பரி­சோ­தித்து சிகிச்சை அளித்­து­வி­ட­லாம்” என்று டாக்­டர். கியூக் ஸ்வீ சோங் தெரி­வித்­தார். இவர் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த மகப்­பேறு சிறப்பு மருத்­து­வர். இவர் டாக்­டர். நோர்­டனை 2009ல் முதன் முத­லில் சந்­தித்­தார். இவ­ரது தலை­மை­யில் சிங்­கப்­பூர் மருத்­து­வர்­கள் குழு, லடாக்­கில் டாக்­டர். நோர்­டன் முயற்­சிக்கு உறு­து­ணை­யாக இருக்­கின்­றது.

லடாக்­கில் தனது அனு­ப­வம் பற்றி சிங்­கப்­பூர் டாக்­டர். கியூக் ஸ்வீ சோங் கூறு­கை­யில், “முத­லில் சில வரு­டங்­கள் பரி­சோ­தனை செய்ய வேண்­டி­ய­தி­ருந்­தது. நோய்  தாக்­கம் பற்றி அறிய வேண்­டி­ய­தி­ருந்­தது. உள்­ளூர் மக்­க­ளின் நம்­பிக்­கையை பெற வேண்­டி­ய­தி­ருந்­தது. எங்­க­ளால் உள்­ளூர் மொழி­யில் பேச முடி­யாது. இத­னால் இந்த பகு­தி­யில் உள்ள மக்­களை பற்றி நன்கு அறிந்த, நோயா­ளி­க­ளு­டன் நல்ல புரி­தல் உள்­ள­வர் தேவைப்­பட்­டார். அவர்­தான் டாக்­டர்.நோர்­டன். அவர் மொழி பெயர்ப்­பா­ள­ராக, உள்­ளூர் மக்­கள் மத்­தி­யில் பரி­சோ­தனை செய்து கொள்ள வேண்­டிய அவ­சி­யத்தை பற்றி எடுத்­து­ரைத்­தார். அவர் கிரா­மம், கிரா­ம­மாக, வீடு வீடாக சென்று பெண்­கள் மத்­தி­யில் விளக்கி நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­னார் என்று சிங்­கப்­பூர் டாக்­டர். கியூக் ஸ்வீ சோங் தெரி­வித்­தார். இந்த மருத்­துவ முகாம் ஒவ்­வொரு வரு­ட­மும் லடாக்­கில் நடை­பெ­று­கி­றது.  

டாக்­டர். நோர்­ட­னின் மற்­றொரு சாதனை நுப்ரா பள்­ளத்­தாக்கு புகை­யிலை இல்லா பிராந்­தி­ய­மாக மாற்­றி­யது என­லாம். 2011ம் ஆண்டு வாக்­கில் ஆறாம் வகுப்பு முதல் எட்­டாம் வகுப்பு வரை படிக்­கும் மாண­வர்­கள் கூட புகை பிடிக்­கும் பழக்­கத்­திற்கு அடிமை ஆவது மக்­களை கவ­லை­யில் ஆழ்த்­தி­யது.

இதை தடுக்க டாக்­டர். நோர்­டன், லடாக் உமன் அலை­யன்ஸ் அமைப்­பைச் சேர்ந்த பெண்­கள், மற்ற பெண்­க­ளு­டன் இணைந்து புகை­யி­லை­யின் ஆபத்து பற்றி விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­னார். குறிப்­பாக மாண­வர்­கள், இளம் தலை­மு­றை­யி­னர் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­னார். பிள்­ளை­கள் புகை பிடிக்­கும் பழக்­கத்­திற்கு அடிமை ஆவதை தடுக்க, நுப்ரா பள்­ளத்­தாக்­கில் உள்ள எல்லா கடைக்­கா­ரர்­க­ளும் புகை­யிலை பொருட்­களை விற்­பனை செய்­வ­தில்லை என்று தீர்­மா­னித்­த­னர். ஒரே மாதத்­தில் நுப்ரா பள்­ளத்­தாக்கு முழு­வ­தும் புகை­யிலை இல்லா பகு­தி­யாக ஆனது.

லடாக் புத்­த­மத சங்­கத்­தின் பெண்­கள் பிரி­வு­டன் சேர்ந்து டாக்­டர். நோர்­ட­னும், அவ­ரது குழு­வி­ன­ரும் லடாக் பிராந்­தி­யத்­தில் 200க்கும் மேற்­பட்ட கிரா­மங்­க­ளுக்கு, குறிப்­பாக சாம், லேக், சாங்­தங், ஜனஸ்­கார் பகு­தி­க­ளுக்கு சென்று புகை­யிலை, மது போன்­ற­வை­க­ளால் ஏற்­ப­டும் தீமை­கள் பற்­றி­யும், பெண்­க­ளின் உடல்­நல பிரச்­னை­கள் பற்றி விழிப்­பு­ணர்வு பிர­சா­ரம் செய்­துள்­ள­னர். முக்­கி­ய­மாக மது­வி­னால் ஏற்­ப­டும் தீமை­கள் பற்றி எடுத்­துக் கூறி­யுள்­ள­னர்.

எங்­க­ளது நோக்­கம் மதுவை முழு­வ­தும் தடை செய்­வ­தல்ல. ஆனால் நாங்­கள் கிரா­மங்­க­ளுக்கு சென்று மது­வி­னால் ஏற்­ப­டும் பாதிப்­பு­கள் பற்றி விளக்­கி­னோம். இது பற்றி மக்­க­ளுக்கு புரி­தல் வந்­த­வு­டன், 150 கிரா­மங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் திரு­ம­ணம் அல்­லது திரு­வி­ழாக்­க­ளில் மது வழங்­கு­வ­தில்லை என்று தீர்­மா­னித்­துள்­ள­னர் என்று டாக்­டர். நோர்­டன் தெரி­வித்­தார்.

அதே நேரத்­தில் டாக்­டர். நோர்­டன், லடாக்­கில் மருத்­துவ வசதி இல்­லாத தொலை­தூர பகு­தி­க­ளுக்கு சென்று சேவை செய்­வ­தை­யும் தொடர்ந்­தார். இவ­ரும், இவ­ரது குழு­வி­ன­ரும் மருத்­துவ பரி­சோ­தனை முகாம்­களை நடத்தி, இல­வ­ச­மாக மருந்­து­கள் கொடுத்­த­னர். இந்த செலவை ஈடு­கட்ட வங்­க­யில் கடன் வாங்கி 2012ல் லேக்­கில் உண­வ­கத்தை தொடங்­கி­யுள்­ளார்.

இந்த உண­வ­கத்­தில் இருந்து கிடைக்­கும்  லாபம், இல­வ­ச­மாக கொடுக்­கும் மருந்­து­களை வாங்க பயன்­ப­டு­கி­றது. எனது குடும்­பம் பொரு­ளா­தார ரீதி­யில் வச­தி­யா­ன­தாக இருப்­ப­தால், நான் சம்­பா­திப்­ப­தில் எதை­யும் சேர்த்து வைப்­ப­தில்லை. அவற்றை எல்­லாம் மக்­கள் நல­னுக்­காக செல­வ­ழிக்­கின்­றேன்” என்­கின்­றார் டாக்­டர். நோர்­டன்.

இவர்­கள் குடும்­பத்­திற்கு சொந்­த­மாக நுப்ரா ஆர்­கா­னிக்  ரீடி­ரிட் என்ற தங்­கும் விடுதி உள்­ளது. இங்கு சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு லடாக்­கில் பராம்­ப­ரிய இயற்கை விவ­சா­யம் பற்றி விளக்­கப்­ப­டு­கி­றது.

டாக்­டர். நோர்­டன் தொடர்ந்து ஆறு வரு­டங்­கள் மக்­கள் சேவை செய்த பிறகு, கொல்­கத்­தா­வில் உயர் பட்­டப்­ப­டிப்பு படிக்க சென்­றார். மேற்கு வங்க ஹெல்த் அண்ட் சயின்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் காது, மூக்கு, தொண்டை பிரி­வில் உயர்­பட்­டப் படிப்பு படித்து முடித்­தார். படிப்­பில் சிறந்து விளங்­கி­ய­தால் தங்க பதக்­க­மும் வாங்­கி­னார். படித்து முடித்து விட்டு அறுவை சிகிச்சை நிபு­ண­ராக லடாக் திரும்­பி­னார். லேக்­கில் உள்ள மகா­போதி மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­று­கி­றார். அத்­து­டன் மருத்­துவ சேவை­யை­யும் தொடர்­கி­றார். ஒவ்­வொரு வரு­ட­மும் புற்று நோய் பாதிக்­கப்­பட்ட ஒரு நோயா­ளிக்கு சொந்த செல­வில் டில்­லி­யில் சிகிச்சை அளிக்க ஏற்­பாடு செய்­கின்­றார். அத்­து­டன் 16 மாதங்­கள் லடாக் சுற்­றுச் சூழல் மேம்­பாட்டு குழு நிர்­வாக இயக்­கு­ந­ரா­க­வும் சேவை செய்­துள்­ளார். அப்­போது லேக் பிராந்­தி­யத்­தில் நிலத்­தடி நீர் மாசு­ப­டு­வது, குப்­பை­களை கையா­ளு­தல், போக்­கு­வ­ரத்து நெரி­சல், காற்று மாசு, கழி­வு­நீர் வெளி­யேற்­றம், பொது இடங்­களை பரா­ம­ரிப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளார்.

நான் சிறு வய­தில் தாயாரை இழந்­து­விட்­டேன். யாரும் என்னை போல் பாதிக்­கப்­பட கூடாது. இதற்கு ஒரே தீர்வு, மக்­கள், குறிப்­பாக பெண்­கள், அவர்­க­ளது உடலை பற்றி நன்கு புரிந்து கொள்ள வேண்­டும். அப்­படி செய்­யும் போது பல்­வேறு வியா­தி­களை தவிர்க்­க­லாம். அத­னால் தான் நான் சேவை செய்து கொண்­டுள்­ளேன்” என்­கின்­றார் டாக்­டர்.நோர்­டன் ஓட்­சர்.

நன்றி: தி பெட்­டர் இந்­தியா

இணை­ய­த­ளத்­தில் ரிஞ்­சன் நோப்ரு வாங்­சுக்.  

Trending Now: