‘பெண்களே சம்பாதிக்க வழி தேடுங்கள்...!’ – சுமதி

02-10-2019 06:40 PM

என்­ன­தான் இரு­ப­தாம் நூற்­றா­ண­டில் இருந்­தா­லும், பெண்­க­ளுக்கு பாது­காப்பு இன்­னும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்­பது உண்­மை­தான்.இரவு 10மணிக்கு மேல் பெண்­கள் தனி­யாக பய­ணம் செய்ய ஆட்டோ ,டாக்­சி­யை­விட பேருந்தே சிறந்­தது என்­ப­து­தான் பெண்­க­ளின் சாய்ஸ்!

இப்­ப­டிப்­பட்ட நிலை­யில்,நள்­ளி­ர­வி­லும் ஆட்டோ ஒட்டி பெண்­களை பாது­காப்­பாக விட்­டு­விட்டு வரும் தைரி­ய­சா­லிப் பெண்­ணாக இருக்­கி­றார் ராஜி.ஓன்று நேற்று அல்ல பல வரு­டங்­க­ளாக ஆட்டோ ஓட்டி வரும் ராஜி,குழந்­தை­க­ளுக்­கும், முதி­ய­வர்­க­ளுக்­கும் இல­வ­ச­மாக ஆட்டோ ஒட்­டிச் சென்று ஒரு வித சேவை­யும் செய்து வரு­கி­றார்.

கேர­ளா­வில் இருந்து கோவைக்கு கண­வ­ரு­டன் வந்த ராஜி, கண­வ­ரின் பொரு­ளா­தார உத­விக்­காக லோனில் ஆட்டோ வாங்கி ஒட்­டக கற்­றுக்­கொண்டு பிறகு அங்கு ஆட்டோ ஓட்­டித் தொழில்­செய்ய சென்­னைக்கு வந்­த­தாக சொல்­கி­றார்.,

என் முதல் சவாரி மறக்க முடி­யாத ஒன்று. இப்ப நினைச்­சா­லும் நேத்து நடந்த மாதிரி இருக்கு. குளத்­தூ­ரில் உள்ள சிஸ்­டர் வீட்­டி­லி­ருந்து தான் ஆட்­டோவை ஓட்­டி­னேன். 242 பஸ்சை பாளோ பண்­ணிக்­கிட்டே சென்ட்­ரல் போனேன். அங்­கி­ருந்து யு டெர்ன் போட்டு பார்க் ஸ்டேஷ­னில் போய் கரெக்ட்டா நோ பார்க்­கிங்­கில் வண்­டியை போட்­டுட்டு நிக்­கு­றேன். ஆனா, உண்­மையா லேடி டிரை­வர்­க­ளுக்கு காவல்­துறை அதி­கா­ரி­கள் நல்ல சப்­போர்ட் கொடுப்­பாங்க.என்­கி­றார்.

உடல்­வலி,அசதி எல்­லா­மி­ருக்­கத்­தான் செய்­யும். வேறு வேலைக்கு போக­லாம்னா மாசம் ரூ500,  ரூ1000 தான் சம்­ப­ளம் கொடுப் பாங்க. நான் அந்த சம­யத்­திலே நாள் ஒன்­றுக்கு 1000ரூ ஆட்டோ ஓட்­டு­வேன. அதை விட்டு எப்­படி வேலைக்­குப் போக முடி­யும் என்று கேட்­கி­றார்.

இப்­படி பெண்­க­ளுக்கு ஒரு முன் உதா­ர­ண­மா­கத் திக­ழும்  இந்த ராஜி,பல கல்­லூ­ரி­க­ளுக்கு சென்று,அங்கு படிக்­கும் பெண்­க­ளுக்கு மோட்­டிவ் உரை­யாற்றி இருக்­கி­றா­ராம்.

இந்த காலத்­தில் கண­வன் மனைவி இரு­வ­ரும்­வே­லைக்கு சென்­றால்­தான் பிழைக்க முடி­யு­மென்று இரு­வ­ரும் சப்­பாத்­திக்க ஆரம்­பித்து  இருந்­தா­லும், இன்னும் கூட சில­பெண்­கள்,என்ன செய்­வது,எப்­ப­டிப்­பி­ழைப்­பது என்று தெரி­யா­மல் அவஸ்தை படும் நிலை நீடிக்­கி­றது.

அவர்­கள் ஆட்­டோ­தான் ஓட்ட வேண்­டு­மென்று இல்லை, ராஜி மாதிரி சிந்­தித்து முன்­னேற வேண்­டும் என்று துடித்து யோசித்­தால் சம்­பா­திக்­கும் எண்­ணம் தானாக வந்­து­வி­டும்.Trending Now: