தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கின் இறுதி விசாரணைத் தேதி அக்.15-ல் முடிவு செய்யப்படும்: ஐகோர்ட் உத்தரவு

04-10-2019 10:32 AM

மதுரை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் இறுதி விசாரணைக்கான தேதி வரும் அக்டோபர் 15-ம் தேதி முடிவு செய்யப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விரைவாக விசாரிக்கக் கோரி ஸ்டெர்லைட் தரப்பு மூத்த வழக்கறிஞர் நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக முறையீடு செய்யப்பட்டது.

இந்த முறையீடு இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,

வழக்குகளை டிசம்பர் மாதம் தான் விசாரிக்க இயலும் எனக் கூறினர்.

அதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் தரப்பிலிருந்து சில புகைப்படங்கள் நீதிபதிகளிடம் காட்டப்பட்டன.  இதையடுத்து நீதிபதிகள் அக்டோபர் 15-ம் தேதி மாலை 4 மணிக்கு மேல் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக வழக்கின் இறுதி விசாரணைக்கான தேதி முடிவு செய்யப்படும் எனக் கூறினர்,

அக்டோபர் 15-ம் தேதி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை வழக்கு சம்பந்தமான அனைத்து வழக்கறிஞர்களும் ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.Trending Now: