காமெ­டி­யாக சீரி­யஸ் மேட்­டர்!

02-10-2019 06:08 PM


அர­சி­யல் நிகழ்­வு­கள், நாட்­டில் நடக்­கும் சம்­ப­வங்­கள் குறித்து மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வு இருக்­கி­றதா என்­பதை நேர­டி­யாக மக்­க­ளின் கருத்தை கேட்டு  மக்­க­ளின் குர­லா­கவே நகைச்­சுவை கலந்து ஒலிக்­கும் நிகழ்ச்சி ‘மைக் மாயாண்டி’. ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் காலை 8.30 மணிக்­கும் இதன் மறு ஒளி­ப­ரப்பு மாலை 6.30 மணிக்­கும் சத்­தி­யம் டிவி­யில் ஒளி­ப­ரப்­பா­கும் இந்த நிகழ்ச்­சியை கேசவ் பாண்­டி­யன் தொகுத்து வழங்­கு­கி­றார்.

எதை­யுமே கொஞ்­சம் காமெடி கலந்து சொன்­னால் கருத்­துக்­கள் சுல­ப­மாக மக்­களை சென்­ற­டை­யும் என்­பது பொது­வான கருத்து. இந்த நிகழ்ச்­சி­யில் ஒரு சமூக பிரச்­னையை நையாண்­டித்­த­ன­மாக சொல்­கி­றார்­கள்.Trending Now: