பாவத்தொழில் வேண்டாமே!

30-09-2019 06:21 PM

கடத்தல்காரன் ஒருவன் போதை மருந்தை புகையிலைக்குள் பொதித்து விற்பான். ஒரு முறை படகில் போதை மருந்தை கடத்த முயன்றான். நடுக்கடலில் காவலர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து தப்ப பாய்மரத்தை விரித்தான். அதன் மறைவில் அவனும், பணியாட்களும் போதை பொட்டலங்களை கடலில் வீசினர். படகில் ஒன்றுமில்லை எனச் சொல்லி தப்பலாம் என்பது அவனது திட்டம்.

எல்லாவற்றையும் வீசியபின், பாய் மரத்தை சுருட்டினான். அதிகாரிகள் அவனது படகில் புகுந்து கைது செய்தனர். ‘’படகில் ஒன்றுமில்லையே! ஏன் கைது செய்கிறீர்கள்?’’என்றான்.

ஒரு அதிகாரி,’’ஒன்றுமில்லை என்பது உண்மைதான். ஆனால் பின்னால் திரும்பிப் பார். நீ வீசிய போதை மருந்து பெட்டிகள் கடலில் மிதப்பதை’’ என்றார்.

“பாவிகளை தீவினை தொடரும்” என்றொரு வசனம் உண்டு. பாவத்தொழில் புரியும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்றாவது தண்டனை கிடைத்தே தீரும்.

Trending Now: