விழாக்கால பட்ஜெட்டை சமாளிப்பது எப்படி...! – குட்டிக்கண்ணன்

02-10-2019 06:42 PM

இது பண்­டி­கைக்­கா­லம். கொண்­டாட்­ட­மும், செல­வும் ஒரு­சேர நிக­ழும் கால­கட்­டம் என்­ப­தால் மாத பட்­ஜெட் போடு­ப­வர்­கள் கொஞ்­சம் `ஜெர்க்’ அடித்து நிற்­பார்­கள். திட்­ட­மிட்­டால் எந்­த­வித சிர­ம­மும் இல்­லா­மல் எளி­தாக கொண்­டா­ட­லாம்" என்­கி­றார் பொரு­ளா­தார நிபு­ணர் முத்­து­கி­ருஷ்­ணன்.

1. லிஸ்ட் போடுங்­கள்

நவ­ராத்­திரி, தீபா­வளி, கிறிஸ்­து­மஸ், பொங்­கல் என நீங்­கள் கொண்­டா­டப் போகும் பண்­டி­கை­க­ளின் லிஸ்ட் போடுங்­கள். அவற்­றுக்கு என்­ன­வெல்­லாம் தேவை, எது அவ­சி­யம், எது ஆடம்­ப­ரம் என எல்­லா­வற்­றை­யும் குறித்­துக்­கொள்­ளுங்­கள்.

2. அவ­சி­யத் தேவைக்கு முன்­னு­ரிமை

ஒன்று வாங்­கி­னால் மற்­றொன்று இல­வ­சம் என்­ப­தைப் பார்த்து உங்­கள் பட்­ஜெட்டை எகிற வைக்­கா­தீர்­கள். எது அத்­தி­யா­வ­சி­யமோ அதை மட்­டுமே வாங்க பிளான் போடுங்­கள். விளம்­ப­ரங்­க­ளில் மனதை அலை­பாய விடா­தீர்­கள்.

3. துணி­கள், கவ­னம் தேவை

வேலைக்­குச் செல்­ப­வர்­கள் அதிக துணி­கள் வைத்­தி­ருந்­தால் இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி வீட்­டில் இருப்­ப­வர்­க­ளுக்கு வாங்­கிக் கொடுங்­கள். வீட்­டில் உள்­ள­வர்­க­ளும் நீண்ட நாட்­கள் உழைக்­கும் ஆடை­க­ளா­கப் பார்த்து வாங்­குங்­கள். ஆபரை நம்பி குறை­வான விலை ஆடை­களை அள்ள வேண்­டாம். துணி­க­ளுக்கு போடும் பட்­ஜெட் என்­பது முன்­பின் இருக்­க­லாம் என்­ப­தால், இறுக்­கிப்­பி­டிக்­கா­மல் கொஞ்­சம் கூடு­த­லாக பணம் ஒதுக்­குங்­கள்.

4. ஸ்வீட்டை ஸ்வீட்­டாக்க

கடை­க­ளில் விண்­ணைத் தொடும் விலை­யில் விற்­கும் ஸ்வீட்­களை வாங்­கு­வதை விட, வீட்­டி­லேயே தெரிந்த ஸ்வீட்­களை செய்­யுங்­கள். அது முடி­ய­வில்லை என்­றால், ஸ்வீட் செய்து தரும் இல்­லத்­த­ர­சி­க­ளி­டம் ஆர்­டர் செய்து வாங்­குங்­கள். விலை குறை வாக­வும், தர­மா­ன­தா­க­வும் இருக்­கும். இல்­லை­யென்­றால், ஸ்வீட் மாஸ்­டரை அழைத்து ஸ்வீட் செய்ய வைத்து வாங்­க­லாம்.

5. சல்­யூட் செய்­வோம்  சாலை­யோர கடைக்கு!

பண்­டி­கைக்­குத் தேவை­யான தோர­ணப் பொருட்­கள், கோல மாவு, மெழு­கு­வத்­தி­கள் என ஓரிரு நாட்­க­ளுக்கு மட்­டுமே பயன்­ப­டுத்­தக்­கூ­டிய அலங்­கா­ரப் பொருட்­களை சாலை­யோ­ரக் கடை­கள் மற்­றும் குடி­சைத்­தொ­ழில் செய்­வோ­ரி­டம் வாங்­கி­னால் பணம் மிச்­சப்­ப­டுத்­தும் சாக்­கில் அவர்­க­ளுக்கு உத­வ­வும் முடி­யுமே!

6. இடை­வெளி கொடுங்­கள்

ஒரு பண்­டி­கைக்­கும் அடுத்த  பண்­டி­கைக்­கும் இடையே பத்து நாட்­கள் முதல் நாற்­பத்­தைந்து நாட்­கள் வரை இடை­வெளி இருக்­கி­றது. எனவே, ஒரே பண்­டி­கை­யில் அனைத்­துப்­பொ­ருட்­க­ளை­யும் வாங்­கி­விட நினைக்க வேண்­டாம். கையி­ருப்பு, போனஸ், ஆபர் என அனைத்­தை­யும் பொறுத்து தேவைப்­ப­டும் பொருட்­களை வாங்­கி­னால், அன்­றாட செல­வு­க­ளுக்கு அல்­லல்­பட வேண்­டி­யி­ருக்­காது.

7. செல­வுக்கு முத­லீடு செய்­யுங்­கள்

எதற்­கெ­டுத்­தா­லும் இ.எம்.ஐ-யில் வாங்­கு­வதை விட அதற்­குக் கொடுக்க நினைக்­கும் பணத்தை கணக்­கிட்டு, முன் ஏற்­பா­டாக குறிப்­பிட்ட தொகையை  மியூச்­சு­வல் பண்டு போன்ற குறைந்த ரிஸ்க் உள்ள முத­லீட்­டில் சேமிக்­க­லாம்.  உதா­ர­ண­மாக, 2019 அக்­டோ­ப­ரில் ஐந்து லட்­சம் மதிப்பு கொண்ட ஒரு காரை, 12 சத­வீத வட்­டிக்கு மூன்று வருட இ.எம்.ஐ-யில் வாங்க இருக்­கி­றீர்­கள் என வைத்­துக்­கொள்­வோம். நீங்­கள் ஒவ்­வொரு மாத­மும் 16,443 ரூபாய் வங்­கி­யில் செலுத்த வேண்­டி­ய­தி­ருக்­கும். மூன்று வருட முடி­வில் 16,443 X 36 = 5,91,948 ரூபாய் செலுத்­தி­யி­ருப்­பீர்­கள். இதற்­குப் பதி­லாக, இன்­றி­லி­ருந்தே நீங்­கள் இ.எம்.ஐ கட்ட நினைக்­கும் தொகையை எஸ்.ஐ.பி , எஸ்.டபுள்யூ.பி மு­றை­யில் மியூச்­சு­வல் பண்­டு­க­ளில் முத­லீடு செய்­ய­லாம். ஆண்­டுக்கு 12 சத­வீத சரா­ச­ரி­யாக லாபம் கிடைக்­கும் பட்­சத்­தில் மாதம் 11,492 ரூபாய் வீதம் மூன்று வரு­டம் முத­லீடு செய்­யும்­போது மூன்று ஆண்­டு­கள் முடி­வில் ஐந்து லட்ச ரூபாய் கிடைத்து விடும்.

இந்த மூன்று ஆண்­டு­க­ளில் நீங்­கள் செல­விட்ட தொகை 11,492 X 36 = 4,13,712 ரூபாய் மட்­டுமே. இது காருக்கு மட்­டு­மல்­லஞ் இ.எம்.ஐ மூலம் வாங்­கும் அத்­தனை பொருட்­க­ளுக்­கும் பொருந்­தும்.

8. பய­ணத்­தைத் திட்­ட­மி­டுங்­கள்

பண்­டிகை என்­ற­துமே முதல் நினைவு பய­ணம்­தான். ஊருக்­குச் செல்­வது என்­பது திட்­ட­மி­டப்­பட்­டால், நான்கு மாதங்­க­ளுக்கு முன்பே ரயில் மூல­மாக முன்­ப­திவு செய்­து­வி­டுங்­கள். இல்­லை­யென்­றால், பழைய பஸ்­ஸில் சாதா­ரண நாட்­க­ளில் விற்­கும் டிக்­கெட்­டின் விலை­யை­விட மூன்று மடங்கு அதி­க­மாக கொடுத்து, பய­ண­மும் கெட்டு, மன­தும் அவ­திப்­பட வேண்­டி­யது வரும். இப்­படி ஒவ்­வொரு விஷ­யத்­துக்­கும் பார்த்­துப் பார்த்து திட்­ட­மிட்டு செய்­வ­து­தான் நல்ல பட்­ஜெட்.

வர­வி­ருக்­கிற பண்­டிகை காலங்­களை, உங்­கள் திட்­ட­மி­ட­லால், இரட்­டிப்பு மகிழ்ச்­சி­யு­டன் கொண்­டாட அட்­வான்ஸ் வாழ்த்­து­கள்!”.Trending Now: