பாலகங்காதர திலகர்

02-10-2019 07:22 PM

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது, பாலகங்காதர திலகரின் நடவடிக்கைகளை, உளவு அறிய, ஆங்கிலேய அரசு, தீவிர நடவடிக்கை எடுத்தது. ரகசிய போலீஸ்காரர் ஒருவரை, திலகர் வீட்டில், சமையல் வேலையாளாக அனுப்பியது.

சில மாதங்கள் சென்றன; சமையல் பணியாளராக இருந்த ரகசிய போலீஸ், ஒருநாள் திலகரை வணங்கி, 'எஜமான் சம்பளம் போதவில்லை; போட்டு தர வேண்டும்...' என்றார்.

சிரித்தபடியே, 'ஏனப்பா... உனக்கு, ஆறு ரூபாய் சம்பளம் தருகிறேன். ஆங்கிலேய அரசு, 26 ரூபாய் சம்பளம் கொடுக்கிறது; திருப்தி ஏற்படவில்லை என்றால், உன் முதல் எஜமானரிடம் தான் கேட்க வேண்டும்...' என்றார் திலகர்.

போலீஸ்காரரின் தலை தாழ்ந்தது; அதற்கு பின், அவர் வேலைக்கு வரவில்லை.Trending Now: