மீண்டும் களமிறங்குது சீனியர் ‘ஹிட்’ ஜோடி!

03-10-2019 03:39 PM

நடி­கர் ரிஷி­ க­பூ­ரும், ஜூகி சாவ்­லா­வும் 1990களில் இணைந்து நடித்த பல பாலி­வுட் படங்­க­ளும் அமோக வர­வேற்­பைப் பெற்­றன. 1992ல் வெளி­யான ‘போல் ராதா போல்’, 1994ல் வெளி­யான ‘சாஜன் கா கார்’, செம ஹிட்.

இப்­போது ரிஷி ­க­பூ­ருக்கு 67 வயது. ஜூகிக்கு 51 வயது. இவர்­கள் ஒரு புதிய படத்­தில் மீண்­டும் ஜோடி­யாக நடிக்­கப் போவ­தாக கடந்த ஆண்டே பர­ப­ரப்பு வந்­தது.

ஆனால், ரிஷி ­க­பூ­ருக்கு திடீர் உடல்­ந­லக்­கு­றைவு ஏற்­பட்­ட­தால் புதிய படத் தயா­ரிப்பு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. பின்­னர், அவ­ருக்கு புற்­று­நோய் பாதிப்பு வந்­தி­ருப்­ப­தால் அமெ­ரிக்­கா­வில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கத் தக­வல் வெளி­யா­ன­தில் பாலி­வுட்­டும் ரசி­கர்­க­ளும் அதிர்ச்­சி­யில் உறைந்­த­னர்.  பல நட்­சத்­தி­ரங்­க­ளும் அவ்­வப்­போது அமெ­ரிக்கா பறந்து, அவரை சந்­தித்து நலம் விசா­ரித்து வந்­த­னர்.

சிகிச்சை முடிந்து, மும்­பைக்கு கடந்த 19ம் தேதி மும்பை திரும்­பிய ரிஷி­ க­பூர் தனது டுவிட்­டர் பக்­கத்­தில், ‘வீடு திரும்பி விட்­டேன்! 11 மாதங்­கள், 11 நாட்­கள்!! அனை­வ­ருக்­கும் நன்றி’ என்று பதி­விட்­டுள்­ளார். அவ­ருக்கு பிர­ப­லங்­கள் மற்­றும் நெட்­டி­சன்­க­ளின் வாழ்த்­து­கள் குவிந்து வரு­கின்­றன.

ஜூகி சாவ்லா அளித்த பேட்­டி­யில், ‘‘ரிஷி கபூர் வீடு திரும்­பி­யி­ருப்­பது மிகுந்த மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது. நாங்­கள் மீண்­டும் சேர்ந்து நடிக்­கும் படத்­தின் ஷூட்­டிங் விரை­வில் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கி­றேன்!’’ என்று குறிப்­பிட்­டி­ருக்­கி­றார். இத­னால், இவர்­க­ளின் புதிய படம் பற்­றிய பர­ப­ரப்பு மீண்­டும் தொடங்­கி­யுள்­ளது.Trending Now: