பிபாஷா ‘18’ குஷி!

03-10-2019 03:38 PM

நடிகை பிபாஷா பாசு, பாலிவுட்டில் வெற்றிகரமாக 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த சந்தோஷத்தை, தனது முதல் படமான அஜ்னாபியின் போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டு கொண்டாடியிருக்கிறார். அவரது பதிவு:

‘18 ஆண்டுகளாக பாலிவுட்டில் நிலைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. 18 ஆண்டுகளுக்கு முன் ‘அஜ்னாபி’யில் அறிமுகமான என்னை, ரசிகர்கள் இதயத்தில் வைத்து கொண்டாடி வருகின்றனர். நான் என்ன சாதனை செய்தேன் என்று தெரியவில்லை.

 ஆனால் இந்த அங்கீகாரம் எனக்கு பெருமிதத்தை அளிக்கிறது. என்னுடைய ஒவ்வொரு படத்திலும் பணிபுரிந்த சக கலைஞர்களுக்கும், என்னை தொடர்ந்து ஆதரிக்கும் ரசிகர்களுக்கும், அனைவருக்கும் நன்றி.

‘அஜ்னாபி’யில் நடித்த பாபி தியோல், அக்‌ஷய் குமார், கரீனா கபூர், விஜய் கலானி, அந்த படத்தில் பணியாற்றிய அப்பாஸ் பாய், முஸ்தான் பாய், உசைன் பாய் ஆகிய கலைஞர்களுக்கு மிகுந்த நன்றி. நான் அவர்கள் மீது நிறைய அன்பு வைத்துள்ளேன்.’Trending Now: