பிளாஸ்­டிக் பாட்­டில்­க­ளுக்கு பதில் ரயில் டிக்­கெட்

04-10-2019 08:18 PM


இத்­தாலி தலை­ந­கர் ரோமில் சுற்­றுச் சூழலை பாது­காக்க மூன்று முக்­கிய ரயில் நிலை­யங்­க­ளில் பிளாஸ்­டிக் பாட்­டில்­களை மறு சுழற்சி செய்ய கொடுக்­கும் பய­ணி­க­ளுக்கு இல­வச டிக்­கெட் வழங்கி ஊக்­கு­விக்­கின்­ற­னர். இந்த திட்­டம் கடந்த ஜூலை மாதம் அறி­மு­கம் செய்­யப்­பட்­டது. இதற்கு மக்­க­ளி­டையே மிகுந்த வர­வேற்பு உள்­ளது. இந்த மூன்று ரயில் நிலை­யங்­க­ளி­லும் இது­வரை 3 லட்­சத்து 50 ஆயி­ரம் பிளாஸ்­டிக் பாட்­டில்­கள் மறு­சு­ழற்சி செய்­யப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்த வெற்­றியை தொடர்ந்து, இந்த திட்­டம் அனைத்து மெட்ரோ ரயில் நிலை­யங்­க­ளி­லும் விரிவு படுத்­தப்­ப­டும். அடுத்த வரு­டம் ஜூலை வரை தொட­ரும் என்று ரயில் போக்­கு­வ­ரத்து நிறு­வ­ன­மான ஏ.டி.ஏ.சி கூறி­யுள்­ளது.

தற்­போ­துள்ள மறு சுழற்சி இயந்­தி­ரங்­க­ளில் தின­சரி 20 ஆயி­ரம் பிளாஸ்­டிக் பாட்­டில்­களை மறு­சு­ழற்சி செய்­ய­லாம். சரா­ச­ரி­யாக ஒரு பயணி 20 பாட்­டில்­கள் வரை மறு­சு­ழற்­சிக்கு இயந்­தி­ரத்தை பயன்­ப­டுத்த முடி­யும். சில பய­ணி­கள் இல­வச டிக்­கெட்­டிற்­காக 20 நாட்­க­ளில் 3,500 பாட்­டில்­கள் வரை மறு­சு­ழற்சி செய்­துள்­ள­னர். அவர்­க­ளுக்கு 175 இல­வச டிக்­கெட்­டு­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதே போன்ற திட்­டம் பெய்­ஜிங், இஸ்­தான்­புல் நக­ரங்­க­ளி­லும் அம­லில் உள்­ளது. ஐரோப்­பா­வில் முதன் முறை­யாக இத்­தாலி தலை­ந­கர் ரோமில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். இனி மற்ற ஐரோப்­பிய நாடு­க­ளி­லும் அறி­மு­கப்­ப­டுத்த வாய்ப்பு உள்­ளது.Trending Now: