பிளாஸ்­டிக்­கிற்கு மாற்று செல்­லு­லோஸ்?

03-10-2019 03:36 PM

ஒரு முறை பயன்­ப­டுத்தி கடா­சப்­ப­டும் பிளாஸ்­டிக் கப்­பு­க­ளுக்கு மாற்­றாக, செல்­லு­லோஸ் மூலம் கப்­பு­கள், தட்­டுக்­களை செய்­யும் தொழில்­நுட்­பத்தை உரு­வாக்கி இருக்­கி­றது, 'பல்­பாக்!'

ஏற்­க­னவே பல துறை­க­ளில் புழங்­கும் செல்­லு­லோ­சைக் கொண்டு, உலர்ந்த பொருட்­கள், ஈர­முள்ள பொருட்­கள் என, இரண்­டை­யும் கையா­ளும் வகை­யில் தயா­ரிக்­கும் தொழில்­நுட்­பத்தை, பல்­பாக் அறி­மு­கப்­ப­டுத்தி அசத்­தி­யுள்­ளது. உலர் கலன்­க­ளுக்­கான செல்­லு­லோஸ் கூழினை, வார்ப்­பு­க­ளில் ஊற்றி, ஒரே நொடி அழுத்­தம் தந்­தால், ஒரு செல்­லு­லோஸ் கப் தயா­ரா­கி­வி­டு­கி­றது.

ஈரப் பொருட்­களை சுமக்­கும் செல்­லு­லோஸ் கப்பை தயா­ரிக்க, 'ஐசோஸ்­டா­டிக் பிரஸ்' முறை­யில் அழுத்­தம் தந்து பொருட்­களை தயா­ரித்து விட­லாம். ஈரப் பொருட்­களை வெகு­நே­ரம் தாங்­கும் வகை­யில், இது சற்றே கூடு­தல் கடி­ன­மா­க­வும் இருக்­கும்.

இரண்டு முறை­க­ளி­லும் பிளாஸ்­டிக்­கை­விட குறைந்த நேரத்­தில், குறை­வான செல­வில் கப்­பு­கள் போன்­ற­வற்றை தயா­ரிக்க முடி­யும் என்­கி­றது, பல்­பாக். செல்­லு­லோஸ் நீரில் கரை­யும்; எளி­தில் மட்­கி­வி­டும்.

இத­னால், ஒரு முறை பயன்­ப­டுத்தி எறி­யப்­பட்­டா­லும், அவை சுற்­றுச்­சூ­ழ­லுக்கு சவா­லாக இருக்­காது. ஒரு முறை பயன்­ப­டும் பிளாஸ்­டிக் பொருட்­க­ளுக்கு தடை உல­கெங்­கும் பர­வும் நிலை­யில், வந்­தி­ருக்­கும் செல்­லு­லோஸ் கப்­பு­கள், தட்­டு­ க­ளுக்கு வர­வேற்பு பெரு­குமா?Trending Now: