அற்புதங்களை அருளும் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்!

30-09-2019 06:27 PM

தன்னை அறிந்­த­வர்கள், சித்தர்கள். தன்­னுள் இருக்கும் யோக சக்­தி­களை விழிப்­பு­­றச் செய்­த­வர்கள் அவர்கள். அந்த சக்­திகள் மூலம் மக்­க­ளுக்கு பல்­வேறு நன்­­மை­களை அவர்கள் வழங்கி வரு­கின்­றனர். சித்தம் முழு­வதும் சிவ­ம­ய­மாக வாழும் சித்­தர்கள், ஏழைப் பங்­கா­ளர்கள். வாழ வழி­யின்றி திக்­கற்ற நிலை­யில் தவிப்­ப­வர்­க­ளுக்கு திசை காட்­டு­ப­வர்கள். அத்த­கைய சித்­தர்­களில் ஒருவர்தான், மாயாண்டி சுவா­மி­கள்.

மாயாண்டி சுவா­மிகள் கட்­டிக்­கு­ளத்தில் அவ­த­ரித்­தவர். இவ­ரது காலம் கி.பி.1858–1930 ஆகும். இவ­ரது தந்தை குப்­ப­முத்து வேளா­ர் உள்ளூர் அய்­ய­னார் கோயிலில் பூசா­ரி­யாக இருந்தார். சூட்­டுக்கோல் ராம­லிங்க சுவா­மியின் அருளால் அவ­த­ரித்­தவர், மாயாண்டி சுவா­மிகள். சிறு ­வ­ய­து முதல் மாயாண்டி சுவா­மி­களுக்கு சைவ சித்­தாந்­தத்தின் மீது நாட்டம் இருந்­தது. பள்­ளிப்­ப­டிப்பு, ஆன்­மிகத் தேடல் என அவ­ரது வாழ்க்கை சென்­றது. பரம்­பரை வைத்­தி­யச் ­சு­வ­டிகள், சித்தர் நூல்­களை ஆர்­வத்­துடன் கற்­றார்.

இல்லற வாழ்க்­கையைத் துறந்து செல்­லப்ப சுவாமி­க­ளிடம் தீட்சை பெற்று துற­வறம் பூண்­டார் மாயாண்டி சுவா­மிகள். இறை­யு­ணர்­வுடன் பல்­வேறு திருத்­த­லங்­க­ளுக்கும் சென்றார். திருக்­கூ­டல்­ம­லை எனப்­படும் காக­பு­­சுண்டர் மலை அவரை ஈர்த்­த­து. அந்த மலையில் உலவும் சித்­தர்­க­ளுடன் அவர் பேசினார். அந்த மலையை தனது நிரந்­தர வசிப்­பி­ட­மாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவ­ருக்கு உரு­வா­ன­து. மாயாண்டி சுவா­மிகள் தனது வாழ்க்­கையில் நிகழ்த்­திய அற்­பு­தங்கள் ஏரா­ளம்.

ரயிலில் பயணம் செய்து கொண்­டி­ருந்த மாயாண்டி சுவா­மி­களை அலு­வலர் ஒருவர் நடு­வ­ழியில் இறக்கி விட்டார். சுவா­மி­களும் புன்­ன­­கை­யுடன் அதே பகு­தியில் இருந்த மரத்தின் அடி­யில் அமர்ந்து தவம் செய்யத் துவங்­கினார். அதற்குப் பின், ரயில் அங்­கி­ருந்து நகர முடி­ய­வில்லை. சுவா­மிகளின் சக்­தியை உணர்ந்து அலு­வலர் மன்­னிப்பு கேட்டார். சுவா­மிகளை மீண்டும் ஏற்­றி­யதும் புறப்­பட்டுச் சென்­றது ரயில்.

ஊர்­ஊ­ராகச் சென்­ற­ சுவாமி­க­ள் மக்­களின் குறை­க­­ளைத் தீர்க்கும் வகையில் அருள் ­வாக்­கு­களை கூறி வந்தார். அவர் கூறிய அருள் வாக்­குகள் அப்­ப­டி­யே பலித்­தன. அவரால் பல­ரது பிணிகள் நீங்­கின. சில­ருக்கு வாழ்வு நீட்­டி­க்­கப்­பட்­டது. திரு­மண வாழ்க்­கைக்கு ஏங்கிய பலர் சுவா­மிகளின் தரி­ச­னத்­திற்குப் பின் திரு­ம­ணக்­கோலம் பூண்­டனர். தன்னை சந்­திக்கும் மக்­க­ளு­க்கு அன்பை வாரி வழங்கும் இயல்பு கொண்­டவர் மாயாண்டி சுவாமிகள்.

 தனது சித்து விளை­ யாட்­டுக்­களால் பல­ரையும் குதூ­க­லப்­ப­டுத்­து­ வது அவ­ரது இயல்­பு. தன்னைச் சுற்றி நிற்கும் குழந்­தை­க­ளுக்கு ஒரு பிடி மணலை அள்ளி கையில் கொடுப்பார் சுவா­மிகள். ''என்ன சாமி, மணலைத் தர்­றீங்க... மிட்டாய் தர மாட்­டீங்­களா?'' என குழந்­தைகள் ஏக்­கத்­துடன் கேட்கும் போது சுவா­மிகள் புன்­ன­கைப்பார். ''அப்பு, உன் கையைத் திறந்து பாரு... உன் மன­சுல என்ன இருக்கோ, அது இருக்கும்" என்பார். குழந்­தைகள் கையைத் திறந்து பார்த்தால் அவர்­களின் கையில் மிட்டாய், தின்­பண்டம் இருக்­கும்.

 காகங்­களின் இறக்­கை­களை தனது சித்து வேலையில் கட்டிப் போட்­டது, நரி­களை விரட்­டி­யது, பாம்­புக்கு உயிர் கொடுத்­தது, நீரின் மேல் நடந்­தது, தண்­ணீரில் விளக்கு ஏற்றி­யது, மண்ணால் ரொட்டி சுட்­டது, திரு­டர்­களை திருத்­தி­யது என சுவாமிகள் நிகழ்­த்­திய அற்­பு­தங்கள் ஏராளம். அக்­கா­லத்தில் அவரது அருளால் பலரும் அரிய வரங்­களைப் பெற்­றனர். நாடி வரு­ப­வர்­களை தனது சூட்­டுக்­கோலால் பரி­சோ­திப்­பது அவ­ரது குணம். இறை­சக்­தி­யின் வடி­வமாக அவரை உணர்ந்து மக்கள் வழி­படத் துவங்­கினர். குறை­வில்­லாத வாழ்க்­கையை அவர்கள் வாழ்ந்­தனர்.

 ஆழ்­வார்­தி­ரு­ந­க­ரி­யில்  மாயாண்டி சுவா­மி­களின் கரு­ணைப்­பார்வை, ஆழ்­வார்­தி­ரு­ந­கரி மீது இருந்­தது. அங்­கு செல்வ சுந்­தர விநா­யகர் கோயில், அம்மன் கோயிலை சுவா­மிகள் பிர­திஷ்டை செய்தார். ஆழ்­வார்­தி­ரு­ந­க­ரியில் சுவா­மிகள்  தினமும் வீடு வீடாகச் சென்று அன்­னக்­கா­வடி மூலம்  உணவை தானம் பெற்று வந்தார். திருச்­செந்தூர் முருகன் கோயிலுக்கு நடைப்­ப­யணம் செல்லும் பக்­தர்­க­ளுக்கு அவர் உணவை வழங்­குவார். சுவா­மியின் கைபட்­டதால் அந்த உணவு அப்­போதுதான் சமைத்­தது போல ஆவி பறந்த­படி இருக்­கு­ம்.

 ஆழ்­வார்­தி­ரு­ந­க­ரிக்கு வந்த ஆங்­கி­லேய அதி­கா­ரியின் வயிற்­று­ வ­லியை தனது அருளால் போக்­கினார் சுவா­மி­கள். திருச்­செந்தூர் பக்தர் ஒரு­வ­ருக்கு ஒரு துண்டு மூலம் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்­தது, தென்   ­தி­ருப்­பே­ரையில் ஏழ்­­மையில் தவித்த தச்­சுத்­தொ­ழி­லாளிக்கு சமை­ய­லுக்கு வேண்­டிய பொருட்­களை தெய்­வீக சக்­தியால் வர­வ­­ழைத்துக் கொடுத்­தது, கருங்­கு­ளத்தில் ஒரு­வரின் மன­நோயை நீக்­கி­ய­­து என சுவா­மிகள் நிகழ்­த்­திய திரு­வி­ளை­யாட்­டுக்கள் ஏரா­ளம். சுவா­மி­­களின் புகழ் பர்­மா­விற்கும் பர­வி­யுள்­ள­து.

  ஆழ்­வார்­தி­­ரு­ந­க­ரியில் மாயாண்டி சுவா­மி­கள் மடா­லயம் உள்­­ளது. அங்கு சுவா­மி­களை மன­தார வணங்­கு­ப­வர்­க­ளுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்­கின்­றன. மடா­ல­யத்தில் ஆண்­டு­தோறும் புர­ட்­டா­சி மாதம், கேட்டை நட்­சத்­திர நாளில் சுவா­மி­களின் குரு ­பூ­­ஜை விழா, ஆடி மாதம் பூராட நட்­சத்­திர நாளில் ‘அவ­தார தினம்’ கொண்­டா­டப்­ப­டு­கி­றது. இந்த ஆண்டு 89வது  குரு­பூஜை விழா இம்மாதம் வருகிற 4ம் தேதி நடக்­கி­ற­து.

 சித்­தர்கள் கால எல்­லையைக் கடந்­து அரு­ளாசி வழங்­கு­ப­வர்கள். மாயாண்டி சுவா­மி­களின் அருளைப் பெற குரு­பூஜை நாளில் ஆழ்­வார்­தி­ரு­ந­கரி செல்­வோம்.

தொடர்­புக்­கு: 94878 98346.

– ராம்Trending Now: