கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 3–10–19

02-10-2019 06:27 PM

ஆப் ஆல் dத வாக்கியங்கள்...!

'ஈவென்ட்ஸ் ஆஃப் 1967' (events of 1967) என்­றால், 1967ல் நடந்த நிகழ்ச்­சி­கள் அல்­லது சம்­ப­வங்­கள் என்று பொருள்.

'ஆஃப் ஆல் dத ஈவென்ட்ஸ் ஆஃப் 1967' (of all the events of 1967) என்­றால், 1967ல் நடந்த அனைத்து நிகழ்ச்­சி­க­ளுக்­குள் என்று பொருள்.

'ஆஃப் ஆல் dத ஈவென்ட்ஸ் ஆஃப் 1967 விச் dடூ யூ ரிமெம்b­­பர்? ' Of all the events of 1967, which do you remember?

ஆஃப் ஆல் த ஈவென்ட்ஸ் ஆஃப் 1967 = 1967ல் நடந்த   சம்­ப­வங்­க­ளில்

விச் (which) – எதை, அல்­லது எவற்றை

dடூ யூ ரிமெம்b­­பர் (do you remember) – நீ நினைவு கொள்­கி­றாய்? அதா­வது, எது உன் நினை­வில் இருக்­கி­றது? அல்­லது எவை உன் நினை­வில் இருக்­கின்­றன.

அதா­வது, 1967ல் நடந்த அனைத்து

சம்­ப­வ­ங்­க­ளில் எது உனக்கு நினைவு இருக்­கி­றது (அல்­லது, எவை உன் நினை­வில்

இருக்­கின்­றன),

வேறு சில உதா­ரண வாக்­கி­யங்­கள்: ஐ ஆம் மோகன்..ஐ லிவ்dட் நியர் யுவர் ஹவஸ்….dடூ யூ ரிமெம்b­­பர் மீ? (I am Mohan..I lived near your house. Do you remember me?) நான் மோகன். உங்­கள் வீட்­டின் அருகே வசித்­தேன். உங்­க­ளுக்கு என்னை நினை­வி­ருக்­கி­றதா?

மீண்­டும், ஆஃப் ஆல் த என்று தொடங்­கும் சில வாக்­கி­யங்­க­ளைப் பார்ப்­போம்.

'ஆஃப் ஆல் த ஈவென்ட்ஸ் இன் 1967, த மோஸ்ட் இம்­பார்­டென் இஸ் தேட் த காங்­கி­ரஸ் லோல்ட் dத ஸ்டேட் எலெ­க்ஷன்ஸ்'. Of all the events in 1967, the most important is that the Congress lost the state elections. 1967ல் நடந்த சம்­ப­வங்­க­ளில் மிக முக்­கி­ய­மா­னது, காங்­கி­ரஸ் மாநில தேர்­தல்­க­ளில் தோற்­றது என்­ப­து­தான்.

ஆஃப்­டர் 1967, நோ நேஷ­னல் பார்ட்டி ஹேஸ் கம் டு பவர் இன் தமிழ் நாடு. After 1967, no national party has come to power in Tamil Nadu. 1967க்குப் பிறகு, எந்­தத் தேசிய கட்­சி­யும் தமிழ் நாட்­டில் ஆட்­சி­யைப் பிடித்­த­தில்லை.

'ஆஃப் ஆல் மை யங்g­­கர் bபிரd­­தர்ஸ்' (Of all my younger brothers) – என்­னு­டைய அனைத்­துத் தம்­பி­க­ளுக்­குள்ளே

'ஆஃப் ஆல் மை யங்g­­கர் bபிரd­­தர்ஸ் ஐ லைக் ராமு dத bபெஸ்ட்' Of all my  younger brothers, I like Ramu the best. என்­னு­டைய எல்லா தம்­பி­க­ளில் எனக்கு ராமுவை மிக­வும் பிடிக்­கும்.

'ஐ லைக் ராமு த பெஸ்ட்' என்­பதை எனக்கு ராமுவை மிக­வும் பிடிக்­கும் என்று உள்ள மொழி­பெ­யர்ப்­பில், 'ஐ லைக்' என்­பது எப்­படி 'எனக்­குப் பிடிக்­கும்' என்று வந்­தது என்று கேட்­க­லாம். ஒரு­மொ­ழி­யி­லி­ருந்து இன்­னொரு மொழிக்கு ஈய­டிச்­சான் காப்பி என்­ப­து­போல் எப்­போ­தும் மாற்ற இய­லாது.

'ஐ லைக் ராமு த பெஸ்ட்' (I like Ramu the best) என்­பதை ஆங்­கி­லத்­தில் உள்ள இலக்­கண வடி­வத்­தைத் தழு­வியே தமி­ழில் பெயர்க்­க­வேண்­டும்

 என்­றால்,

ஐ (I) = நான்

லைக் (like) = விரும்­பு­கி­றேன்

ராமு (Ramu) = ராமுவை

த பெஸ்ட் (the best) =

மிக­வும் (எல்­லோ­ரை­யும் விட) என்­றும் மொழி பெயர்க்­க­லாம்.

ராமு என்று மட்­டும் ஆங்­கி­லத்­தில் உள்­ளது. அது ராமுவை என்று தமி­ழில் எப்­படி மாறி­யது என்று கேட்­க­லாம்? அது அப்­படி ஆன­தற்­குக் கார­ணம், வாக்­கி­யத்­தில் அது செயப்­ப­டுப்­பொ­ரு­ளாக (ஆப்b­­ஜெக்ட்) வந்­தி­ருக்­கி­றது என்­ப­தால்.

இதை இன்­னும் சில வாக்­கி­யங்­க­ளில் பார்ப்­போம்.

'மணி ஹிட் த பால்' Mani hit the ball. மணி பந்தை அடித்­தான். பந்து என்­பது பந்தை என்­றா­கி­விட்­டது.

'ராதா  ரோட் dத எக்­ஸாம்' Radha wrote the exam. ராதா தேர்வை எழு­தி­னாள். தேர்வு என்­பது தேர்வை என்­றா­கி­விட்­டது.

'த சிங்­கர் சாங் த சாங்' The singer sang the song. பாட­கர் பாட­லைப் பாடி­னார். பாடல் என்­பது பாடலை என்­றா­கி­விட்­டது.

'ஐ ஏட் மை லஞ்ச்'. I ate my lunch. நான் மதிய உணவை உண்­டேன். மதிய உணவு என்­பது மதிய உணவை என்று வந்­தி­ருக்­கி­றது.

சில சம­யங்­க­ளில்,  சற்று மாறு­பட்ட மொழி பெயர்ப்­ப­க­ளும் வரும்.

'ஷீ டோல்ட்d அ ஜோக்' She told a joke. அவள் ஒரு ஜோக் அடித்­தாள். ஜோக்கை என்று இந்த வாக்­கி­யத்­தில் வர­வில்லை,

'ஷீ போர்d­­டெட்d dத bபஸ்' She boarded the bus.  இதை. அவள் பஸ்­ஸில் ஏறி­னாள். பஸ்ஸை என்று நாம் மொழி பெயர்க்­க­வில்லை. அவள் பஸ்­ஸைப் பிடித்­தாள் என்­றும் கூற­லாம்.

'ஆஃப் ஆல் dத' என்று தொடங்­கும் இன்­னும் சில வாக்­கி­யங்­க­ளைக் காண்­போம்.

'ஆஃப் ஆல் த சாங்ஸ் கண்­ண­தா­சன் ரோட், மலர்ந்து மல­ராத இஸ் மை ஃபேவ­ரெட்'. Of all the songs Kannadasan wrote, Malarndhu Malaraadha is my favourite. கண்­ண­தா­சன் எழு­திய அனைத்­துப் பாடல்­க­ளில், மலர்ந்து மல­ராத (என்று தொடங்­கும் பாடல்) எனக்கு மிக­வும் பிடித்த பாடல்.

'ஆஃப் ஆல் dத மால்ஸ் இன் சென்னை, dதிஸ் மால் இஸ் த bபிக்­கெஸ்ட்'. Of all the malls in Chennai, this mall is the biggest. சென்­னை­யில் உள்ள எல்லா மால்­க­ளி­லும் இந்த மால் மிக­வும் பெரி­யது.

'ஆஃப் ஆல் dத ஸ்டேட்ஸ் இன் இண்­டியா, தமிழ் நாடு ஸ்டான்ட்ஸ் ஃபர்ஸ்ட் இன் ஆர்g­­கன் டொனே­ஷன்'. Of all the states in India, Tamil Nadu stands first in organ donation. இந்­தி­யா­வில் உள்ள  அனைத்து மாநி­லங்­க­ளில், உடல் உறுப்பு தானத்­தில் தமிழ் நாடு முத­லில் நிற்­கி­றது.

'ஆஃப் ஆல் மை ஃபிரெண்ட்ஸ் ஐ கன்­ஸிd­­டர் யூ tடு bபி j த குலோ­ஸெஸ்ட்'. Of all my friends, I consider you to be the closest. என்­னு­டைய எல்லா நண்­பர்­க­ளி­லும், நீ தான் எனக்கு மிக நெருக்­க­மா­ன­வன் என்று நான் கரு­து­கி­றேன்.

'ஆஃப் ஆல் த டேஸ் ஆஃப் த வீக், மோஸ்ட் பீபில் லைக் ஸாடர்டே த பெஸ்ட்'. Of all the days of the week, some people like Saturday the best. வாரத்­தில் உள்ள எல்லா நாட்­க­ளி­லி­லும், பல­ருக்கு சனிக்­கி­ழ­மை­தான் அதி­கம் பிடிக்­கும்.

'பார­தி­யார் ஸைட் தேட் ஆஃப் ஆல் த லாங்­கு­வே­ஜெஸ் ஹீ நியூ, டாமில் இஸ் த ஸ்வீடெஸ்ட்'. Bharatiar said that of all the languages he knew, Tamil is the sweetest. தனக்­குத் தெரிந்த அனைத்து மொழி­க­ளில், தமிழ் மொழி­தான் மிக­வும் இனி­மை­யா­னது என்று பார­தி­யார் கூறி­னார்.

உண்­மை­தான். ஆனால் நாம் எப்­போ­தும் இனி­மை­யா­கப் பேச­வேண்­டும் என்­றும் திரு­வள்­ளு­வர் கூறி­னார். திரு­வள்­ளு­வர் ஆஸ்க்dட் அஸ் டு ஆல்­வேஸ் ஸ்பீக் ஸ்வீட்லி. Tiruvalluvar asked us to always speak sweetly.

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in

Trending Now: