இது உங்கள் இடம்

03-10-2019 03:47 PM

முதுமை சுமை அல்ல.... சுகம்!

எனக்கு மிக­வும் பரிச்­ச­ய­மான பெரி­ய­வர். வயது 86. மனைவி, மக்­கள், பேரன், பேத்தி, கொள்­ளுப்­பே­ரன், பேத்­தி­க­ளோடு வாழ்ந்து வரு­கி­றார். தான் உழைத்து சம்­பா­தித்து சேர்த்து வைத்த சொத்தை, எல்லா பிள்­ளை­க­ளுக்­கும் பிரித்து கொடுத்­த­தோடு தனக்­கென்று கொஞ்­ச­மும் வைத்­தி­ருக்­கி­றார். ‘இந்த வய­சுல உங்­க­ளுக்கு எதுக்கு?’ என்று கேட்­டால், ‘என் இஷ்­டப்­படி தர்­மம் பண்­ணிக்­கொண்டே இருக்­க­ணும்... அதி­லே­தான் நிஜ­மான சந்­தோ­ஷம் காண்­கி­றேன்...’ என்று நெஞ்­சம் நிறைந்து சொல்­கி­றார். உற­வி­னர் – நண்­பர்­கள் வீட்டு நல்­லது – கெட்­ட­து­க­ளுக்கு ஓடிப்­போய் முதல் ஆளாக ஆஜ­ராகி, அனை­வ­ரு­ட­னும் எந்­த­வித பேத­மும் காட்­டா­மல், அர­சி­யல் முதல் ஆன்­மி­கம் வரை சக­ஜ­மாக – சர­ள­மா­கப் பேசு­கி­றார். பத்­தி­ரிகை வாசிப்­ப­தி­லும், டிவி­யில் முக்­கி­ய­மான நிகழ்ச்­சி­களை பார்ப்­ப­தி­லும் இன்­ற­ள­வும் முழு ஆர்­வத்­தில் இயங்­கு­கி­றார். சுகர், பிபி என்று எந்த நோயும் அவரை நெருங்­கி­ய­தில்லை. ஒரு டீ குடித்­தா­லும் சோம்­பல் படா­மல் உடனே நீரால் வாய் கொப்­ப­ளித்து சுத்­தப்­ப­டுத்தி விடு­வார். அவ­ரி­டம் எனக்கு பிடித்த இன்­னொரு பண்பு.... வாழ்­வில் இன்­பமோ – துன்­பமோ எது வந்­தா­லும் விருப்பு – வெறுப்­பில்­லா­மல் சம­மாய் ஏற்­றுக்­கொள்­ளும் மனத்­தெ­ளிவு.... மன ஊக்­கம்... மனத்­தி­டம்! இப்­போது சொல்­லுங்­கள்...! முதுமை சுமையா? வேத­னையா? எரிச்­சலா? இல்லை.... இல்லை...! முதுமை சுகா­னு­ப­வம்... சுவா­ரஸ்­யம்... சுய­கம்­பீ­ரம்! எப்­போது? பொரு­ளா­தா­ரம், உடல், ஊக்­கம் மூன்­றை­யும் கன­கச்­சி­த­மாக கையா­ளும் போது!

– பி.ஜி.பி. இசக்கி, பொட்­டல்­பு­துார்.

பொறுப்­பான மாண­வன்!

உற­வுக்­கார மாண­வன் ­தான் படிக்­கும் போது சங்­கத்­தி­லி­ருந்து கல்வி உத­வித்­தொ­கையை மூன்று ஆண்­டு­கள் பண உதவி பெற்­றான். அரி­யர் இல்­லா­மல் நல்ல முறை­யில் படித்து முடித்து, வேலை­யி­லும் சேர்ந்து விட்­டான். முதல் மாத சம்­ப­ளம் வாங்­கி­ய­தும் உத­வித்­தொ­கை­யாக பெற்ற அதே மதிப்­புள்ள பணத்­து­டன் சங்­கத் தலை­வரை காண­வந்­தான். சங்­கம் மூலம் படித்­த­தற்கு நன்றி கூறி, ‘‘மறுக்­கா­மல் இந்த பணத்தை பெற்று என்னை போல் உதவி எதிர்­பார்க்­கும் இன்­னொரு மாண­வ­னுக்கு கொடுத்து உத­வுங்­கள். அவ­னும் முன்­னே­றட்­டுமே’’ என்­றான். பணம் வாங்­கி­ய­வு­டனே உத­வி­ய­வர்­களை மறந்­து­வி­டு­ப­வர்­கள் மத்­தி­யில் பொறுப்­பை­யும் நன்­றி­யை­யும் ஒரு­சேர பெற்ற அம்­மா­ண­வனை பாராட்டி அவன் பெற்­றோரை வாழ்த்தி மகிழ்ந்­தோம்.

– என். கோமதி, பெரு­மாள்­பு­ரம்.

வம்பா.... வள­ருது கொம்பு!

இன்று நவீன ‘டச்’ போன் வந்து சிறு­வர்­கள், இளை­ஞர்­களை பத்­தி­ரிகை வாசிப்­ப­தற்கு ‘டச்’ இல்­லா­மல் செய்­து­விட்­டது. ‘டச்’ போனில் (செல்) முழு கவ­னம் செலுத்­து­வ­தால் அவர்­க­ளது மதிக்­கூர்மை மங்க செய்து கவ­னம் அதிலே இருப்­ப­தால் பக்­கத்­தில் எது நடந்­தா­லும் தெரிய செய்து விடு­கின்­றன. இவர்­கள் குனிந்து பார்த்து கொண்டு இருப்­ப­தால் கழுத்­தின் பின்­பு­றம் கொம்பு முளைப்­ப­தாக விஞ்­ஞா­னி­கள் கூறு­கி­றார்­கள். மிக எச்­ச­ரிக்கை விழிப்­பு­ணர்வு தேவை, செல்­போன் தகாத வழிக்கு இழுத்து செல்­கி­றது. உங்­க­ளது வாழ்க்­கையை குறை­யில்­லா­மல் பார்த்­துக் கொள்­வது நன்று.

– பாரதி சுந்­தர், குறண்டி.

பெரு­மி­த­மும் பர­வ­ச­மும்...

என் இளைய மக­னுக்கு நாய்­கள் மீது எப்­போ­தும் பிரி­யம் ஜாஸ்தி. ஆனால் வீட்­டில் வளர்த்து அதன் மேல் மட்­டும் அன்பை பொழி­வ­தில் ஆர்­வம் கிடை­யாது. தெரு­நாய்­க­ளுக்கு தாரா­ள­மாக பிஸ்­கட் வாங்­கிக் கொடுத்து மகிழ்­வ­தும், அவற்றை பாசத்­தோடு தடவி கொடுத்து மகிழ்­விப்­ப­தும் அவ­னுக்கு பிடித்­த­மான விஷ­யம். நானும் அவ­னும் மார்க்­கெட்­டுக்கு செல்­லும் போது ‘பரிச்­ச­ய­மான நண்­பர்­களை’ பார்த்­து­விட்ட குஷி­யில் வண்­டியை நிறுத்­தி­னான். கடை­யில் ஆறு ‘டைகர்’ பிஸ்­கட் பாக்­கெட்­டு­களை வாங்­கி­னான். ஆளுக்­கொன்­றாக பிரிக்­கா­ம­லேயே அத­ன­தன் அரு­கில் வைத்­தான். அவை­யும் ‘லபக்’­கென்று பாக்­கெட்டை கல்­விக் கொண்டு கண்­க­ளால் நன்றி கூறி­ய­வாறே நகர்ந்­தன. வண்­டி­யில் ஏறி­ய­தும் கேட்­டேன்... ‘‘பிஸ்­கட் பாக்­கெட் கவரை பிரித்து போடு­வ­தில் உனக்­கென்ன சோம்­பே­றித்­த­னம்?’’ இந்த கேள்­விக்­காக காத்­தி­ருந்­த­வன் போல கணம்  தாம­திக்­கா­மல் பதி­ல­ளித்­தான். ‘‘வேண்­டு­மென்­றே­தான் முழு பாக்­கெட்­டை­யும் போட்டு பழ­கி­யி­ருக்­கேன். கார­ணம் ஒண்ணு... கவரை பிரித்து சாப்­பி­டும் மனப்­பக்­கு­வம் கிடைக்­கி­றது. இரண்டு.... இஷ்ட இடத்­திேல போய் நின்னு, நிதா­னமா தின்­கிற சுதந்­தி­ரம்... மூணு...! நாமே பிரிச்சி போட்­டோம்னா, பல­முள்ள நாய் பயந்­தாங்­கொள்­ளி­களை ஓரம் கட்டி பெரும்­பா­லான பிஸ்­கட்­டு­களை உள்ளே தள்­ளி­டும். அநி­யா­யம் இத­னால் நடக்­காது...’’ மக­னின் உள்­ளார்ந்த நோக்­கத்­தை­யும் புரி­த­லை­யும் உணர்ந்து, மன­துக்­குள் பெரு­மி­த­மும் பர­வ­ச­மும் பெற்­றேன்.

– இ. கஸ்­துாரி, அகஸ்­தி­யர்­பட்டி.

Trending Now: