சென்செக்ஸ் 433 புள்ளிகள், நிப்டி 139 புள்ளிகள் வீழ்ச்சி

04-10-2019 05:30 PM

மும்பை

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கையை கமிட்டி ரெப்போ வட்டியை கால் சதவீத அளவுக்கு குறைந்துள்ள போதிலும் மும்பை பங்குச் சந்தையிலும் தில்லி தேசிய பங்குச் சந்தையிலும் அது எதிர்பார்த்த உயர்வை வழங்க வில்லை.

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டெண்களில் ஒன்றான சென்செக்ஸ் 433.56 புள்ளிகளை இழந்து,37 673. 31ல்நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையின் அடையாள குறியீட்டு எண் நிப்டி 50 இன்று 139.25 புள்ளிகளை இழந்து
11174. 75 ல்நிலை பெற்றது.

சென்செக்ஸ் இழப்பு 1.14 சதவீதம்.
 நிப்டி இழப்பு 1.23 சதவீதம்.

இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஐந்தாவது நாளாக இழப்பில் மூழ்கியுள்ளன.

இன்றைய வங்கிகள் இழப்பில் முன்னிலை வகித்தன.
எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் பேங்க் ஆகிய வங்கிகளின் பங்குகள் 3% இழப்பில்முடிந்தன.

தேசிய பங்குச் சந்தையின் நிப்டி வங்கி குறியீட்டெண் 700 புள்ளிகள் சரிந்தது.

மொத்த சரிவு சதவீதம் 2.4 ஆகும். வங்கிக் குறியீட்டெண் பட்டியலில் உள்ள 12 வங்கிகளில் 10 வங்கிகள் இழப்பை சந்தித்துள்ளன.

ஐடி துறை மட்டும் இன்று முழுக்க முழுக்க லாபம் சம்பாதித்தது.
Trending Now: