போலீ­சுக்கு பயந்து 17 வரு­டம் குகை­யில் தஞ்­சம்

04-10-2019 08:19 PM

சீனா­வில் சிறை­யில் இருந்து தப்பி, 17 வரு­டம் குகை­யில் மறைந்து வாழ்­த­வரை போலீ­சார் கைது செய்­துள்­ள­னர். சிச்­சு­வான் மாநி­லத்­தில் பெண்­கள், சிறு­மி­களை பாலி­யல் தொழி­லில் ஈடு­ப­டுத்தி வந்­த­வர் தற்­போது 63 வய­தா­கும் சாங் ஜியாங். இவர் 2002ல் சிச்­சு­வான் மாநில சிறை­யில் இருந்து தப்­பி­யுள்­ளார். இவரை தேடும் பணி முடிக்­கி­வி­டப்­பட்­டது. ஆனால் பல ஆண்­டு­கள் கடந்­தும் போலீ­சா­ருக்கு எவ்­வித தக­வ­லும் கிடைக்­க­வில்லை. இந்­நி­லை­யில் யுன்­னன் மாநில போலீ­சார் சாங் ஜியாங் பற்றி தங்­க­ளுக்கு உறு­தி­யான தக­வல் கிடைத்து இருப்­ப­தாக அறி­வித்­த­னர். அங்கு அமைந்­துள்ள மலைப்­ப­கு­தி­யில் ட்ரோன் விமா­னத்­தின் உத­வி­யு­டன் தேடு­தல் வேட்­டையை தொடங்­கி­னர். அந்த பகு­த­யில் சாங் ஜியாங் பயன்­ப­டுத்­திய குப்பை குவிந்து கிடந்­துள்­ளதை பார்த்­த­னர். அவர் வனப்­ப­கு­தி­யில் இருந்த குகை­யில் தலை­ம­றை­வாக வாழ்ந்து வந்­துள்­ளார். உடனே கைது செய்­த­னர்.
Trending Now: