கலக்கும் யூடியூப் தமிழச்சிகள்!

02-10-2019 06:39 PM

’யூடி­யூப்’ எல்­லாம் இனி டிரெண்ட் கிடை­யாது, வேற ஏகப்­பட்ட வீடியோ பிளாட்­பார்ம்ஸ் வந்­து­ருச்சு’ எனும் கதை­கள் எல்­லாம் புரா­ணம் ஆகப் போகி­றது. பிற வீடியோ பிளாட்­பார்ம்­க­ளின் வரவு யூடி­யூபை ஒரு போதும் பாதிக்­கப்­போ­வ­தில்லை என்­பதை அதில் வளர்ந்து வரும் யூடி­யூப் கலை­ஞர்­கள் நிரூ­பித்­துக் கொண்டே இருக்­கி­றார்­கள்.

சர்­வ­தேச அள­வில் ‘சூப்­பர்­வு­மன்’ லில்லி சிங், இந்­திய அள­வில் ‘மோஸ்ட்லீ சேன்’ பிர­ஜக்தா கோலி, நிகா­ரிகா என சில பெண் யூடி­யூப் பிர­ப­லங்­கள் அறி­மு­க­மாகி இருந்­தா­லும், தமிழ் யூடி­யூப் சூழ­லில் தனியே சேனல் நடத்­தும் பெண்­கள் பெரிய அள­வில் தெரி­வ­தில்லை.ஆனால், காமெடி ஸ்கெட்­சு­கள், சமை­யல் குறிப்­பு­கள், அழ­குக் குறிப்­பு­கள், மேக்-­­அப், நட­னம், கைவி­னைப் பொருட்­கள் என ஏகப்­பட்ட தமிழ் யூடி­யூப் சேனல்­களை பெண்­கள் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். தமிழ் யூடி­யூப் சூழ­லில் தவிர்க்க முடி­யாத சில பெண் யூடி­யூ­பர்­க­ளின் பட்­டி­யல் :

1.  சுப­லட்­சுமி பரிதா

தமி­ழில் காமெடி ஸ்கெட்­சு­கள் செய்­யும் சேனல்­கள் நிறைய இருக்­கின்­றன. ஆனால், பெரும்­பா­லான சேனல்­கள் ஆண்­க­ளால் நடத்­தப்­ப­டு­பவை, அவற்­றில் சில கதா­பாத்­தி­ரங்­க­ளில் பெண்­கள் நடிப்­பார்­கள். அப்­ப­டி­யான நடி­கர் சுப­லட்­சு­மி­யின் 'தி சீக்கி டி.என்.ஏ’ சேனல் மாறு­ப­டு­வது இந்த இடத்­தில் தான். இந்த சேன­லில் வெளி­யா­கும் வீடி­யோக்­களை எழுதி, நடித்து, ஷூட் செய்து, எடிட் செய்து என அத்­தனை வேலை­க­ளை­யும் தானே செய்­கி­றார். வழக்­க­மான யூடி­யூப் பாணி­யில் வீடி­யோக்­கள் வெளி­யி­டு­கி­றார் என்­றா­லும் தன்­னு­டைய தனித்­தன்­மை­யை­யும் உள்ளே புகுத்­து­வ­தன் வழியே பார்­வை­யா­ளர்­க­ளோடு ஒரு இணைப்பை உண்­டாக்­கு­கி­றார். 2018-ல் இந்­திய அள­வில் வெற்றி பெற்ற 12 பேரில் சுப­லட்­சு­மி­யும் இருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. எண்­பத்து ஒன்­பது ஆயி­ரத்­திற்கு மேலான சப்ஸ்­கி­ரை­பர்ஸை கொண்­டி­ருக்­கும் சீக்கி டி.என்.ஏ சேனல் 8,215,092 வ்யூஸ்­களை கொண்­டி­ருக்­கி­றது.


2. வித்யா      

இலங்கை தமி­ழ­ரான வித்யா, ஜெர்­ம­னி­யில் வளர்ந்­த­வர். இரு­பது வரு­டங்­கள் லண்­ட­னில் வாழ்ந்­த­வர் இப்­போது மலே­சி­யா­வில் இருந்து மேக்-­­­அப் கலை­ஞ­ராக இயங்­கிக் கொண்­டி­ருக்­கி­றார். அடிப்­ப­டை­யில், சைக்­கா­லஜி படித்த வித்யா, உண்­மை­யில் தனக்கு அதில் பெரிய ஈடு­பாடு இல்லை என்­பதை உணர்ந்­து­விட்டு, பேஷன் துறை­யில் இறங்­கி­னார். பேஷன் குறித்த பிளாக்­கு­கள் எழு­து­வது, மாட­லிங் செய்­வது என இயங்­கிக் கொண்­டி­ருந்­த­வர், யூடி­யூ­பில் ஹேர் ஸ்டைல், மேக்-­­­அப், புடவை அணி­வது குறித்த டுட்­டோ­ரி­யல் வீடி­யோக்­கள் செய்து கொண்­டி­ருக்­கி­றார்.

அழ­கான தமிழ் மொழி நடை­யால் பார்­வை­யா­ளர்­களை கவ­ரும் வித்யா, தன்­னு­டைய டார்­கெட் ஆடி­யன்­ஸாக இவர் குறிப்­பிட்­டுச் சொல்­வது ‘ஆசிய மக்­களை’. யூடி­யூப் முழுக்­கவே ஏகப்­பட்ட மேக்-­­­அப் டுட்­டோ­ரி­யல்­கள் இருந்­தா­லும், ஆசி­யர்­க­ளுக்கு என தனித்­து­வத்­தோடு இருக்­கும் சேனல்­கள் வெகு குறைவு, அவற்­றில் மிக முக்­கி­ய­மா­னது ‘வித்யா ஹேர் அண்ட் மேக்-­­­அப்’. இவ­ரு­டைய சேனலை சப்ஸ்­கி­ரைப் செய்­தி­ருப்­ப­வர்­கள்  208,683; மொத்த வியூக்­கள் - 24,187,438


3 அனிதா குப்­பு­சாமி

தமி­ழக அள­வில் பிர­ப­ல­மான பெயர்­கள் தான் ‘அனிதா குப்­பு­சாமி’ மற்­றும் ‘புஷ்­ப­வ­னம் குப்­பு­சாமி’. கிரா­மிப் பாடல்­க­ளின் வழியே மக்­களை சென்­ற­டைந்­த­வர்­கள் இவர்­கள் இரு­வ­ரும். இப்­போது அனிதா குப்­பு­சாமி நடத்­தி­வ­ரும் யூடி­யூப் சேனல் ஒரு மில்­லி­யன் அதா­வது 10 லட்ச சப்ஸ்­கி­ரை­பர்­சு­க­ளுக்கு மேல் கொண்­டி­ருக்­கி­றது என்­பது ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கி­றது. இத்­த­னைக்­கும், பிற பிர­பல பாட­கர்­களை போல பிரம்­மாண்ட செல­வில் பாடல் ஆல்­பம்­கள் தயா­ரித்து வெளி­யி­டு­வ­தில்லை. சமை­யல் குறிப்­பு­கள், அழ­குக் குறிப்­பு­கள், தின­சரி உற­வுச் சிக்­கல்­கள், செடி­கள் குறித்­தெல்­லாம் பேசி வீடி­யோக்­கள் வெளி­யிட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார் அனிதா குப்­பு­சாமி. அனிதா குப்­பு­சா­மி­யின் சேன­லுக்கு இருக்­கும் மொத்த வியூக்­கள் 70,220,977.


4.  ஏஞ்­சலா ஸ்டெபி

ஏஞ்­சலா ஸ்டெபி சமை­யற்­கலை பயின்ற நிபு­ணர் எல்­லாம் கிடை­யாது. ஆனால், தமிழ் சமை­யல் சேனல் என்­றாலே எல்­லா­ருக்­கும் உட­ன­டி­யாக நினைவு வரு­வது ஸ்டெபி­யின்’­­மெட்­ராஸ் சமை­யல்’ சேனல் தான். நாகர்­கோ­விலை சேர்ந்த ஸ்டெபி, இன்­ஜி­னி­ய­ரிங் படிப்பை முடித்­து­விட்டு, சில வரு­டங்­கள் தொழில்­நுட்­பத்­து­றை­யில் வேலை செய்­தி­ருக்­கி­றார். பிறகு, திரு­ம­ணம் முடிந்து அமெ­ரிக்கா சென்­ற­வர், கண­வர் அளித்த ஊக்­கத்­தி­னால் தான் யூடி­யூப் சேனல் தொடங்­கி­னார். இன்று 1,618,808 சப்ஸ்­கி­ரை­பர்­க­ளோடு வேக­மாக முன்­னே­றிக் கொண்­டி­ருக்­கி­றது ஸ்டெபி­யின் சேனல். மெட்­ராஸ் சமை­ய­லுக்கு இருக்­கும் மொத்த

வியூக்­கள் 269,909,332.


5. ஷெரின் பானு

கோவை­யைச் சேர்ந்த ஷெரின் பானு, நடத்­தி­வ­ரும் 'ஷெரின்ஸ் கிட்­சன்’ சேன­லும், சமை­யல் விரும்­பி­கள் மத்­தி­யில் பிர­ப­ல­மா­கவே இருக்­கி­றது. எளிய மொழி­ந­டை­யில் இருக்­கும் குறிப்­பு­க­ளோடு வித­வி­த­மான பதார்த்­தங்­களை செய்து தனது யூடி­யூ­பில் பகிர்ந்து வரு­கி­றார். சமை­யல் கலை பயின்ற நிபு­ணர்­க­ளின் தேர்ச்­சி­யோடு இதை கையாள்­கி­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. சமை­யல் மட்­டு­மல்­லா­மல், அழ­குக் குறிப்­பு­க­ளும், கைவி­னைப் பொருட்­க­ளும் செய்து அவற்­றை­யும் யூடி­யூ­பில் பகிர்­கி­றார். 96,079,900 வியூஸ் கொண்­டி­ருக்­கும் ஷெரின்’ஸ் கிச்­சன் சேன­லுக்கு 977,019 சப்ஸ்­கி­ரை­பர்­கள் இருக்­கி­றார்­கள். தொழில்­நுட்ப வளர்ச்­சி­யின் விளை­வால், வாய்ப்­பு­க­ளைத் தேடி நாம் அலைய தேவை­யில்­லாத நிலை இன்று உண்­டா­கி­யி­ருக்­கி­றது. கையில் ஒரு வித்தை இருந்­தால் போதும், அதன் வழியே நமக்­கான எதிர்­கா­லத்தை நாம் உரு­வாக்­கிக் கொள்ள முடி­யும் என்­பது சாட்­சி­யாக நூற்­றுக்­க­ணக்­கான யூடி­யூ­பர்­கள் வளர்ந்து வரு­வதை நாம் பார்த்­துக் கொண்டே இருக்­கி­றோம்.இந்த பட்­டி­யல் அதற்­கான சின்ன சாம்­பிள். இவர்­க­ளின் சாத­னை­கள், வாய்ப்­பு­கள் எதிர்­பார்த்து காக்­தி­ருப்­போ­ருக்கு ஊக்­க­ம­ளிக்­கும் என நம்­பு­கி­றோம்.


Trending Now: